தேதி: October 4, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாதுஷா, அனைவரும் விரும்பும் மற்றுமொரு இனிப்பு. இதை செய்வது கடினம் என்ற தவறான எண்ணத்தினாலோ என்னவோ, வீடுகளில் இதை அதிகம் தயாரிப்பதில்லை. உண்மையில் செய்வதற்கு மிகவும் எளிதான இனிப்பு இது. கொஞ்சம் பதம் பார்க்கும் திறன் வேண்டும். அது பழக்கத்தில் வந்துவிடும். முதல்முறையே எந்த உணவும் மிகச் சரியாக வந்துவிடாது. இரண்டு மூன்று முறை அதை முயற்சி செய்யும்போது பக்குவம் தானாக வந்துவிடும். அந்த வகையில் இந்த பாதுஷாவையும் முயற்சி செய்து பாருங்கள். இந்த செய்முறையில் கடினமான வேலை என்று ஒன்றும் இல்லை. பாதுஷாவை அதன் வடிவத்திற்கு மடிப்பது (பின்னுதல் என்று சொல்வார்கள்) ஒரு கலை. பொறுமையுடன் முயற்சித்தால் எளிதில் வந்துவிடும். தேவையானப் பொருட்களில் வீடுகளில் செய்யும் அளவிற்கு குறைந்த அளவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படங்களில் அதிக அளவில் தயாரிக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது. தயாரிக்கும் முறை ஒன்றுதான்.
மைதா - அரைக் கிலோ
உருக்கின டால்டா - 200 கிராம்
தண்ணீர் - 300 மில்லி
லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பாகு காய்ச்ச:
சீனி - அரைக்கிலோ
தண்ணீர் - கால் லிட்டர்












Comments
ஆலோசனை தேவை!
படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை! ரொம்ப நன்றி! ஆனால், நான்காவது படத்தில் காட்டியுள்ளபடி விரல் நகத்தால் அழுத்தி அச்சு ஏற்படுத்துவதற்கு அந்தளவு நகம் கிடையாதே, வேறு எந்த முறையில் அந்த மாதிரி அச்சு கொண்டுவரலாம்? ஆலோசனை உண்டா? ப்ளீஸ்!
பாதுஷா மடித்தல்
அதுபோல் செய்வதற்கு அச்சுகள் இருப்பதாக தெரியவில்லை. நமது ஸ்வீட் மாஸ்டருக்கும் தெரியவில்லை. விரல்களால்தான் மடித்து விடுகின்றனர். அந்த அளவிற்கு நீளமாக நகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் இருந்தால் கூட போதுமானது என்று சொல்கின்றார். பாதுஷாவை அதுபோன்றுதான் மடித்து செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வீடுகளில் செய்வதற்கு எளிமையான முறை ஒன்றையும் செய்து காட்டினார். அதன் படங்கள் கீழே உள்ளன.
<img src="files/pictures/home_1.jpg" alt="easy way" />
<img src="files/pictures/home_2.jpg" alt="easy way" />
முதல் படத்தில் காட்டியவாறு உள்ளங்கையில் வைத்து ஒரு விரலால், பாதுஷாவின் ஒரு புறத்தில், மத்தியில் குழி செய்து கொள்ளவும்.
பின்னர், இரண்டாவது படத்தில் கண்டவாறு, கை விரல்களை மடக்கி, கட்டை விரல் ஆரம்பிக்கும் இடத்தில் பாதுஷாவின் மறுபுறத்தை வைத்து, சற்று அகலமான குழி போல் செய்து கொள்ளவும்.
கடைகளிலும்கூட இப்போது இது போன்றுதான் செய்து கொடுக்கின்றார்கள். மடித்து பின்னுவது நேரம் எடுக்கும் என்பதால். இந்த செய்முறை உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
அருமை..
பாதுஷா செய்வதை கற்றுக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. Thank you very much. வரும் தீபாவளிக்கு எங்கள் வீட்டில் நிச்சயம் பாதுஷா உண்டு. உங்கள் ஸ்வீட் மாஸ்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர் பாகு செய்ய தெரியுமா? தெரிந்தால் அதையும் வெளியிடுங்கள். ப்ளீஸ்.. அப்புறம் சோன்பப்டி, மில்க் ஸ்வீட்ஸ் இப்படி நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. உதவுவீர்களா?
Thanks
Thanks a lot. I want rasagulla recipe with illustrated photos. Please ..
thank you so much.
பாபு அவர்களூக்கு படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை!thank u so much.
லெமன் சால்ட் என்றால் என்ன?
sajuna
Thank u very much!
