சௌசௌ துவையல்

தேதி: March 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

சௌசௌ - 2
உளுத்தம் பருப்பு - 5 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
புளி - கோலி அளவு
பூண்டு - 4 பல்
தேங்காய் பல் - 10 துண்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 6 தேக்கரண்டி

கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து சிவந்ததும், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, தேங்காய் பல் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி, ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
சௌசௌ காயை தோல் சீவி நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி செளசெள சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து வதக்கவும். காய் நன்றாக வதங்கி, சுருங்கியதும் இறக்கி ஆற வைக்கவும்.
வதக்கி ஆற வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றை அரைத்த கலவையுடன் சேர்த்து கிளறவும்.
சௌசௌ துவையல் தயார். இது ரசம் சாதம், இட்லி, உப்புமா போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ். இதை ஒரு பாட்டிலில் போட்டு மூடி ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

nice recipe ...all the best

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி :-)

பத்மா மேடம் என்ன ஷாக் சர்ப்ரைஸ் லாம் குடுகுரீங்கா நம்பவே முடில மேடம் அண்ட் இதுகு நீங்க எவ்ளோ எஃபர்ட் எடுது இருப்பீங்கனு எனக்கு நல்லாவே தெரியும் ரொம்ப நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி கலக்குரே போ.சூப்பர் துவையல்.இப்போதே செஞ்சி பிரிட்ஜில் வைத்து விட வேண்டியது தான்.தாங்க்யூ.வாழ்த்துக்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வித்து அக்கா வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனி சிஸ்டர்

கனி சௌசௌ துவையல் சூப்பரா இருக்குப்பா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்னா அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சௌசௌ துவையல் அருமை வாழ்த்துக்கள் கவி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அக்கா வாத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

அண்ட் கவி யா கனியா :-))

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அடடா சாரிடா கனிக்கு பதிலா கவினு போட்டுட்டேனே.....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பரவாலா அக்கா இதுக்கு ஏன் சாரி லாம் நீங்க சொன்னதாது பரவால :-(

நான் போட்ட பதிவு பாதீஇங்களா அக்கா வாழ்த்துக்கு நன்றி நு சொல்ல வாத்துக்கு நு சொல்லிடேன் அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பு அருமை.அவசியம் செய்து பார்க்கிர்றேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அக்கா வருகைக்கு மிக்க நன்றி ஹ்ம்ம் அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுன்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

செளசெள சாம்பார்ல போடுறதோட சரி வேற எதுவுமே செய்து பார்த்தது இல்லம்மா துவையல் பார்க்கவே நல்லா இருக்கு செய்து பார்க்கறேன். நன்றி

உமா அக்கா நிச்சயமா செய்த்துட்டு சொல்லுங்க அக்கா பீரியா இருந்தா மெயில்க்கு வாங்க அக்கா அப்புரம் குட்டிஸ்க்கு லீவ் விட்டாச்சா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

arumai kani, merakkai thane chowchow appidinu solrom( oru doubt than) intha week marketla kidacha vangi try pannitu solren...congrats...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அக்கா மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சௌசௌ துவையல் நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்

கனி ,

சத்தான,சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா