கிட்ஸ் மெஹந்தி டிசைன்

தேதி: March 2, 2013

4
Average: 3.7 (17 votes)

 

மெஹந்தி கோன்

 

முதலில் படத்தில் உள்ளது போல முழங்கையின் கீழே பூ வரையவும்.
அதை தொடர்ந்து இலை வரையவும்.
இலைக்கு மேல் மாங்காய் டிசைன் வரைந்து, உள்ளே கோடுகளால் நிரப்பவும். அதற்கு மேல் படத்தில் உள்ளது போல் புள்ளி வைத்து வட்டமிடவும்.
வட்டத்திற்கு மேலே வளைவுகள் வரைந்து விடவும்.
பின் படத்தில் உள்ளது போல் வளைவுகள் வரைந்து அதனுள்ளே கோடுகள் வரையவும். இடையில் உள்ள இடைவெளியில் இதேபோல் டிசைன் வரையவும். உள்ளங்கையின் தொடக்கத்தில் வளைவு வரைந்து, புள்ளிகள் வைத்து இதேபோல் மேலும் வளைவுகள் வரையவும்.
அதற்கும் மேல் மயில் போல வரைந்து, தலையில் சுழித்து கொண்டை போல வரையவும். பின் தோகை போல வரைந்து, தோகையின் உள்ளே சிறிய மாங்காய்கள் வரைந்து விடவும்.
மயிலின் முன்பக்கம் பூ ஒன்றை வரைந்து, அதன் பக்கத்தில் இலைகள் வரைந்து கொள்ளவும்.
விரல்களுக்கு புள்ளி வைத்து அதன் மேலே கோடு போட்டு படத்தில் உள்ளது போல டிசைன் வரைந்து விடவும்.
என் மகள் சோனாவிற்கு போட்ட டிசைன் இது. இதேபோல் விழாக்களுக்கு குழந்தைகளுக்கு போட்டு விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

என் கைக்கு சரியாக இருக்கும் போல இருக்கே! ;)
டிசைன் எளிமையாக, அழகாக இருக்கிறது சங்கீதா.

‍- இமா க்றிஸ்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி ...
imma முதல் முதலாய் வந்து கருத்துக்களை அன்புடன் பகிர்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அழகான டிசைன் வாழ்த்துக்கள் சங்கீதா.மெஹந்தி போட்டு படம் எடுக்கும்வரை பொறுமையா கையை குடுத்த சோனா குட்டிக்கும் வாழ்த்துக்கள் :)

Kalai

கலா அக்கா உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..இந்த டிசைன் போட்டு போட்டோ எடுப்பதற்கு மிகவும் சிரம பட்டு போனேன்.. உங்களது வாழ்த்துக்களை சோனாவிற்கு தெரிவிக்கிறேன் .. மிக்க நன்றி

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

fyuio

Don't Worry Be Happy.

??????!!!! :-)

மெஹந்தி டிசைன் ரொம்ப‌ க்யூட்டா, அழ‌கா இருக்கு சங்கீதா!
வாழ்த்துக்க‌ள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அழகான டிசைன்,வாழ்த்துக்க‌ள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

susri,musi உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"