பித்தப்பையில் கல்

அன்பு தோழிகளே,என் தோழிக்கு உதவுங்கள் பிளிஸ்.என் தோழியும் நானும் கிட்ட தட்ட 15 வருட பழக்கம்.அவளுக்கு போன மாதம் ஸ்கேன் பன்னுனார்கள்.பித்தப்பையில் கல் இருப்பதாக சொல்லி இருக்காங்க.இன்னும் டாக்டர் அப்பாயின்மென்ட் இன்னும் கிடைக்கவில்லை.இங்கு டிரிட்மென்று ரொம்ப ச்லொ(slow) தான்.என் தோழி மிகுந்த வருத்ததில் இருக்கிறாள்.என்னிடம் ஆலோசனை கேட்டாள்..எனக்கும் என்னசெய்வதென்றே தெரியவில்லை.அவளுக்கு 3 குழந்தைகள் பித்தப்பையில் கல் உள்ளவர்கள் என்ன மாதிரியான உணவு உன்ன வேண்டும்?மாத்திரையில் கரைந்து விடுமா?உதவுங்கள் தோழிகளே

அப்படியே ஒரு யூ டர்ன் அடிச்சு node 24330 க்கு போங்க. எதாவது தகவல் கிடைக்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/24330

:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட்மின் அவர்களே ,நீங்கள் அனுப்பிய லிங்கில் போய் படித்தேன்.எனக்கெ மிகவும் கஸ்டமாக போச்சுங்க.எப்படி நான் என் தோழியிடம் போய் சொல்வேன்.அவங்களுக்கு 30 வயது தாங்க ஆகுது.அவங்களும் நிறைய பேரிடம் விசாரிச்சுருக்காங்கஅவங்க சொன்னது இது வயசானவங்களுக்கு வரதுன்னு.ரொம்ப பயந்து போய் இருக்கங்க என் தோழி.

அட்மின் அவர்களே உங்களிடம் ஒரு சந்தேகம் கேக்கலாமா ?
நீங்கள் என்ன மாதிரியான உணவு கட்டுபாட்டு முறைகளை பின்பற்றுகிரிர்கள்?உணவு முறைகளை பற்றி சொல்லி என் தோழியை அமைதி படுத்தலான்னு தான் கேட்கிறேன்.
மிகவும் நன்றி அட்மினுக்கு. நீங்களே வந்துபதில் தந்த்ததுக்கு.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

//எப்படி நான் என் தோழியிடம் போய் சொல்வேன்.அவங்களுக்கு 30 வயது தாங்க ஆகுது//

.. ??!!

உங்க தோழிக்கு உள்ள பிரச்சனை பித்தப்பை கல் தானே.. எனக்கு எத்தனை வருசமா இருந்துச்சுன்னு தெரியலைங்க. ஆனா, எனக்கு இருக்குன்னு கண்டுபிடிச்சப்ப என் வயசு 32 தான். ரொம்ப சின்ன வயசு.. :-)

இது ஒண்ணும் எய்ட்ஸோ, கேன்சரோ இல்லைங்க. இந்த அளவுக்கு பயப்படுறதுக்கு. உலகத்துல கோடிக்கணக்கான மக்கள் இந்த கல்லைக் கட்டிக்கிட்டு, உலாத்திக்கிட்டு இருக்காங்க. இதையே எடுத்துச் சொல்லி, முடிஞ்சா தலையில ரெண்டு தட்டு தட்டி, ஓவரா ஃபீல் பண்ண வேண்டாம்னு உங்க தோழியை அமைதிபடுத்துங்க. :-)

//நீங்கள் என்ன மாதிரியான உணவு கட்டுபாட்டு முறைகளை பின்பற்றுகிரிர்கள்?//

என்ன மாதிரி உணவு முறையை பின்பற்றுனா நல்லதுன்னு எனக்கு தெரியும். ஆனா, நான் பின்பற்றுவது எல்லாம் கிடையாது. :-) அதுதான் என் பிரச்சனையே. ரொம்ப சிம்பிள் ரூல். Heavy food, Fatty food இதெல்லாம் அவாய்ட் பண்ணனும். ஒரே டயம்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா நிறைய டயம் சாப்பிடலாம். liver க்கும், gall bladder க்கும் அதிகம் வேலை வைக்கக்கூடாது.

