மன அழுத்தத்தில் உள்ளேன்

என் வீட்டில் என் கணவரும் நானும் மட்டும் தான் சமீபகாலமாய் என் தந்தைக்கு உடம்பு சரி இல்லாததினால் எங்களுடன் இருக்கிறார். என் கணவர் திருமணம் ஆன நாளில் இருந்து என்னுடன் ஒரு நாள் கூட சந்தோசமாய் இருந்ததில்லை எனக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் தான் ஆகிறது. காதலிக்கும்போது எனக்கு எதாவது என்றால் கவலை படுவார். ஆனால் இப்பொழுது எனக்கு எது என்றாலும் ஒரு வார்த்தை கூட கேட்க்க மாட்டேன்கிறார். நான் இரவில் கவலையினால் சாப்பிடாமல் இருப்பேன் ஏன் சாப்பிடவில்லை என்று ஏதும் கேட்க மாட்டார் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம் எனக்கு Sunday government holiday எல்லாம் லீவு இருக்கிறது ஆனால் அவருக்கு லீவே இல்லை அவராக எடுத்தால் தான் உண்டு. ஆனால் இது வரை அவர் என்னை 3 முறை தான் வெளியில் கூட்டி சென்றுக்கிறார் அதுவும் நானாக கட்டாய படுத்தினதால். ஒரு நாள் கூட என்னுடன் சந்தோசமாக சிரித்து பேசியதில்லை நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார் என் மீது எதாவது தவறு இருகிறதா என்று கேட்டால் இல்லை என்கிறார். அவர் வீட்டில் எது நடந்தாலும் என்னிடம் சொல்வது இல்லை என் அண்ணனிடம் தான் சொல்கிறார். என் அண்ணன் கேரளாவில் வேலை செய்கிறான். நான் பிணம் போல் நடமாடி கொண்டு இருக்கிறேன் வேலை வீடு இது மட்டும் என் உலக மாகி விட்டது. நான் அவரிடம் அதிகம் எதிர் பார்கிறேன் என்று சொல்கிறார் தினமும் நான் அழாத நாளே இல்லை. எனக்கு அம்மா இல்லை. யாரும் என் உணர்வுகளை புரிந்து கொள்வது இல்லை. கணவருடன் சந்தோசமாக வழ வேண்டும் என்று நினைப்பது தவறா அவரை மாற்ற நினைத்து தோற்றுவிட்டேன். இதை நினைத்து எனக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது நாளை எனக்கு எது நடந்தாலும் எனகென்று யாரும் இல்லை. நான் என்ன செய்வது உதவுங்கள் தோழிகளே

கவலைப்படாதீங்க. சில பேருக்கு இப்படித்தான் சர்ப்ரைஸா இருக்கும் திருமணவாழ்வு. நிச்சயமா மாற்றலாம். தோழிகள் வருவாங்க அற்புதமான ஆலோசனைகளோட.

//கணவருடன் சந்தோசமாக வழ வேண்டும் என்று நினைப்பது தவறா அவரை மாற்ற நினைத்து தோற்றுவிட்டேன்///

6 மாசத்திலேயே புரிதலில் தோல்வியா?இப்படியெல்லாம் மனம் தளரக்கூடாது. நீங்க சந்தோசமா இருக்க நினைப்பதில் என்ன தவறு ? . இது மனசோர்வுதான்.

இதெல்லாம் முயற்சி செய்து பாருங்க.

கட்டாய விடுப்பு எடுத்து இருவரும் 1 வாரம் வெளியே சுற்றுலா சென்று வரலாம்

உங்க அப்பாவை உடன் வைத்திருப்பது அவருக்கு சம்மதம் இல்லையா என்பதை கண்டறியுங்க.

யாரும் துணை இல்லைன்றீங்க . ஃபேமிலிகவுன்சிலிங் கூட போலாம். நிச்சயம் பிரட்சனையை பெரிதாக்காமல் அதை தீர்க்க உதவும் அவரை அழைத்துசெல்ல தயக்கம் அல்லது அவர் வரமறுக்கும் போதோ நீங்கள் மட்டும் சென்று ஃபேமிலி கவுன்சிலரைப்பாருங்கள். அவங்க வழிகாட்டுதல் பேரில் நடங்கள்.

இதே ஸ்ட்ரஸூடன் நீங்கள் இருந்தால் வரும் காலங்களில் குழந்தை பாக்கியத்தை பாதிக்கும்.

