அகத்திக்கீரை சொதி - 2

தேதி: February 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

அகத்திக்கீரை - ஒரு சிறு கட்டு
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
உப்பு - அளவுக்கு
மஞ்சள் தூள் - ஒரு பெரிய பிஞ்ச்
கறிவேப்பிலை - ஒரு நெட்டு
தேங்காய்ப்பால் - தலைப்பால் - ஒரு கப், தண்ணீர்ப்பால் - 2 கப்


 

தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளமாக அரிந்து வைக்கவும்.
அரிந்து வைத்த மிளகாய் மற்றும் வெங்காயத்தை மஞ்சள் தூள், அளவுக்கு உப்பு சேர்த்து தண்ணீர்ப்பாலில் அவியவிடவும்.
வெங்காயம் மற்றும் மிளகாயின் நிறம் மாற ஆரம்பித்ததும் தலைப்பால் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் திரைய விடாமல், கரண்டியால் ஆற்றவேண்டும்.
ஆற்றிக் கொண்டே கீரையையும், கறிவேப்பிலையையும் காம்போடு சொதியில் சேர்த்து அவிந்ததும் இறக்கவும். அதிக நேரம் அவியவிட வேண்டாம்.
சுடுசாதம், இடியப்பத்திற்கு சூப்பராக இருக்கும். சுலபத்தில் கையால் உருவ வராது. காம்பை பிடித்துக்கொண்டு தான் இலையைச் சாப்பிட வேண்டும். சுவை அருமையாக இருக்கும். காம்போடு போடுவதால் கசப்பே இராது. சொதியில் கீரையின் சுவை இறங்கி இருக்கும். ஆனால், அது கூட கசக்காது; அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Super

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

சிம்ப்ளி சூப்பர்ப்.நான் அகத்திக்கீரை சால்னா செய்வேன் குறிப்பு கூட அறுசுவையில் முன்பு பகிர்ந்திருக்கேன், இதில் கீரையை காம்போடு சேர்த்திருப்பது மிகவும் சுவாரசியம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இம்மாம்மா அகத்திக்கீரை சொதி - 2 ரொம்ப ஹெல்தி அன்ட் வித்யாசமான செய்முறையோட படங்கள் அழகு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப அருமையான குறிப்பு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இம்ஸ்
சூப்பர்... :)
கீரையை பார்த்தாவே ஆசையா இருக்கு.. இங்கே கிடைக்காது ... :(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா ஆன்டி,சொதி சூப்பர்.இடியாப்பத்திற்க்கு எப்பவுமே முருங்கைகாய் சொதியும்,சம்பலும்தான் செய்வேன்.அகத்திகீரை கிடைச்சா ட்ரய் பன்றேன்.

Kalai

இமா,

அகத்திக்கீரை சொதி அருமையான ஹெல்தி குறிப்பு!
படங்கள் ஒவ்வொன்றும் அசத்துது! :‍) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

படங்களும் அருமை, அகத்திக்கீரை சொதியும் ரொம்ப அருமைங்க :-)

நட்புடன்
குணா

சொதி அருமையா இருக்குங்கம்மா :) எனக்கு ரொம்ப பிடிக்கும் அகத்திக்கீரை கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சொதி ரொம்ப நல்லாருக்கு,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அகத்தி கீரையும்,தேங்காய் பாலும் அல்சருக்கு மிக சிறந்த மருந்து.. நல்ல ஆரோக்கியமான குறிப்பை குடுத்திரிக்கீங்க...கீரை கிடைக்கும் போது செய்யனும்..;)

radharani

வனி, தாமரை, கனிமொழி, அருள், சுஸ்ரீ, குணா, ராதா, ஸ்வர்ணா & மூசி. ;)

நன்றி ஆசியா, //கீரையை காம்போடு சேர்த்திருப்பது// ஆமாம், அப்படித்தான் எப்பொழுதும் சமைப்போம். ;)

நன்றி ரம்ஸ்.. //கீரையை பார்த்தாவே ஆசையா இருக்கு.. இங்கே கிடைக்காது// இது ஃப்ரோஸன். இதுவே இப்ப சமீபகாலமாதான் கிடைக்குது.

ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க கலா. மிக்க நன்றி. ;)

‍- இமா க்றிஸ்

அகத்தி கீரை சொதியை பார்க்கவே வாய் ஊறுது . என்ன பெயரில் கிடைக்குது அங்கே? இதன் ஆங்கில பெயர் தெரியுமா?

தாவரவியற் பெயர் வேணுமெண்டால் சொல்லுறன்... Sesbania grandiflora. ;)))

சிங்களத்தில கத்துறு முருங்கா. இலங்கைல இருந்து வாறதெண்டால்... இப்பிடியேதான் சிங்லிஷ்ல எழுதியிருப்பாங்கள்.

‍- இமா க்றிஸ்