நான் உங்களை அந்த த்ரெட்டுக்கு ரீடைரக்ட் பண்ணி விட்டதுக்கு காரணம், அங்க இன்னும் நிறைய விசயங்கள் டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். உணவு முறையப் பத்தி நீங்க கவலைப்படுறதுக்கு முன்னே, நீங்க கவலைப்பட வேண்டிய விசயம் வேற நிறைய இருக்கு. உங்க தோழிக்கு இருக்கிற கல் என்ன சைஸ்? எத்தனை? gallbladder கண்டிசன் எப்படி இருக்கு? அவங்களுக்கு பெயின் எப்படி இருக்கு? Fatty liver ம் இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க? இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் அடுத்து செய்ய வேண்டியதை பார்க்கணும். வலி அதிகமா இருந்தா உடனே ஆபரேசன் பண்ணிடுறது நல்லது. இல்லைன்னா எங்களை மாதிரி வெயிட் பண்ணலாம்.

ஒரு பூ வைத்தியத்துல பாதி கல்லு காணாம போச்சுன்னு ஒருத்தர் அந்த த்ரெட்ல பேசிக்கிட்டு இருந்தார். அப்புறம் மீதி கல்லு என்னாச்சுன்னு சொல்லவே இல்லை. கல்லோட அவரும் காணாமப் போயிட்டார்.. :-) ட்ரீட்மெண்ட் சக்ஸ்ஸஸா இல்லையான்னு தெரியாம, எப்ப வருவார்.. நல்ல சேதி சொல்வாரு ன்னு இங்க கொஞ்சம் பேர் காத்துக்கிட்டு இருக்கோம்.

அட்மின்,என் தோழிக்குஒவெரியன் சிஸ்ட் உண்டு.அதனால் வருடம் தோரும் ஸ்கேன் பன்னிப்பங்க.இந்தவாட்டியும் அதுக்காக தான் ஸ்கேன் பன்ன போனங்க.ஸ்கேன் பன்ற இடத்துலgallsstone இருக்குன்னுசொல்லிருக்காங்க.ஆனா கல் கொண்டு எந்த டீட்டெயிலும் தெரியலை.பேரை சொன்னதுக்கெ என் தோழி அப்செட்.இனி டாக்டரை பாத்தா தான் முழு விவரமும் தெரியும்.fatty liverகொண்டு எதுவும் சொல்லலையாம்.நீங்க சொன்னதை தோழியிடம் சொன்னேன்.கொஞ்ஜம் மனசு லேசகிருக்கு அவளுக்கு.உணவு கட்டுபாடு அவசியம்ன்னு சொல்லிருக்கென்.
நானும் அந்த பூ கதையை படிச்சேங்கஅந்த பூவால் கல் போயிடுச்சின்ன அத விட பெரிய சந்தோசம் எதுவும் இல்லை..என் தோழிக்கு வயிற்று வலி எதுவும் தெரியலையாம்.உங்களின் பிசி டைம்லையும் வந்து என் தோழிக்காக பதிவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அட்மின்

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

தோழிகளே பித்தபையை எடுத்த பிறகு என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும்?டாக்டர் எல்லாம் சாப்பிடலாம் என்று சொன்னார்கள். பித்தப்பையேட வேலை என்ன்? எனக்கு எடுத்து 8 மாதம் இருக்கும். ரத்த பரிசோதனையில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்குது. நான் சைவம்தான். என்ன செய்யிறதுன்னு தெரியலை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கப்பா.பிலிஸ் கெட்ட கொழுப்பு குறைவதற்கு சொல்லுங்கப்பா

எனக்கு வயது 26 ஜனவரி 2013பித்தப்பை எடுத்தோம் . என் குழந்தை அறுவை சிகிட்சையில் பிறந்தது. குழந்தை பிறந்து 20 நாட்களில் பித்தப் பை வலி வந்தது. டாக்டர் பித்தப்பை எடுக்கவே பரிந்துரை செய்தார் குழந்தை பிறந்து 60 வது நாளில் லேப்ராஸ்கோபி மூலம் அகற்றினோம். அறுவை சிகிச்சை முடிந்து ஏழு மாதம் ஆகிறது. சைவ உணவு மட்டும் உண்டு வருகிறேன் எப்போதவாது அசைவ உணவு எடுத்துக் கொள்வேன். கேஸ் ப்ராப்லம் மட்டும் இருக்கும்.

ennakkum stone irrukku....but no pain...dr.said.

do operation....but nann oil illatha ,fatt illatha,lot of water,garlic,onion,nirayya saapidukkireyen.food quantity yai kuraikkavum.....example:2dosa no oil...3-bread,1/2 cup rice 1/4 cup veg...wheat food only give good result,.....try.

மேலும் சில பதிவுகள்