வல்லாரை துவையல்

தேதி: February 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

வல்லாரைக் கீரை - 2 கட்டு
காய்ந்த மிளகாய் - 10
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
தேங்காய் - ஒரு மூடி
புளி - சிறிதளவு
உப்பு
எண்ணெய்


 

வல்லாரைக் கீரையை அலசி தண்ணீரை நன்கு வடித்து விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியே சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.
பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை வறுக்கவும்.
தேங்காய் துருவலை வறுக்கவும்.
கடைசியாக வல்லாரைக் கீரையை பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். (இல்லையேல் கசப்புத்தன்மை போகாது).
வறுத்தவை அனைத்தும் நன்கு ஆறியதும் கரைத்த புளி, உப்பு, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
சுவையான வல்லாரை துவையல் ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். சிறிது நல்லெண்ணெய் விட்டும் சாப்பிடலாம்.

வல்லாரைக் கீரை மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்திக்கு மிகவும் நல்லது. அதுவும் படிக்கும் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு... ஆரோக்கியமான குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லலி அக்கா வல்லாரை துவையல் ரொம்ப ஹெல்தியான நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பு அருமை + ஆரோக்கியம்:),,வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Very Healthy Food

Unmaiyile arumaiyana kuripu, sariyana samayathil padikum kulandaikaluku thevaiyana ondre. Enda keerai patriya kuripugal solungalen tholi

Lalithambiga your recipe looks great. In US, it is available in all Vietnam stores. You have to ask for 'Rau ma'.

உங்களுடய வல்லாரை துவையல் நல்லா இருந்தது