தலைக்கு எண்ணெய் தேய்ப்பது?????

அன்பு தோழிகளே நான் பஹ்ரைனில் இருக்கிறேன்,இந்தியாவில் எனக்கு ஆயில் ஸ்கின்,பஹ்ரைனில் டிரை ஸ்கின்,எனக்கு தலைக்கு குளித்தால் சுருட்டை முடியாக இருக்கும்,எண்ணெய் தேய்த்தால் முடி அடங்கும்,தலைக்கு எண்ணெய் தினமும் தேய்க்கலாமா??இல்லை தலைக்கு குளிக்கும் நாள் மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமா?

பொதுவாக நான் தலைக்கு எண்ணெய் தேய்த்தால்,அடுத்து தலைக்கு குளிக்கும் நாள் வரை அப்படியே வைத்து இருப்பேன்,இது சரியா?தலைக்கு எண்ணெய் தேய்த்தால் உடனே தலையை கழுவி விட வேண்டுமா?

எனக்கு பொடுகு தொல்லை உள்ளது,தினமும் எண்ணெய் தேய்த்தால் அழுக்கு அதிகம் சேருமா?தினமும் எண்ணெய் தேய்க்காவிட்டால் முடி உடையுமா?
தலைக்கு குளிக்காத சாதாரண நாட்களில் எண்ணெய் மண்டை ஓட்டில் மட்டும் தேய்க்கவேண்டுமா? இல்லை முடியில்,தலையில் இரண்டிலும் தேய்க்க வேண்டுமா?தயவு செய்து விளக்கமாக பதில் சொல்லுங்கப்பா?

please anybody reply me

ஹாய் மஞ்சு,தலைக்கு தினமும் எண்ணை வைக்க வேண்டும் பா.அப்போ தான் முடி நங்கு வளரும் .பொடுகு தொல்லையும் இருக்காது.2 நாட்களுக்கு ஒரு முறையாது எண்ணய் வையுங்கள்.kkkkkkkkkkkk

நிறைய சந்தேகம் கேட்டு இருக்கிறீங்க. :)

இப்படித்தான் என்பது இல்லை. ஒவ்வொருவர் பழக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும். //தலைக்கு எண்ணெய் தேய்த்தால் உடனே தலையை கழுவி விட வேண்டுமா?// உடனே கழுவிவிடுவதானால்... எண்ணெயே தேய்க்கத் தேவையில்லையே!!

//தினமும் எண்ணெய் தேய்த்தால் அழுக்கு அதிகம் சேருமா?// அழுக்கு எண்ணெயிலிருந்து வருவதில்லை; சுற்றாடலில், காற்றில் உள்ள தூசு முடியில் படிவதால் வருவது. எண்ணெய் வைத்தாலும் வைக்காவிட்டாலும் படிவது படியத்தான் போகிறது. வாரம் இருமுறையாவது முடியைக் கழுவ வேண்டும். அவசியமானால் தினமும் கூட கழுவலாம்.

எண்ணெய், படிகிற தூசு திரும்பப் பறக்க விடாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். ஒரு தடவை எண்ணெய் வைத்தால் அதைக் கழுவும் முன் அழுக்கோடு மீண்டும் தேய்க்க வேண்டாம்.

//தினமும் எண்ணெய் தேய்க்காவிட்டால் முடி உடையுமா?// அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆரோக்கியமான உணவு, சுத்தம், வெயிலிருந்து பாதுகாக்க தொப்பி / குடை போதும். இதற்கு மேல் முடி வெடித்தால் வேறு ஏதாவது மருத்துவக் காரணம் இருக்கலாம்.

தலைக்கு தினமும் எண்ணை வைக்க வேண்டும் என்பது இல்லை. நான் எண்ணெய் வைக்கும் பழக்கம் விட்டு பத்து வருஷமாவது இருக்கும். நாடு வேறுதான். ஆனால் இங்கும் வெயில் அதிகம். வெடிக்கவில்லை; பொடுகும் இல்லை.

//எனக்கு தலைக்கு குளித்தால் சுருட்டை முடியாக இருக்கும்,எண்ணெய் தேய்த்தால் முடி அடங்கும்,// ;)) புரிகிறது. அது உங்கள் முடியின் இயல்பு. நல்ல கண்டிஷனர் பயன்படுத்துங்கள். ஈரம் முழுவதாக உலரமுன்பு படிய வாரிவிடுங்கள். தேவைக்கு மேல் சீப்பைப் பயன்படுத்த வேண்டாம். அதுவும் முடி தூக்கிக் கொண்டிருக்கக் காரணமாகும். நாற்பது முறைக்குள் வாரி முடிக்க இயலுமா என்று பாருங்கள். மிக அவசியமான பொழுது ஸ்ட்ரெட்னர் பயன்படுத்தலாம். பிடிக்காவிட்டால்... க்ளிப் போடலாம். உங்கள் வழக்கம் போல குளித்து முடி உலர்ந்தபின் எண்ணெய் வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழீஸ், எனக்கு முடி ரொம்ப dry ஆக உள்ளது நான் johnson & johnson baby shampoo உபயோகிக்கிரேன் & parashot coconut oil use panren ,முடி shing இல்லை அடர்தியும் இல்லை,எந்த ஷாம்பு உபயொகிகலாம் ,pls tell me friends

மேலும் சில பதிவுகள்