தைராய்டினால் முடி கொட்டுது,உடல் எடை கூடுது எதாவது சொல்லுங்களே ப்ரண்ட்ஸ்..

எனக்கு தைராய்டு பிரச்சினை இருக்கு,மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைஎடுத்துக் கொண்டுதான் இருக்கேன் 1 வருடமா...கடந்த 7 மாதமா முடி அதிகமா கொட்டுது ,முடி கொட்டாமல் நிற்க எதாவது மருந்து அல்லது வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்க தோழிகளே .முடி கொட்டுவது நிற்கவே நிற்காதா???? உடல் எடை வேற கூடிக்கொண்டே போய்க்கிட்டே இருக்கு...எதாவது வழி சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...

-

சங்கரிலதா, வனி சொன்ன தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்பறேன். அவங்க சொன்னது போலவே செய்யுங்க. பிரசவகாலத்தை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. சத்தான உணவா சாப்ட்டு மனசை சந்தோஷமா வச்சிருங்க. . சுக பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா............

தைராய்டு தான் இன்று பெரிய ப்ரச்சனை .எனக்கும் தைராய்டு இருக்கிரது.ஆனால் குழந்தை பிறந்த பின்னர் நான் மாத்திரை எடுப்பதை நிருத்தி விட்டேன்.இதனால் எதும் பக்க விளைவுகள் வருமா நு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

இரண்டு நாள் முன் ஹாஸ்பிட்டலில் படித்தேன் தைராய்டுக்கு சரியான அளவு மாத்திரை எடுக்காவிட்டால் முடி கொட்டும்,மூச்சி திணறல் வரும் மாரடைப்பு கூடவரவாய்ப்பு உள்ளது.ஆகவே கவனமா இருங்க பா........................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

//தைராய்டுக்கு மாத்திரை எடுத்தால் உடல் எடை கூடித்தான் போகும்.// ஹா கல்ப்ஸ்!!!! ம்.. ஆளாளுக்கு ஒரு விதமோ! எனக்கு எதிர்மாறு. மாத்திரை எடுக்க ஆரம்பித்த பின்னால் எடை குறைந்து அளவாகி இருக்கு. //தலை முடி கொட்டுவது // குறைஞ்சு.. கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவுக்கு ஆகியாச்சு.

//சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரிடமே முடி கொட்டுவதற்கான தீர்வையும் கேட்டு// அதுதான் சரி என்று எனக்கும் தோன்றுகிறது. காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

//தைராய்டு தான் இன்று பெரிய ப்ரச்சனை// அப்படியெல்லாம் இல்லைங்க. எதுவானாலும் சரியான சமயத்துல கண்டுபிடிச்சிட்டா.. அதுக்கேற்ற மாதிரி ஏதாவது செய்யலாம். தைராய்ட் அந்த விதத்தில் பிரச்சினை குறைவான பிரச்சினை. அது இருக்கு என்று கண்டுபிடிக்கிறதுக்குத்தான் சமயம் வரணும்.

//இதனால் எதும் பக்க விளைவுகள் வருமா// ஆரம்பத்துலயே பிரச்சினை இருக்கப் போய்த்தானே டாப்லட் எடுத்தீங்க? இப்போ விட்டால் எப்படி? புதுசா ஒன்றும் வராவிட்டாலும் அதே பழைய பிரச்சினைகள் திரும்ப எட்டிப் பார்க்கும் இல்லையா? டாப்லட் ஒழுங்கா போடுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்