பேப்பர் கிஃப்ட் பாக்ஸ்

தேதி: March 6, 2013

5
Average: 4.4 (14 votes)

 

விரும்பிய நிறங்களில் A4 காகிதம்
டிசைனர் அட்டை (வாழ்த்து அட்டைகள் செய்ய பயன்படுத்துவது)
ஃபேப்ரிக் க்ளூ
கத்தரிக்கோல்

 

A4 காகிதத்தை 16 துண்டுகளாக நறுக்கி http://www.arusuvai.com/tamil/node/15022 இந்த லிங்கில் கொடுக்கப்பட்டது போல் மடித்துக் கொள்ளவும். முக்கோணங்களை இணைக்கும் முறையையும் இதே லிங்கில் பார்க்கவும். இதற்கு சுமார் 232 சிவப்பு முக்கோணங்களும், 200 பிங்க் முக்கோணங்களும் தேவைப்படும்.
படத்தில் காட்டியபடி முக்கோணங்களை இணைக்க ஆரம்பிக்கவும்.
முதலில் சிவப்பு அடுத்து பிங்க் என முதல் வரிசையில் 7 முக்கோணங்களை இணைக்கவும். இதேபோல் இணைக்கும் போது முதல் வரிசையில் சிவப்பில் ஆரம்பித்து சிவப்பில் முடியுமாறு 7 முக்கோணங்களும், அடுத்த வரிசையில் சிவப்பில் ஆரம்பித்து பிங்கில் முடியுமாறு 6 முக்கோணங்களும் இருக்கும்.
மீண்டும் 7 அடுத்து 6 என தொடர்ந்து இணைக்கவும்.
இதேபோல் வரிசையாக இணைத்து ஓரங்களில் வரும் சிவப்பு முக்கோணங்கள் 13 எண்ணிக்கையில் வருமாறு இணைக்கவும். (13 வரிசைகளில் 7 முக்கோணங்களும், 12 வரிசைகளில் 6 முக்கோணங்களும் இருக்கும்). இதே போல மொத்தம் இரண்டு அடுக்குகள் செய்து கொள்ளவும்.
இரண்டு பேப்பர் அடுக்குகளின் தட்டையான முனைகளில் தடிமனான பேப்பர் வைத்து ஒட்டி காயவிடவும்.
காய்ந்ததும் இரண்டு முனைகளையும் சேர்த்து ஒட்டி காயவிடவும்.
நன்றாக காய்ந்ததும் கவனமாக இதய வடிவம் வருமாறு நிதானமாக வளைக்கவும். அதிக அழுத்தம் கொடுத்தால் இணைத்த முக்கோணங்கள் பிரிந்துவர வாய்ப்பு உள்ளது. அப்படி பிரிந்தாலும் மீண்டும் இணைத்துக் கொள்ளலாம். இரண்டு பேப்பர் அடுக்குகளையும் இணைக்கும் போது முனைகளில் உள்ள முக்கோணங்களை ஒன்றினுள் ஒன்று நுழைத்து இணைக்கவும். பின் க்ளூவால் ஒட்டி காய விடவும்.
தடிமனான அட்டையில் இதய வடிவத்தை வைத்து அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டையும் பென்சிலால் வரைந்து ஒரு அட்டையை வெட்டிக் கொள்ளவும். வெளிப்புறம் மட்டும் வரைந்து ஒரு அட்டையை வெட்டி வைக்கவும். வெளிப்புறம் மட்டும் வரைந்த அட்டையை இதய வடிவ அடுக்கின் அடிப்பகுதியில் வைத்து ஒட்டி விடவும்.
பின் பாக்ஸின் மூடி செய்வதற்கு படத்தில் உள்ளது போல முக்கோணங்களை வரிசையாக இணைத்து ஒரு ஜோடி எடுத்துக் கொண்டு அதையும் இதய வடிவம் வருமாறு வளைத்துக் கொள்ளவும்.
இதை அப்படியே உட்புறம் மற்றும் வெளிப்புறம் வரைந்து வெட்டிய இதய வடிவ அட்டையின் வெளிப்புறத்தில் வைத்து ஒட்டவும். பாக்ஸின் மூடி தயார். வெளிப்புறத்தில் வைத்து ஒட்டுவதால் பாக்ஸினுள் பொருந்தும் வகையில் ஒரு தடுப்பு போல அமையும்.
இதேபோல பாக்ஸின் மூடியில் அதன் உட்பக்கத்தில் இதய வடிவம் வரைந்த இடத்திலும் அந்த அளவிற்கேற்ப இதயம் செய்தும் ஒட்டி விடலாம்.
மூடியின் வெளிப்புறம் வாழ்த்துக்கள் அல்லது விருப்ப வாசகங்கள் எழுதி கொடுக்கலாம். பூக்கள் ஒட்டி அலங்கரிக்கலாம்.
அழகிய பேப்பர் கிஃப்ட் பாக்ஸ் தயார். உள்ளே கிஃப்ட் வைத்து கொடுக்கலாம். ஃபோட்டோவை இதய வடிவத்தில் வெட்டி மேற்புறம் ஒட்டியும் கொடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கவி

சூப்பர்.. போட்டு தாக்கிட்டிங்க..
அருமை.. படங்கள் பளிச். அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள்..
கலர் காம்போ அருமை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிசிவா முதல் க்ராஃப்ட்டா அழகா இருக்கு ரெட் கூட பின்க் அழ்கோ அழகு. வாழ்த்துக்கள்.