Thank u very much!
நன்றி
அனைவருக்கும் நன்றி. சகோதரி ஈஸ்வரி அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதில் எமக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு எப்படி செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் ஸ்வீட் மாஸ்டரின் நெய் மைசூர் பாகும் நாவில் போட்டால் கரைந்து போகக்கூடிய அளவிற்கு மென்மையாகவும், இனிப்பாகவும் இருக்கும். உங்களுக்காக அடுத்த குறிப்பு, "நெய் மைசூர்பாகு" !!
லெமன் சால்ட்
லெமன் சால்ட் என்பது எலுமிச்சை எண்ணெய்யுடன் கலந்து, சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் உப்பு. எலுமிச்சை மணம் இருக்கும். இதன் தயாரிப்பில், சிட்ரிக் அமிலம், அஜினோமோட்டா போன்றவை பயன்படுத்தப்படுகின்றது என்பது தெரிகின்றது. இது குறித்து மேலும் விபரங்களை பிறகு திரட்டி வெளியிடுகின்றோம்.
லெமன் சால்ட் என்ற பெயரிலேயே இது கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. வாங்கிப் பயன்படுத்தவும்.
லெமன் சால்ட்
தெரியாத ஒன்றை
தெரிந்து கொன்டேன்.உடன் விளக்கம் தந்ததர்க்கு நன்றி
sajuna
இன்று தான்
இன்று தான் நான் பாதுஷா செய்து பார்த்தேன்,ஆனால் எண்ணெயில் பாதுஷாவை போட்டும் அது மேலே வரவில்லை.ஏன்?
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
பாதுஷா
பாதுஷாவை நேரடியாக அடுப்பில் உள்ள எண்ணெய் சட்டியில் போடக் கூடாது. முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் சிறிது மாவை கிள்ளிப் போட்டால் பொரிபொரியாக வரவேண்டும். அந்த அளவிற்கு சூடு செய்து கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
இப்போது அனைத்து பாதுஷாக்களையும் எண்ணெய்யில் போடவும். போட்டவுடன் அவை அடியில் சென்று தங்கிவிடும். அதன்பின்னர் ஒரு சாரணியைக் கொண்டு எண்ணெய்யின் மேல் அழுத்தி, அழுத்தி எடுக்க வேண்டும். அதாவது அலை உண்டாக்குவது போல் செய்ய வேண்டும். எண்ணெய் தெறிக்காதவண்ணம் கவனமாக செய்யவும். சில நிமிடங்கள் இப்படி செய்யும்போது பாதுஷாக்கள் வெந்து ஒவ்வொன்றாக மேலெழும்பி வரும். அவற்றின் நிறம் வெண்மையாக இருக்கும். எல்லா பாதுஷாக்களும் மேலே வந்தபிறகு மீண்டும் வாணலியை தூக்கி அடுப்பில் வைத்து சூடேற்றி, பாதுஷாக்கள் பொன்னிறமாக சிவக்கும் வரை வேகவைத்து எடுக்கவும்.
பாதுஷா
திரு அட்மின் அவர்களுக்கு,
பாதுஷாவை லெமன் சால்ட் இல்லாமல் செய்யலாமா?
நன்றி,
சுகன்யா
லெமன் சால்ட்
லெமன் சால்ட் சுவையூட்டுவதற்காக சிறிதளவு சேர்க்கப்படுகின்றது. மற்றபடி பாதுஷாவிற்கு அது அத்தியாவசியமான பொருள் அல்ல. அது இல்லாமல் செய்தீர்கள் என்றால், அதனால் கிடைக்கும் சுவை கிடைக்காமல் போகும். அவ்வளவுதான்.
லெமென் சால்ட்
மிக்க நன்றி அட்மின் அவர்களே. நான் இங்கு கடைகளில் கேட்டுபார்கிரேன். அனேகமாக இந்தியன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்ரு நினைக்கிறேன். அப்படி கிடைக்காத பட்சத்தில் லெமென் சால்ட் உபயோகிக்காமல் செய்யலாமா என்று தெரிந்துகொள்ள கேட்டேன்.
நன்றி,
சுகன்யா
பாதுஷா
திரு அட்மின் அவர்களுக்கு,
நான் பாதுஷா ட்ரை செய்தேன், மிகவும் அருமையாக வந்தது. நான் டால்டாவிற்கு பதில் வெண்ணெய் உபயொகித்தேன். படத்துடன் கூடிய செய்முறை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. என்னை போன்று வெளிநாட்டில் வாழ்வோருக்கு, உங்கள் வலைதளம் மிகவும் உதவியாக உள்ளது. இது போல் நிறைய செய்முறை கொடுத்து உதவவும். பாதுஷா சுற்றும் முறை கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, ஆனாலும் விக்ரமாதித்தன் போல் மனம் தளரா முயற்சி கைவிடவில்லை. அடுத்தமுறை இன்னும் நன்றாக வரும் என்று நம்முகிறேன்.
