லவேரியா

தேதி: February 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (13 votes)

இந்த லவேரியா திருமதி. துஷ்யந்தி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

 

பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இடியாப்ப மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பாசிப்பருப்பை சிவக்க வறுத்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
வேக வைத்த பாசிப்பருப்பில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சுருள கிளறவும்.
இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக பிசையவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவில் இடியாப்பம் பிழிந்து நடுவில் பாசிப்பருப்பு கலவையை வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் வைத்து இலையை பாதியாக மடித்து மூடி வேக வைக்கவும்.
சுவையான லவேரியா தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்வரு

வாழை இலையில் பார்க்கவே செம சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..அறுசுவையில் இப்பவெல்லாம் வரும் குறிப்புகள் பட்டைய கிளப்புது.. ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இலங்கை சமையல் என்றதும் நான் வனி போட்டிருக்காங்க போல என்று நினைச்சேன். சுப்பர்ப் ஸ்வர்ணா. கலக்கிட்டீங்க. அருமையா வந்திருக்கு. ;)

‍- இமா க்றிஸ்

ஆகா ஆகா... சூப்பரோ சூப்பர் :) வாழை இலையில் இனிப்பு... பார்க்கவே அழகா இருக்கு... அப்படியே தென்காசியில் சாப்பிடும் இருட்டு கடை அல்வா நியாபகம் வருது. ஊருக்கு போய் தான் எல்லாம் செய்யனும். வாழ்த்துக்கள் சுவா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துகள், பார்க்கவே சூப்பரா இருக்கு. கண்டிப்பாக செய்து பார்கிறேன்.

ஸ்வர்ணா அக்கா லவேரியா ரொம்ப சூப்ப்ரா இருக்கு அக்கா*****

அம்மா ரொம்ப நாளுக்கு முன்னாடி இப்டி செஞ்சு குடுத்து இருகாங்கா ஆனா பேர் நியாபகம் இல்ல ....

வாழை இலை ல செஞ்சாலே தனி டேஸ்ட் தான் ல அக்கா கடைசி ப்ளேட் ல இருகுரது க்ல ஒன்னு சென்னைக்கு பார்சல் ப்ளீஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுவா லவேரியா குறிப்பு மிக அருமை:) வாழை இலையோட பார்க்கவே அழகா இருக்கு:)
வாழ்த்துக்கள்பா:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா நீங்களே சொல்லீட்டீங்கல்ல ரொம்ப சந்தோசங்கம்மா :)))நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) எல்லாத்துக்கும் உங்கள் ஊக்கம் தான் காரணம் வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சர்மிளா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) பார்சல் அனுப்பியாச்சு கனி வந்துச்சான்னு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழை இலை ஸ்பெஷல் இனிப்பு.. வாழ்த்துக்கள். படங்கள் அத்தனையும் அருமை. பார்க்கும் போதே சாப்பிட தோணுது. கலக்கல் ஸ்வர் அக்கா...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

laveria super swa...:) antha kadaisila irukara plate enakku...:) fresh valzai izlai kidaikathu enakku, foil paper use panniyavahu seithudaren swa. red rice idiyappa mavu use panninalum nalla varuma swa? congrats swa. melum kuripukal kodukka vazlthukkal...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஸ்வரு
எத்தனை முறை வேணாலும் பார்க்கலாம் போங்க.. அடிக்கடி பார்க்கிறேன்.. மாவு புழியறது இங்கே இல்லை.. :( ஊருக்கு வந்து தான் செய்யணும்.. நான் கும்பகோணம் வரும் போது, மறக்காம இதை செஞ்சு வெச்சுடுங்க. நான் சொல்லவே வேணாம் தானே :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லவேரியா செய்தாச்சு.டேஸ்ட் சூப்பர்.எப்பவுமே இந்த வேகவைக்கிற அயிட்டங்கள உடனே செய்ய தோணும்..அப்படிதான் சாயங்காலம் பார்த்தவுடனே செய்துட்டேன்.வாழைஇலைக்கு எங்க போக அதான் ஃபாயில் பேப்பர் வைத்து செய்துட்டேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

ஸ்வர்ணா,
கம கம குறிப்பு
அழகாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இரு முறை பதிவு

என்றும் அன்புடன்,
கவிதா

இடியாப்பமா பிழியாம கொழுக்கட்டைக்குள்ள இதுபோல்பூரணம் வச்சு எங்க மாமியார் செய்வாங்க...
இது அருமையான குறிப்பு

பேரும் நல்லா இருக்கு..போட்டோக்களும் அழகு...

ஸ்வா..ஸ்வா லவேரியா வேணும் ஸ்வா....:)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

kalakitinga mam superb

maha

வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாவ்... சுவர்ணா, லவேரியா, குறிப்பும், படங்களும் கொள்ளை அழ‌கு!
அந்த வாழையிலையில் வைத்து மடித்திருப்பது பார்க்கவே அம்சமா இருக்கு!! :)
தேவையான எல்லா பொருளும் இருக்கு, இப்போ வாழையிலைக்கு நான் எங்கப்போவேன்?! அல்டர்நேட்டிவ் ஐடியா வைத்து செய்துப்பார்த்திட வேண்டியதுதான்! வாழ்த்துக்கள் சுவர்ணா!

அன்புடன்
சுஸ்ரீ

நானும் தென்காசிதான் கல்யானதுக்கு பிறகு போகல.......

வித்தியாசமான பேர். அருமையான, எளிமையான குறிப்பு, வாழ்த்துக்கள்

அன்புடன்,
ஹலீமா

சுதா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி சாரிப்பா லேட்டான பதிலுக்கு
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா,கடைசி ப்ளேட் உங்களுக்கே அனுப்பிடறேன் :) ஆனா ப்ளேட் மட்டும் தான் வரும் ஓகேவா ;)
ரெட் ரைஸ்ல பன்னலாம் என்ன கலர் மாறி இருக்கும் அவ்ளோதான் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் திரும்பவுமா :))) நானே அடிக்கடி பார்க்கிறேன் பா குறிப்பை :) இந்த குறிப்புக்கான பாராட்டுகள் எல்லாம் திருமதி துஷ்யந்தி அவர்களுக்கே சேரும் :)

ரம்ஸ் நீங்க இங்க வரும்போது கண்டிப்பா செய்து வச்சிடுறேன் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலை வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) போட்டோஸ் பார்த்தேனே fB ல சூப்பர் கலை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளா வருகைக்கு மிக்க நன்றிங்கோ :) லவேரியாதானே இளாவுக்கு இல்லாததா அனுப்பிடறேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முசி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) ரொம்ப நல்லாருக்கு இந்த டிஷ் கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிகிட்ட பேசனுமா அரட்டையில பேசுங்க பதில் சொல்லுவாங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹலீமா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா நேற்று லவேரியா செய்தேன். யம்மி... டேஸ்டி..... வாழையிலை இல்லை அதனால் இட்லி தட்டிலேயே பூரணம் வச்சு செய்துட்டேன் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Dear swarna, naan Indru breakfast ku lavaria try pannen. Vaazhai illaiil parka ve romba excellent a irundhuthu. Kuripuku nandri

Mi

மூணு தடவை செய்தாச்சு.. செம டேஸ்ட்... நன்றி

லவேரியா என் ஃப்ரண்ட்ஸ் க்கு செய்தேன், ரொம்ப நல்லா இருந்தது