இன்னும் நேரம் கிடைக்கையில் வரேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

sangeetha kavalaipadaatheenga, new couples purinjukka 6 month time edukkum. but neenga love marrige vera. unga anna kitta solli 2 perum manam vittu pesunga. ethavathu officce problem mnu kelunga,
manasa thalara veedaatheenga..

சங்கீ கவலபடாதே. உன் பதிவை படிக்கும் போதே எனக்கு அழுகை வந்து விட்டது. எனக்கும் அம்மா இல்லை. நானும் குழந்தைக்கு காத்திருக்கிரேன். அம்மா மாறி வேறு எந்த உறவும் இந்த சமயத்தில் நமக்கு ஆறுதல் இல்லை. அவரே இல்லை எனும் போது அது எவ்வளவு கொடுமை என அனுபவிப்பவர்கே தெரியும். சங்கி அழுது அழுது மறுத்து போனதால் சொல்கிறேன் அழாதே அழுது எதுவும் நடக்காது. கவலையே ஹார்மோன் பாதித்து கருதரிப்பை தாமதபடுத்தும். நல்ல சூழ்நிலையில் உன் கனவரிடம் மனம் விட்டு பேசு. அவர் மனசில் என்ன கஷ்டமோ? இருவரும் மனம் விட்டு பேசினாலே கவலை தீரும். அமைதியாகவே இரு. நல்ல புத்தகம், பாட்டு கேட்கலாம். தோழி காயமெல்லாம் காலப்போக்கில் மறந்து போகும் மாயங்கல்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

don,t worry da,marriage ana pudusule kanavanmargal thanimaiyil wifekuda irukanumnu aasai paduvanga,athileyum neenga love marriagenu solli irukinga?so niraya aasai kanavu irundirukum,ungal appa ungaludan irupathinale avaru uncomfortable ah feel panalam.epavume wifekuda CONTACTLE irukanumnu nenaipanga.neenga appavai vida husbandku importance jasti kudunga.appa purinjipaar.athukaga avarai kavanika vendamnu sollalai.irundalum neenga sandhoshama irukuratha parthale appavuku half gunamagidum.husbandku pudicha samaiyal,pudicha dress apadi ipadinu konjam seiyunga.appavai vida neenga thn mukiyamnu avaruku puriya veiyunga.ammavum illathathale appamela paasam jasthiya than irukum.athanale ena first husbanda kavaninga,apuram appava parthukonga.work panratha solli irundinga,so irukurathu konjam time,ithule neenga kashtapathu pesama sirikama time waste panidathinga.epavum wife palichinu siricha mugamoda irukuratha parkum pothu avar sandhoshamagiduvar.unga amma irundalum ithaiye than solli irupanga da.so cheer up.don't worry.be happi.best of luck dear.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

ethu nadandhalum azhuvuratha first control panunga.nanum apadi than ethu nadanthalum azhidite irupen,enga amma thitithiti ipo knjam paravale?nama azhuvurathale,sapidama irukurathale avaruku kobam jasthi agume thavira kuraiyadhu.enaku kalyanam ana pudusule kuda ithe problem than.epavum frnds kuda iruparu,ena ethu kuda parka matar,nan waste panna mathiri neengalum inda marriage ana 1 year waste panathinga,neenga ipadi irukurathu pregnancya thadukum.so ini nan sonna inda ideava follow panunga,vazhkai vasanthamaga malara vazhthukal penne!

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வித்யா அக்கா

என் அப்பா இப்போ 1 மாதமா தான் இருக்கிறார் ஆனால் என் கணவர் ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் நான் சாப்பிடாமல் இருந்தால் அதை பற்றி கவலை பட மாட்டார் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்க மாட்டார் சில சமயம் பிரிந்து விடலாம் என்று தோன்றுகிறது அவரிடம் மனம் திறந்து எல்லாவற்றும் சொல்லி விட்டேன் ஆனால் பலன் இல்லை

