ஒவ்வொரு மாதமும் குழந்தை செய்யும் நடவடிக்கைகள்.........kavithaamurali

தாய்மை அடைய போகும் தோழிகளே......இதோ உங்களுக்காக ஒரு கவிதை. "உன் முகம் பார்க்கும் முன் ....." "உன் குரல் கேட்கும் முன்..... " "உன் குணம் அறியும் முன்...." "நீ கருவில் இருக்கும் போதே..... உனனை காதலித்த முதல் உயிர்........ "அம்மா". இந்த கவிதை என் தோழிகளுக்கும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் என் பரிசு.(நீங்களும் உங்க குழந்தையும் சிரிக்கிறது கேட்கிறது தோழிகளே..........) குழந்தை பிறந்த முதல் மாதம்:- சத்தம் வரும் பக்கம் திரும்பும். 2வது மாதம்:- மற்றவர்களைப் பார்த்து திரும்பும். 3வது மாதம்:- தலை ஆடாமல் நிற்கும்.தாயை தெரிந்துக் கொள்ளும். 4வது மாதம்:- சத்தம் எழுப்பும். 5வது மாதம்:- நன்றாக புரளும்.மற்றவர்கள் உதவியுடன் உட்காரும். 6வது மாதம்:- தன் உருவத்தை கண்ணாடி பார்த்து சிரிக்கும்.மா,பா போன்ற ஓர் எழுத்து ஒலியை எழுப்பும்.பல் முளைக்கும். 7வது மாதம்;- மற்றவர்க்கள் உதவி இல்லாமல் உட்காரும்.8வது மாதம்:- தவழும்.9வது மாதம்:- மற்றவர் உதவியுடன் நிற்கும்.மாமா,பாபா போன்ற இரண்டு எழுத்து சொல் சொல்லும்."டாட்டா சொல்லும். 10வது மாதம்:- மற்றவர் உதவியுடன் தளர்நடை. 12வது மாதம்(1வயது):- உதவி இல்லமால் நிற்கும்.அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும். 13வது மாதம்:- உதவி இல்லமால் நடக்கும். 24வது மாதம்(2வயது):- மாடிப்படி ஏறும்.சிறு வாக்கியம் பேசும். 36வது மாதம்(3வயது):- மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும். "ஆறு மாதம் வரை அறியாதவக்கூட பிள்ளை வளர்ப்பா"எனப் பழமொழியே இருக்கு தோழி.ஆறு மாதத்திற்கு அப்புறம் தான் கவனமா குழந்தை வளர்க்கனும்.

நல்ல பயனுள்ள தகவல்கள்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

Good news.

மேலும் சில பதிவுகள்