என் குழந்தைகாக வேண்டிக் கொள்ளுங்கள்

என் குழந்தை Akshitha sree. 1 yr அக போகுது , அவ பிறகும் போதே பின்னாடி எலும்பு துக்கின மாதிரி இருந்தது. அப்போ Doctor கிட்ட காட்டினோம்.1 year களித்துக் சொல்ல முடியும் சொன்னார்கள். 25-2-2013 தான் சென்றோம்.எலும்பு நல்ல சேரல நடக்கிறதில் பிரச்சனை வரும் சொன்னர். SCAN பன்ன சொன்னார்,வருகிற திங்கள் கிழமை SCAN கொன்டு போக போறோம்.அவர் நல்ல பதில் சொல்லனும்.நானும் ஒரு physically challenged person.ரொம்ப கஷ்டமா இருக்கு. Please எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஈஸ்வரி,

கவலைப் படாதீங்க,உங்கள் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்க்காக நான் கடவுளை பிராத்திக்கிறேன். இந்த காலத்தில் அறுவை சிகிச்சையின் மூலமாக பல குறைபாடுகளை நீக்கி விடலாம். மன தைரியம் தான் முக்கியம். மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள். கவலைப் பட்டு மன அழுத்ததிற்க்குள்ளாக வேண்டாம்.

இப்படிலாம் பிள்ளைகளுக்கு கஷ்டம்னா தாய் மனசு படாது பாடு படும்... உங்க நிலை புரியுது. கவலைப்படாதீங்க... உங்க பிள்ளைக்கு எந்த குறையும் வைக்க கூடாதுன்னு நானும் இறைவனை வேண்டிக்கறேன். இப்பலம் இது போல பிரெச்சனைகள் சாதாரணம் ஈஸ்வரி, சரி பண்ணிடுவாங்க, அதனால் மனசை போட்டு வருத்திக்காதீங்க. குழந்தை சூப்பரா வருவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவலை வேண்டாம் பா,எல்லாம் சரியாகிடும்.கடவுளை நானும் வேண்டிக்கொள்கிரேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

கவலைப்படாதீங்க ஈஸ்வரி. குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லா வருவா. உங்கள் குழந்தைக்கு எந்த குறையும் வரக்கூடாதுன்னு நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம். தைரியமா இருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தைரியமா இருங்க ஈஸ்வரி. உங்கள் குழந்தைக்காக பிரார்த்தனை செய்கிறோம்.

dont worry everything will be fine. praying for ur baby....

ஈஸ்வரி நிச்சயமாக உங்க குழந்தைக்காக வேண்டிக்கிறோம் எதுவும் நீங்க கவலைப்பட வேண்டாம் மனச போட்டு குழப்பிக்காதீங்க உங்க குழந்தை நலமா இருப்பா தைரியமா இருங்க

ஈஸ்வரி மேடம் உங்க குழந்தைக்கு ஒன்னும் ஆகாது கடவுள் அவளுக்கு பூரண சுகத்தை தருவார் கவலை வேண்டாம் ....

அவ நல்ல படியா நடப்பா அத பார்த்து நீங்க சந்தோஷமா இருபீங்க சரியா

குழந்தை சீக்ரமா நல்லபடியா நடக்க எல்லாம் வல்ல இறைவனை இரஞ்சுகிறேன் ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈஸ்வரி கவலைவேண்டாம் பா பாப்பா சீக்கிரமாகவே சரியகிவ்டுவாள். கடவுள் கைவிடமாட்டார்.அவளுக்காக கடவுளிடம் நாங்கள் பிராத்தனை செய்கிறோம். நீங்கள் மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஈஸ்வரி அக்கா

கவலைபடாதீங்க... குட்டி பாப்பா சீக்கீரமா நடப்பாங்க. கடவுள் கண்டிப்பாக கை விட மாட்டார். டாக்டரும் நல்லதே சொல்வாங்க. நீங்க பயப்படாதீங்க. குட்டி பாப்பாக்காக கடவுள் கிட்ட நானும் வேண்டிக்கிறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்