அன்பு தோழி நீங்க மனச தளர விடாதிங்க .... உங்க கணவருக்கு வேலை பளு கூட இருக்கலாம் ....அவர மாத்த நீங்க முயச்சி எடுங்க... அவருக்கு சின்ன சின்ன gift வங்கி கொடுங்க.. valentine's day கூட வருது .. அபோ அவருக்கு surprise கொடுங்க... அவருக்கு பிடித்த சமையல் செய்து கொடுங்க... அவர் வேலை சுமையெல்லாம் உங்களால அவர் மறக்கணும் ... அது உங்களால முடியும்... முதல்ல நீங்க அழாம இருங்க... பொதுவா எல்லா ஆண்களுக்கும் மனைவி அழுதா பிடிக்காது ... வீட்டுக்கு வரும் பொது சிரித்த முகதூட வரவேற்று பாருங்க...அப்போ அப்போ மலரும் நினைவுகள நீங்க லவ் பண்ணினப்போ நடந்த இனிய சம்பவங்கள பேசி உங்க லவ் ஐ refresh பண்ணுங்க .... கொஞ்ச கொஞ்சமா முனேற்றம் தெரியும் .. அப்போ அவர் கிட்ட மனசு விட்டு பேசுங்க.. கண்டிப்பா புரிஞ்சுப்பார் ... நிச்சயம் உங்களுக்கு நன்மை அமைய என் வாழ்த்துக்கள்.... நீங்க என் பேரிலேயே இருப்பதால் ஒரு பாசத்தில் எழுதி இருக்கேன் ... வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

இதுவரை நீங்கள் சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். என் சித்திக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எங்கள் நடுவில் பிரச்சனை என்று தெரியும் அளவுக்கு அவர் நடந்து கொண்டார். நாங்கள் அனைவரையும் வைத்து பேச வேண்டிய சூழல் வந்து விட்டது என் மீது அவர் கூறும் தவறு நான் கோப படுகிறேன் என்று நானும் உங்களிடம் சொன்ன அனைத்தும் சொன்னேன். அவர்களும் எனக்கும் அவருக்கும் புத்தி சொன்னார்கள் நானும் எது நடந்தாலும் கோப படாமல் அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறேன். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை திடீர் என்று காரணம் இல்லாமல் என்னிடம் பேசாமல் இருக்கிறார். நான் காரணம் கேட்டால் ஏதும் சொல்ல மாட்டேன்கிறார் 2 3 நாள் கழித்து அவராகவே வந்து பேசுகிறார் பேசாமல் இருந்த காரணத்தை சொல்ல மாட்டேன்கிறார் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. செத்து விடலாம் என்று அடிகடி தோன்றுகிறது நான் என்ன செய்வது எங்கள் ஊரில் ஃபேமிலிகவுன்சிலிங் வசதி இல்லை நான் என்ன செய்வது

Hi sangeetha
Varutha padathiga pa porumaya iruga. jayanthi sonna mathiri one week leave pottu velila poga, unga husband pesama irunthalum atha perusa eduthukama nega eppavum pola sirichi pesuga.

enaku marriage agi three months than aguthu enaku arranged marriage than. arranged marriage nala than ennala ennudaya husband purinchikka mudiyala nu nenachen, anal neraya per intha prachanaila than irukaga nu unga msg pathu therinchukitten. unga husband pesamatraga ennudaya husband open na solliduvaga. neraya thadava enna pudikalanu sollirukaga naan udane aluthuduven appavum thittikitte irupaga. Ippolam avaga ethu sonnalum naan alarathu illa ethukuna avagaluku aluthale pudikathunu therinchukitten. After engagement naga phone la pesuvom appo oru sila visiyagal pudikathu solliruthen athellam ippo seivaga, naan avagala ethuvum solrathu illa pa.
naan oru sila neram ennada valkai nu nenachuruken vittu poidalamanu nu kuda nenachuruken.

apparam thaniya irunthu yosikum pothu than therium namma husband nammala vitta vera yaru irukanu, namma life 3 months and one year kidayathu innum romba varusham onna vazhanum athukaga porumaya irunthal onnum thappu illanu yosichi avaga ethu sonnalum manasulaye vachipen. ithuvaraikum naan yarkittaum naan sonnathe illa.

kastapadathiga unga prachanaya kadavul solluga avaga kandipa help pannuvaga.

tuesday tuesday durgai ku velakku yethuga.

by jayasree

Don't worry Sangeetha. You are a love marriage couple. My words reflect from your words. I think he is a lovable person. Thats why he talk to you. otherwise the way he speak is too different. Always his face is not angry. That means he try to forget some thing. Thats why he avoids you.
Don't worry sangee. He loves you. Gents are so reserved. He can't express anything easily. So you don't worry.
Now your father is sick. you help him, because of love. do you need anything from him against your help?
No... right
Then why are you expect from your husband, because he is also in different type of sick, but he loves you. Don't forget he loves you.
Don't expect anything from him, including love. Serve for him. He realize and tell the reason why he is like this.
Marriage is a wonderful diamond. more expectation will loose everything.

Love him.... Love him more... If you are a great mother to your husband. God give a child to you.
calm down and love him.

All the best. Be happy

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்