நன்றி,
சுகன்யா
நன்றி,
சுகன்யா
badusha
Badusha came out very well.Thanks very much for the recipe with pictures.I used crystallized lemon instead of lemon salt.This is available in the baking section of the grocery store.
பாதுஷா
சகோதரி சுகன்யா கார்த்திக் அவர்கள், தான் தயாரித்த பாதுஷாவை படம் எடுத்து அனுப்பியுள்ளார். படத்தில் பார்க்கும்போதே மிக நன்றாக வந்திருப்பது தெரிகின்றது. முதல் முறையிலேயே இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இன்னும் இரண்டு, மூன்று முறை செய்தால் அவர் பாதுஷா எக்ஸ்பர்ட் ஆகிவிடுவார்.
பாராட்டுகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாய்ப்புகள் இருப்பின், நீங்களும் உங்கள் தயாரிப்புகளைப் படம் எடுத்து அனுப்பலாம்.
சகோதரி சுகன்யா கார்த்திக் தயாரித்த பாதுஷா
<br /><br /><img src="files/pictures/badhusa.jpg" alt="Badhusa" />
பாதுஷா
திரு அட்மின் அவர்களுக்கு,
உங்கழுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி.
நன்றி,
சுகன்யா
பாதுஷா
தேங்க்ஸ் பாதுஷா செய்வதை கற்றுக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இப்போதுதான் நிறைவேறியுள்ளது, படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை, கடையில் வாங்கும் சுவையிலையை இருந்தது :)
நன்றி . சுற்றுவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது , முள் கரண்டி வைத்து மேதுவாக அழுத்தினால் அதே மாதிரி வந்தது . விரைவாகவும் செய்யமுடிந்தது . என் மகளுக்கு ரொம்பவும் பிடித்துஇருந்தது , நன்றி அட்மின்
சோடா உப்பு இல்லாமல்
அட்மின் அண்ணா,
சோடா உப்பு இல்லாமல் பாதுஷா செய்யலாமா? இன்று செய்யலாமென்று இருக்கேன், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரிகளே.
அஃப்ரா
பாதுஷா நன்றாக இருந்தது
அட்மின் அண்ணா
நேற்று முன் தினம் பாதுஷா செய்தேன். சோடா உப்பு இல்லாமலும் நன்றாக இருந்தது நன்றி
அஃப்ரா
பாதுஷா
திருமதி. அஃப்ரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பாதுஷாவின் படம்
<img src="files/pictures/badhusha.jpg" alt="Badhusha" />
பாதுஷா
திருமதி. ஸ்ரீகீதா (மஹிஸ்ரீ) அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பாதுஷாவின் படம்
<img src="files/pictures/badhusha_mahi.jpg" alt="Badhusha" />
Anitha
Hi,
for this diwali i made badusha.... it came out well and got appreciated from my family and relatives.. Thank u for ur step by step explaination recipe photos.. its really help full. 1/2 kg maida i used from that i got 50 badusha came. i didnt use lemon salt.
டியர் அட்மின்
டியர் அட்மின்.
நேற்று இந்த முறைப்படி பாதுஷா செய்தேன்.
எனக்கு பாதுஷா ரொம்ப பிடிக்கும். முதல் தடவை செய்றதால சுமார தான் வரும்னு நினைச்சேன். ஆனா சூப்பரா வந்தது. ஸ்வீட் கடைகளில் வாங்குற பாதுஷா போலவே இருந்தது.
எங்க வீட்ல ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. இந்த ரெசிபி குடுதவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதில் வனஸ்பதிக்கு பதிலா பட்டர் சேர்த்து செய்தேன். விரலால் அச்சுகள் செய்ய தெரியவில்லை, போர்க் உதவியால் அச்சு நன்றாகவே வந்தது. மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
பாதுஷா
அட்மின் அண்ணா, எனக்கு இந்த பதிவில் உள்ள படங்கள் டிஸ்ப்லே ஆகவில்லை. படங்கள் டிஸ்ப்லே ஆக என்ன செய்ய வேண்டும்? Easy way என்று மட்டும் வருகிறது.
படங்கள் இருந்தால் தீபாவளிக்கு இந்த இனிப்பு செய்ய ஆசையாக இருக்கிறது.உதவுங்களேன் ப்லீஸ்.