வாவ் ;) சூப்பரோ சூப்பர். எம்புட்டு காலத்துக்கு அப்பறம் உங்க க்ராஃப்ட் வருது... ரொம்ப சந்தோஷம். அழகு. அவசியம் ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி அக்கா பேப்பர் கிஃப்ட் பாக்ஸ் ரொம்ப அழகா ரெண்டுமே கியூட்டா இருக்கு சூப்பர் அக்கா :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ் குறிப்பு வந்திடுச்சா :). நன்றி டீம் அப்படீன்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டு போக முடியலை. நான் அனுப்பிய படங்களையும் குறிப்புகளையும் அழகாக எடிட் செய்து கோர்த்து இணைத்த உங்கள் உழைப்புக்கு ஆயிரம் நன்றிகள். நன்றி டீம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரம்ஸ். வேலன்டைன் டே தீம் பாக்ஸ் ஆச்சே அதான் இந்த கலர் காம்போ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா! இது மூன்றாவது கைவினை குறிப்பு. முதல் இரண்டும் சில வருடங்களுக்கு முன்னால் வந்துச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! ரென்டு வருஷத்துக்கு அப்புறம் அனுப்பியிருக்கேன்னு நினைக்கிறேன். மீண்டும் என்னை செய்ய வச்சு அனுப்ப வச்சதும் நீங்கதானே :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி! ஒரே பாக்ஸ்தான் கனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கிப்ட் பாக்ஸ் வித்தியாசமாகவும் அழகா இருக்குங்க. ரொம்ப அருமை வாழ்த்துக்கள் மேடம் :-)

நட்புடன்
குணா

நன்றி குணா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருமையாக செய்துருக்கீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ம்.... கவியா இது. நீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை திறமையை எங்கே ஒளிச்சுவச்சிருந்தீங்க? ஆமா இந்தோவில் இன்னா சீஸன் இப்போ? கதையும் கைவண்ணமும் அடிச்சு தாக்குது ஹி..ஹி அருமை இருக்குதுங்க..

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப அழகா இருக்கு கவி.செய்து படம் அனுப்பறேன்:)வாழ்த்துக்கள் :)

Kalai

சூப்பர், சூப்பர், சூ..ப்பர் கவீஸ்.
அரு..மை.

‍- இமா க்றிஸ்

நன்றி முசி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானேதான் ஜெயந்தி :). திறமை இருந்தால்தானே ஒளிச்சு வைக்கறதுக்கு :))

நன்றி ஜெயந்தி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கலா! சீக்கிரம் செய்து அனுப்புங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலக்கலா இருக்குப்பா...ரொம்ப பொறுமையா செய்திருக்கிங்க...வாழ்த்துக்கள்..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கவி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு:))
கலர் காமினேஷன் சூப்பர்:) இன்னும் நிறைய நிறைய கைவினைகள் கொடுக்க வாழ்த்துக்கள்பா:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றி ராஜி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அருள்! இன்னும் நிறைய செய்ய முயற்சிக்கிறேன் அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பார்த்துக்கிட்டே இருக்கலாம் அம்புட்டு அழகு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவா! பார்த்துக்கிட்டே இருக்காம செய்யுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அழகா இருக்கு. இப்படிலாம் செய்ய முதல்ல பொறுமைங்கற விஷயம் தேவை. பார்க்கிறப்பவே எனக்கு மலைப்பா இருக்கு. எப்படித்தான் இத்தனை நுணுக்கமான வேலையெல்லாம் செய்ய முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கு. வேலண்டைன்ஸ்டேக்கு ஏத்த கலர் & ஷேப். வாழ்த்துக்கள்.

ஹாய் தேவா... நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவையில் பார்ப்பதில் சந்தோஷமா இருக்கு :)

இது ரொம்ப ஈசிதான் தேவா. டிவி பார்க்கும் போது, ஃப்ரீ டைமில் பேப்பரை மடிச்சு வச்சுட்டோம்னா செய்யரது ரொம்ப ஈசிதான்.

நன்றி தேவா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப நாள் கழித்து கைவினை பக்கம் உங்க க்ராஃப்ட். கிஃப்ட் பாக்ஸ் ரொம்ப அழகா இருக்கு. கலர் காமினேஷன் சூப்பர். வாழ்த்துக்கள்.

கவி,

பேப்பர் கிஃப்ட் பாக்ஸ், ரொம்ப அழகா, ரொம்ப பொறுமையா செய்திருக்கிங்க... சூப்பர்ர்! ஹார்ட் ஷேப்பில் கலக்கலா வந்திருக்கு!! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

super super kavi

akka unmayavae romba alaga iruku.. ana enaku than innum payama iruku... olunga seiah varuma nu appa nenga epadi than senjingalo akka.. nan ipa than arusuvaikae pudhusu...ethelam patha evlo talent ungalukelam appa sup akka.. mudinja alavu try pani pathutu soldren akka...

heart paper gift box very very super. very nice.

akka a4 sheet color ah kidaikuma... nan neriah idathula ketu pathuten engaumae kidaikala... konjam enga kidaikudhunu solungalae pls.........