வேலண்டைன்ஸ் டே கார்டு - 2

தேதி: February 9, 2013

5
Average: 4.8 (5 votes)

 

கார்ட் ஸ்டாக் பேப்பர் - ரோஸ் மற்றும் நீலம் (அ) விரும்பிய நிறங்கள்
இதய வடிவ ஸ்டிக்கர்ஸ்
கத்திரிக்கோல்
ஸ்கேல்
க்ளூ

 

கார்ட் ஸ்டாக் பேப்பரில் ரோஸ் நிறத்தில் 2, நீல நிறத்தில் 2 எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
ஒரு ரோஸ் நிற பேப்பரையும், ஒரு நீல நிற பேப்பரையும் எடுத்து, மேலும், கீழும் அரை வட்டங்கள் வரைந்து கொள்ளவும். இரண்டு அரை வட்டத்தையும் கோடுகளால் இணைக்கவும். பிறகு படத்தில் இருப்பது போல் அளவு சரிபார்த்து கோடுகள் வரைந்து கொள்ளவும். இரண்டு பேப்பர்களிலும் இதுபோல் வரைந்து அதனை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி எடுத்த இரண்டு பேப்பர்களிலும், மேலிருந்து கீழாக வரைந்த கோடுகளை மட்டும் வெட்டவும். ரோஸ் நிற பேப்பரை மட்டும் படத்தில் உள்ளதுபோல் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
ரோஸ் பேப்பரை நீல பேப்பருக்குள் படத்தில் உள்ளது மேல் பக்கமாகவும், அடிப்பக்கமாகவும் மாற்றி மாற்றி நுழைத்து விடவும். (வீவிங் (Weaving) செய்வது போல் செய்யவும்).
ஓரங்களில் பேப்பரின் முனைகளை ஒட்டி விடவும். நீல பேப்பரை இரண்டாக மடித்தால் இதய வடிவில் வாழ்த்து அட்டை கிடைக்கும்.
மற்ற இரண்டு பேப்பர்களை எடுத்து இதய வடிவில் வெட்டி, செய்து வைத்துள்ள வாழ்த்து அட்டையின் உள்பக்கம், பக்கத்திற்கு ஒன்றாக ஒட்டவும்.
பிறகு ஸ்டிக்கர்ஸ் ஒட்டி அலங்கரிக்கவும். வேலண்டைன்ஸ் டே வாழ்த்து அட்டை தயார்.
ஒரு சிறிய நீல நிற பேப்பரில் படத்தில் உள்ளது போல மடித்து, உள்ளே இரண்டு பகுதிகள் இருப்பது போல செய்து ஒட்டவும். அந்த பேப்பர் துண்டை வாழ்த்து அட்டையின் உள்பக்கம் ரோஸ் நிற பேப்பரின் ஓரத்தில் ஒட்டவும்.
அதில் ஒரு பகுதியில் சாக்லேட், ஒரு பகுதியில் பூக்கள் வைத்து அலங்கரிக்கவும்.
வாழ்த்து அட்டையை இதுபோல் செய்து மேசையில் அழகுக்காகவும் வைக்கலாம். 2 இன் 1 கார்டு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகு :) பூக்களும், கலர் காம்பினேஷனும் சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப அழகுப்பா,ஈஸியாவும் இருக்கு ........வாழ்த்துக்கள்.....

குறிப்பை வெளியட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :) முகப்பு படத்தில் சிறிய மாற்றம் இருப்பதாக தெரிகிறது.இதும் நன்றாகத்தான் இருக்கிறது :)

Kalai

வனிதா அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

Kalai

பதிவிற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரேணு :)

Kalai

சூப்பர் கலா. சீசனல் க்ராஃப்ட் ஆக போட்டு தாக்குறீங்க.
ஃபெல்ட்டில் இதே முறையில் க்றிஸ்மஸ் ட்ரீ டெகரேஷன்ஸ் செய்வோம். கார்ட் செய்யலாம் எனேறு நினைத்ததே இல்லை. அழகாக இருக்கிறது கார்ட். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

Super nice creativity......
Vazhthukkkal kala .....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப சூப்பர்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலா அக்கா வேலண்டைன்ஸ் டே கார்டு - 2 இதய வடிவில் அழகா இருக்கு பூக்களின் நிறங்கள் அருமை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பாராட்டிற்கு மிக்க நன்றி இமா ஆன்டி :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

வாழ்த்துக்கு மிக்க நன்றி முஹசீனா :)

Kalai

மிக்க நன்றி கனி :)

Kalai

கலா,

வாலன்டைன்ஸ் டே கார்ட் ரொம்ப அழகா இருக்கு! ;‍) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்துக்கு மிக்க நன்றி சுஸ்ரீ :)

Kalai

வேலண்டைன்ஸ் டே வாழ்த்து அட்டை Super

hi sis,
i already know this card... and i also tried and gifted to my hubby...