கேரட் கீர்

தேதி: September 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 7
கன்டென்ஸ்டு பால் - ஒரு டின்
பொடியாக நறுக்கிய பாதாம் - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய முந்திரி - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 25 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

கேரட்டை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். பின் குக்கரில் முந்திரி, நறுக்கிய கேரட் சேர்த்து வேகவைக்கவும். அவை வெந்ததும் நைசாக அரைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய முந்திரி, பாதாம் போட்டு வறுக்கவும். பின் அரைத்த விழுது, கன்டென்ஸ்டு பால் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியில் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்