அன்பு தோழிகளே எனது சந்தேகத்திற்கு விளக்கமளியுங்கள்

எனது முகத்தில் பரு மற்றும் அம்மையால் வந்த குழிகள் அதிகமாக உள்ளது,இதற்கு Laser or Chemical Peel Creamஎதற்கு அதிகமான செலவு ஆகும்,Chickenpox குழிகளுக்கு chemical creamஇருக்கிறதா?Laser or chemical creamஅதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கூற முடியுமா?உதவுங்கள் தோழிகளே

anybody reply me

MEDERMA என்ற ஆய்ன்மென்ட் உள்ளது.அதன் விலை 300 ரூபாய். ஆனால் அது அம்மை குழிகளுக்கு உள்ளது அல்ல. அது உடம்பில் தையல் போட்டால் ஏற்படும் தழும்புகளை மறைக்க பயன்படுகிறது. அதை வாங்கி உங்கள் முகத்தின் குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்திப்பாருங்கள்..

நீங்கள் தோல் மருத்துவரிடம் சென்றீர்களா?

அன்பு தோழி,
பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி,இல்லைப்பா நான் மருத்துவரிடம் இன்னும் போக வில்லை,என்னுடைய ஊர் சங்கரன்கோவில்,இந்த ஊரில் பெரிதாக தோல் மருத்துவர் யாரும் இல்லை,என்ன செய்வது என்று தெரியவில்லை,தயவு செய்து உதவுங்கள் தோழி

மஞ்சு, இந்த தளம் பெண்களுக்கு மட்டுமா? நான் ஆண்..

கருத்து தெரிவிக்க பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை,நல்ல பதிவுகளை இந்ததளத்தில் யார் வேண்டுமானாலும் குடுக்கலாம்

மேலும் சில பதிவுகள்