தேதி: February 26, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - 2 1/2 கப்
வெண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
உளுந்தை கழுவி ஒன்றிற்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து, ஆற விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பிறகு எள், சீரகம், ஓமம் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. உளுந்தின் ஈரப்பதமே போதுமானது.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும்.

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான உளுந்து முறுக்கு தயார்.

Comments
முசி
முன்பு இந்திராவின் சுலப முறுக்கு செய்திருக்கேன்... அதே போல இருக்கு. எனக்கு பிடிச்ச முறுக்கு. ரொம்ப நல்லா இருக்குங்க.:)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
musi
முசி.. உளுந்து முறுக்கு குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
musi
உளுந்து முறுக்கு சூப்பர் மிக அருமையான குறிப்பு - வாழ்க வளமுடன்
முசி,
முசி,
சூப்பர் ஐடியா ..அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
musi
சூப்பர் முறுக்கு.வாழ்த்துக்கள் :)
Kalai
உளுந்து முறுக்கு
முசி,
உளுந்து முறுக்கு அருமையா செய்திருக்கிங்க. கடைசி ப்ளேட்ல முறுக்கு கலர் அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ அக்கா
உளுந்து முறுக்கு ரொம்பவே சுலபமா இருக்கே ஹ்ம்ம் ஈஸி செய்முறையோட மொறு மொறு நு சூப்ப்ரா இருக்கு கடைசி ப்ளேட்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
முசி
கருக் மொருக் முறுக்கு சூப்பர்.செய்து பார்த்துட்டு சொல்ரேன்.
நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா
super i added my wanted list
super i added my wanted list
முறுக்கு பார்க்கவே ஆசையா
முறுக்கு பார்க்கவே ஆசையா இருக்கு....வாழ்த்துக்கள்
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
வனி:மிக்க நன்றி.எல்லா முறுக்கும் ஒரே பார்மூலா தானே.
அருள்:வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...
சுதா:வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
கவிதா:மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.
கலா:ரொம்ப நன்றி.
சுஸ்ரீ:வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
கனி:மிக்க நன்றி.
வித்தியா:மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.
பாரதி:ரொம்ப நன்றி.
லலிதா:மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
முசி வெண்மையான முறுக்கு சூப்பர் வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
உளுந்து முறுக்கு
உளுந்து முறுக்கு நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்
sudha
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Mannikanum ithanai naan
Mannikanum ithanai naan seithu paarthen but oil romba elukkuthu intha murukku yenna karanam ???
vatshaa
வெண்ணெய்யின் அளவு கூடிவிட்டால் தான் முறுக்கு எண்ணெய் குடிக்கும்.அடுத்த முறை சரியான அளவில் வெண்ணெய் சேர்க்கவும்.தமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
MUSIமுறுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் உழுந்து முறுக்கு இது கூட ரெம்ப எழிமையாதான் இருக்கு [ஒரு டவுட்டு இடியாப்ப மாவு போடலாமா} சட்டுன்னு புரிந்து விட்டது வாழ்த்துக்கள்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
arisi maavu na athu pacha
arisi maavu na athu pacha arisiya ila pulungal arisiya. arisi oora vaichu powder pananuma. plz reply panunga