சிசேரியன் உடனடி பதில் வேண்டும் தோழிகளே

தோழிகளுக்கு என் வணக்கங்கள் ,எனக்கு திருமணமாகி ட்ரீட்மெண்ட் எடுத்து நான் கர்ப்பமானேன் .எனக்கு நீர்கட்டி இருந்தது ,எனவே லாப்ரோஸ்கோபி செய்து அடுத்த மாதத்தில் கருத்தரித்தது ,இப்போது எனக்கு பிரசவ நேரம் ,அதாவது எனக்கு duedate 17.2.2013 (நாளை ) கொடுத்திருந்தார்கள் ,எனக்கு நேற்று மருத்துவர் செக் செய்ததில் இன்னும் தலை கீழே இறங்கவில்லை ,அதனால் வலி வந்து நார்மல் ஆகுவது கொஞ்சம் சிரமம் ,எனவே என்னை சிசேரியன் செய்துக் கொள்ள சொன்னார் ,அதற்காக நாங்கள் இன்று ஸ்கேன் செய்தோம் ,அதில் cord around the neck என்றும் ,தண்ணீர் ஓரளவு போதுமானதாக உள்ளதாகவும் வந்துள்ளது ,எனவே நாங்கள் சிசேரியன் செய்து கொள்ள நாளை அட்மிட் ஆகுவதாக முடிவு செய்தோம் ,ஆனால் இதனிடயே நான் ecospirin என்ற மாத்திரை தினமும் எடுத்துவந்தேன் ,அந்த மாத்திரையை சிசேரியன் செய்வதற்கு நான்கு நாள் முன்னதாகவே நிறுத்தி இருக்க வேண்டுமாம் ,இப்போது இன்றும் நாளையும் மட்டும் அந்த மாத்திரையை நிறுத்தி விட்டு திங்கட்கிழமை சிசேரியன் செய்வதாக உள்ளோம் ,இதில் எனக்கு குழப்பம் +பயம் என்னவென்றால் அது வரை(திங்கட்கிழமை வரை ) குழந்தையை கொடி சுற்றி இருந்தால் ஒன்றும் ஆகாதா ?மேலும் எனக்கு கர்ப்பகால சுகர் +பிரஷர் ரெண்டும் உள்ளது ,அதற்க்கு மாத்திரைகளும் எடுத்து வருகிறேன் ,மேலும் ஐந்து நாள் நிறுத்தி இருக்க வேண்டிய மாத்திரை இரண்டு நாள் மட்டும் நிறுத்துவதால் என்னாகும் ?மிகவும் பயத்தில் உள்ளேன் ,உடனடியாக தெரிந்த தோழிகள் எனக்கு பதிலளிக்கவும் .உடனடி பதில் வேண்டும்

பாரதி, இன்னும் ஒரு சில நாள்ல உங்களே உங்களுக்கான ஒரு குட்டி சொர்க்கம் கைல வர போகுது. அதை வரவேற்க தயாராகுங்க. அதை விட்டுட்டு இத்தனை குழப்பம் நெருக்கடியான நேரத்தில் தேவையான்னு யோசிச்சு பாருங்க. உங்களை பரிசோதிக்கும் டாக்டருக்கு உங்களோட உடல்நிலையை பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும். அதனால் உங்களுக்கு இப்ப சாப்பிட வேண்டிய மருந்து,மாத்திரைகளை மட்டும் தான் அறிவுறுத்தி இருப்பார். இதுபோன்ற நேரங்களில் டாக்டரும் கடவுள் மாதிரி தானே.. நல்லதே நடக்குங்க. எதை பத்தியும் யோசிச்சு மனசை வருத்தபடுத்திக்காதீங்க. அது இப்ப குழந்தைக்கு ஆகாது. கடவுள் எப்பவும் உங்கலுக்கு துணையா இருப்பார். பிடிச்ச கடவுளை வேண்டிக்கோங்க. மனசை அமைதியா வச்சுக்கோங்க. சிசேரியன் இனிதே முடிய மனப்பூர்வ வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்