கோவக்காய் பக்கோடா

தேதி: March 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கோவக்காய் - 250 கிராம்
ராகி மாவு - 2 கப்
வறுத்த நிலக்கடலை (பொடித்தது) - ஒரு கப்
பொட்டுக்கடலை (பொடித்தது) - ஒரு கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4 (அ) காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை - 4 இணுக்கு
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக வைக்கவும். பொட்டுக்கடலையை அரைக்கும்போதே சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
ராகி மாவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், நிலக்கடலை மாவு, பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.
அதனுடன் வட்ட துண்டுகளாக நறுக்கிய கோவக்காய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவு கலவையை உதிர்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கோவக்காய் பக்கோடா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை :-)

வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா செய்யனும். கோவைக்காய் இங்கே கிடைக்குதே. வாழ்த்துக்கள் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருள் சுவையான வித்யாசமான பக்கோடா பார்க்கவே நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பகோடா நல்லா யோசித்து செய்து இருகீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கண்டிப்பா செய்துபாருங்க:)
பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவா வாழ்த்திற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிகவும் சத்தான உணவு .கண்டிப்பாக செய்து பார்க்கணும் நன்றி.             வாணிசேகர்.                    

சூப்பர் பா.ரொம்ப ஹெல்தியான பக்கோடா.குட்டீஸ்க்கும் நல்லது.செஞ்சி பார்த்துட வேண்டியது தான்.வாழ்த்துக்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

hi hw r u

அருள்,
சூப்பர் காம்போ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இரு முறை பதிவு

என்றும் அன்புடன்,
கவிதா

இப்ப தான் முதல் முறை கேட்கிறேன் இப்படி ஒரு காம்பினேஷன்... சூப்பர். ட்ரை பண்ணிடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா