மேகஸின் பேப்பர் பென் ஹோல்டர்

தேதி: March 9, 2013

4
Average: 3.8 (14 votes)

 

பழைய மேகஸின் பேப்பர்ஸ்
சார்ட்
க்ளூ
கத்திரிகோல்
பெயிண்ட் - விரும்பிய நிறம்
பெயிண்ட்டிங் ப்ரஷ்
மெல்லிய கம்பி அல்லது குச்சி

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். மேகஸின் பேப்பர்களை மெல்லிய கம்பியை வைத்து சுருட்டி நீளமாக 4 குச்சிகளும், தேவையான எண்ணிக்கையில் சிறிய குச்சிகளையும் தயார் செய்து ஒட்டி வைக்கவும். சார்ட் பேப்பரில் இரண்டு சிறிய வட்டங்கள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சார்ட்டில் வெட்டிய வட்டங்களில் ஒரு வட்டத்தில் க்ளூ தடவி படத்தில் உள்ளது போல பேப்பரில் சுருட்டிய சிறிய குச்சிகளை ஒட்டி வைக்கவும். அதன் மேல் வெட்டி வைத்துள்ள மற்றொரு சார்ட் பேப்பரை ஒட்டிவிடவும்.
நீளமாக சுருட்டிய பேப்பர் குச்சிகளில் ஒன்றை எடுத்து படத்தில் உள்ளது போல வைத்து, லேசாக சார்ட்டில் ஒட்டி விடவும்.
இந்த நீளமான பேப்பரை ஏற்கனவே சார்ட்டில் ஒட்டி வைத்துள்ள சிறிய பேப்பர் குச்சிகளின் இடையே மேலும், கீழுமாக மாற்றி மாற்றி சுற்றவும். நீளமான பேப்பர் குச்சி முடியும் இடத்தில் சிறிது க்ளூ தடவி மற்றொரு நீளமான பேப்பர் குச்சியை ஒட்டி, தேவையான அளவு உயரம் வரும் வரை இதே போல் தொடரவும்.
படத்தில் இருப்பதுபோல் வரும். மேலே மீதம் இருக்கும் பேப்பர்களை உள்ளும், வெளியுமாக மடித்து ஒட்டி முடிக்கவும்.
பின் பெயிண்ட் அடித்து, விரும்பும் விதத்தில் அலங்கரிக்கலாம். பழைய பேப்பர்களில் செய்யக்கூடிய பென் ஹோல்டர் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எனக்கு அடுத்த வாரத்து க்ராஃப்ட் க்ளாசுக்கு ப்ராஜெக்ட் தயார்.
உதவிக்கு நன்றி. ;)

‍- இமா க்றிஸ்

மேகஸின் பேப்பர் பென் ஹோல்டர் ரொம்ப நல்லாயிருக்குங்க, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

கலா ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கலா அக்கா சூப்பர்... ரொம்ப அழகா செய்து இருக்கீங்க ... நல்ல கற்பனை திறன் ... வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

Kalai

இமா ஆன்டி நன்றிக்கு மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி குணா :)

Kalai

மிக்க நன்றிங்க அருள் :)

Kalai

சங்கீதா வாழ்த்துக்கு நன்றி :)

Kalai

சூப்பர் கலை. நான் ஒன்னு செய்தேன் மாலேவில் இதே போல, ஆனா கலர் பண்ணல. அங்க சில குட்டீஸ்க்கு க்ராஃப்ட்ஸ் சொல்லி கொடுத்தப்போ செய்து காட்டினேன். நீங்க கலர் பண்ணிருக்கது அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

Kalai