தேதி: February 27, 2013
உல்லன் நூல்
குரோசே ஊசி - D/3.25MM
உல்லன் நூலை ஊசியில் முடிச்சுப் போட்டு 8 சங்கிலிகள் போடவும். அல்லது ஹெட்பேண்டு எந்த அளவு அகலமாக வேண்டுமோ அந்த அளவிற்கு சங்கிலிகள் போடவும்.

கடைசி சங்கிலிக்கு முன்னால் உள்ள சங்கிலியில் ஊசியை நுழைத்து நூலை இழுத்து தனி குரோசே பின்னல் (Single Crochet) போடவும்.

இப்படியே 8 சங்கிலிகளிலும் தனி குரோசே பின்னல் போட்டு கடைசியாக ஒரு சங்கிலி கூடுதலாக போட்டு, பின்னி வைத்திருக்கும் பட்டையான நூலை திருப்பவும்.

இப்போது படத்தில் உள்ளதுபோல் போட்டு வைத்திருக்கும் தனி குரோசே பின்னல்களில் முதல் சங்கிலிக்கு கீழ் ஊசியை நுழைத்து பார்த்தால் ஊசிக்கு மேல் இரண்டு நூல் இருப்பது போல தெரியும். அதற்கு நடுவில் ஊசியை நுழைத்து மறுபடியும் தனி குரோசே பின்னல் போட்டு பின்ன தொடங்கவும்.

அனைத்து சங்கிலிகளிலும் இதேபோல் போட்டு, முடிக்கும் போது மேலே சொன்னது போல் இரண்டு நூலுக்கும் இடையில் நுழைக்காமல் அடியில் நுழைத்து, கூடுதலாக ஒரு சங்கிலி போட்டு நூலை திருப்பி பின்னவும்.

இப்படியே ஒவ்வொரு பக்கமாக திருப்பி, தலையின் சுற்றளவிற்கு ஏற்ப, தேவையான நீளத்திற்கு பின்னவும். கடைசியில் இரண்டு ஓரங்களையும் சேர்த்து தனி குரோசே பின்னல்களால் பின்னி முடிச்சு போடலாம் அல்லது ஊசியால் தைக்கலாம்.

கேமல் ஸ்டிச் டிசைன் ஹெட்பேண்ட் (Camel Stitch Design Headband) ரெடி.

இதில் குரோசே பூக்கள் செய்து தைத்து குழந்தைகளுக்கு போடலாம்.

Comments
கலா
ரொம்ப அழகா இருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹெட் பான்ட்
அழகா இருக்கு கலா.
பூ - அப்படியே நீளமா பின்னி சுருக்கி இருக்கீங்களா?
- இமா க்றிஸ்
கலா அக்கா
ஹாய் கலா அக்கா கேமல் ஸ்டிச் டிசைன் ஹெட்பேண்ட் குட்டா அழகா இருக்கு பார்க்க
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலா
கலா ரொம்ப அழகா இருக்கு பா.கலக்குறீங்க வாழ்த்துக்கள்
ஹெட்பேண்ட்
குறிப்பை வெளியிட்ட அட்மின் டீமிற்கு நன்றிகள் :)
Kalai
வனிதா
வனிதா அக்கா மிக்க நன்றி :)
Kalai
இமா
பூவிற்கு தனியா வட்டமா பின்னி,சுருட்டனும் இமா ஆன்டி.சீக்கிரமே அதையும் இங்கே போடறேன் :)வாழ்த்துக்கு மிக்க நன்றி இமா ஆன்டி :)
Kalai
ஹெட்பேண்ட்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கனி :)
Kalai
ஹெட்பேண்ட்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி நிக்கி :)
Kalai
pinnal
Wownga super and easy a iruku