வேலண்டைன்ஸ் டே கார்டு - 3

தேதி: February 13, 2013

5
Average: 5 (5 votes)

 

A4 பேப்பர்ஸ் - வெள்ளை, பச்சை, ரோஸ்
டிசைனர் பேப்பர் - ஒன்று
ஃபஸ்ஸி ஸ்டிக் (Fuzzy Stick) - 2
ஐஸ்க்ரீம் குச்சி - 2
ரிப்பன் - சிகப்பு, நீலம்
க்ளூ

 

ஐஸ்க்ரீம் குச்சியில் க்ளூ தடவி சிகப்பு ரிப்பனை ஒட்டி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
A4 பேப்பர்களை சதுரமாக வெட்டி வைக்கவும். வெள்ளை நிற பேப்பரை குறுக்காகவும், பாதியாகவும் அழுத்தி மடித்து விரிக்கவும்.
பேப்பரை பின் பக்கம் பிரட்டி படத்தில் காட்டியுள்ளபடி அழுத்தம் தெரியும் ஒரு முனையையும், அதற்கு எதிர்புறம் உள்ள முனையையும் சேர்த்து பிடித்து மடிக்கவும்.
மடித்த பேப்பரில் இதய வடிவம் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். விரித்தால் படத்தில் உள்ளது போல் வரும்.
மற்ற கலர் பேப்பர்களையும் இதய வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
வெள்ளை பேப்பரை விரித்து உள்பக்கம் இதய வடிவில் வெட்டி வைத்த 4 கலர் பேப்பர்களை ஒட்டவும் .இதில் விருப்பிய வாசகம் எழுதி அல்லது ஸ்டிக்கர்ஸ் ஒட்டி அலங்கரிக்கலாம்.
இதய வடிவில் வெட்டி வைத்த டிசைனர் பேப்பரை வெளிப்புறம் ஒட்டவும். இப்போது கார்டு போல திக்காக இருக்கும்.
அந்த கார்டை மடித்து, அதில் இதயவடிவ ஃபெல்ட் துணியை ஒட்டியுள்ளேன். கார்டு பிரியாமல் இருக்கவும் அழகுக்காகவும் நீல நிற ரிப்பன் கட்டியுள்ளேன். இதில் அவரவர் விருப்பத்தில் ஸ்டிக்கர்ஸ் கூட ஒட்டலாம்.
கார்டின் பின்பக்கம் செய்துவைத்துள்ள ஐஸ்க்ரீம் குச்சியை ஒட்டவும். .ஃபஸ்ஸி ஸ்டிக்கில் இலைகள் போல் சுற்றி குச்சியில் ஒட்டவும். அழகான வாழ்த்து அட்டை தயார். இதில் கை பிடியும் இருப்பதால் கார்டின் பின்புறம் டபுள் சைட் டேப் ஒட்டி சுவரில் ஒட்டிவைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாப்பி வாலன்டைன்ஸ் டே கலா. :)

வித்தியாசமான ஐடியா. சூப்பர் கார்ட். வாஸ்ல கூட வைக்கலாம் போல இருக்கு. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா அருமையா இருக்குங்க, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

வாலன்டைன்ஸ் டே கார்ட் ரொம்ப அழகா இருக்கு! ;‍-). பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வேலண்டைன்ஸ் டே கார்ட் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள் இமா ஆன்டி.மிக்க நன்றி :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி குணா :)

Kalai

குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுஜா :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க :)

Kalai