வலி ஊசி மூலம் குழந்தை

அன்பு சகோதரிகளுக்கு நான் நிறை மாத கர்பம். 13/3/2013 எனக்கு டிவ் டேட் அனால் இப்பவரைக்கும் எனக்கு வலி வரவில்லை. குழைந்தை தலை நன்கு இரன்கி உள்ளது பொசிசன் எல்லாம் நார்மல்.வரும் செவ்வாஇ கிழமை வலி ஊசி மூலம் வலி உன்டு பன்னி டெலிவரி ப்ன்னனும் சொன்னாஅங யனக்கு பயமாக உள்ளது. வலி தானாக வழி சொல்லுன்கல் தயவு செஇது.

விஜி,

You tube ல் போய் Pelvic floor exercise என்று தட்டிப் பாருங்கள், அதை செய்து பாருங்கள்,மேலும் நன்றாக நடங்கள்,இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது,அதனால் பெரிதளவில் மாற்றங்கள் வரலாம் என்று சொல்வதற்கில்லை,அதே சமயம் வலி வருவதற்க்கும் வாய்ப்புள்ளது,எதுவாயிருந்தாலும் மன தைரியம் தான் முக்கியம்.

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

விஜி உங்களுக்கு பதில் சொல்லும் முன் வாணி... என்னை மன்னிச்சுடுங்க.

விஜி... இந்த சமயம் நீங்களா வீடியோ பார்த்து எல்லாம் உடற்பயிற்சி செய்வது சரியல்ல. இந்த பயிற்சி எல்லாம் மருத்துவர் சொல்லி சரியான வழிகாட்டலோடு செய்யப்பட வேண்டியது. இதுவரை வலி வராத பட்சத்தில் மருத்துவர் ஆலோசனைப்படி செய்யுங்கள். உங்களுக்கு எது சரி எது சரியல்ல என்று சொல்ல அவரே சரியானவர். அதுவே எந்த பிரெச்சனையும் இல்லாமல் இருக்க வழி செய்யும். எல்லாம் நலமாக நடக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜி,வனிதா,

நம் ஊரில் மகப் பேறு மருத்துவர் போன்று இங்கு (UK) MIDWIFE.அவர்களின் அட்வைஸின் பேரில் தான் நாங்கள் இந்த பயிற்ச்சிகளை கர்ப்பக் காலத்தில் மேற்க் கொள்கிறோம்,அந்த அனுபவத்தில் தான் நான் இந்த பதிவையிட்டேன்,இந்த பயிர்ச்சிகளை செய்வதால் PELVIC என்கிற இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும் மேலும் நான் ஒன்றும் இந்த பயிற்ச்சிகளை மேற்க்கொள்வதால் இரண்டு நாளைக்குள் வலி உறுதியாக வந்து விடும் என்று சொல்லவும் இல்லை.

நம் முன்னோர்கள் குனிந்து நிமிர்ந்து நன்றாக வேலை செய்தார்கள்,வலி வந்து பெற்றார்கள். ஆனால் நம் காலத்தில் வேலைகளையெல்லம் மின்கருவிகள் செய்துவிடுவதால்,நாம் இப்படி பயிற்ச்சிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளது.

வீடியோவில் Step by step பொறுமையாக விளக்கியிருப்பார்கள்,வீடியோ பார்த்து இந்த பயிர்ச்சிகளை மேற்க் கொள்வதால் எந்த பிரச்சனையும் வந்ததாக இல்லை.
டியு டேட் கழிந்தும் 2 வாரம் வரைக்கும் நாங்கள் இந்த பயிர்ச்சியை செய்துள்ளோம்.அதன் பின்பும் வலி இல்லையென்றால் தான் எங்களுக்கு வலி ஊசி போடுவார்கள்.

சகோதரிகளின் அன்பிற்கு மிக்க நன்றி

ஊசி போடப் பயமா!! ஏற்கனவே வாக்சீன் எல்லாம் எடுத்திருப்பீர்களே!

//வலி தானாக வழி சொல்லுன்கல் தயவு செஇது.// உங்கள் வினாவிலேயே பதில் இருக்கிறது. நீங்களாக எதையாவது செய்து வலி வந்தால் அதை எப்படித் 'தானாக வந்த வலி' என்று கொள்ளலாம்!!!!!

//நிறை மாத கர்பம்// என்றால் இதற்கு மேல் 'உங்கள்' வைத்தியரது ஆலோசனை 'மட்டுமே' சரியானதாக இருக்கும் சகோதரி. //தலை நன்கு இரன்கி உள்ளது பொசிசன் எல்லாம் நார்மல்.// இனி வலி தானாக வரட்டும். மருத்துவர் ஆலோசனையில்லாமல் வீட்டு வைத்தியம், புதிதாகப் பயிற்சி என்று ரிஸ்க் எடுக்காதீங்க. பலனில்லாவிட்டால் கூடப் பரவாயில்லை; இசகுபிசகாக எங்காவது பிடித்துக் கொண்டால் சிரமம். ஆரம்பத்திலிருந்து பயிற்சிகள் செய்பவர்களுக்கு உடல் அதற்கேற்றாற் போல் விட்டுக் கொடுக்கும். ஏற்கனவே பயிற்சிகள் செய்துவருபவராக இருந்தால் உங்களுக்கே அடுத்து என்ன செய்வது என்கிற அறிவுறுத்தல் கிடைத்திருக்கும்.

நீங்களாக எதையாவது முயற்சித்திருந்து அதன் காரணமாக வலி வந்தது என்று நம்பினால் மருத்துவமனைக்குச் செல்லும் போது அதைப் பற்றி கட்டாயம் குறிப்பிடுங்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்தாவிட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்குத் தெரிந்திருப்பது உங்களுக்கு நல்லது.

பிரசவம் பெண்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உயரம், நிறை, குழந்தை அளவு, ஜீன்ஸ், செய்யும் வேலைகள், உடல்நிலை... இன்னும் பல வேறுபாடுகள் எம்மிடையே. ஒருவரது அனுபவம் இன்னொருவருக்கு உதவாது. சொல்லப் போனால்... உங்களுக்கே அடுத்த குழந்தைக்கு வேறுவிதமான அனுபவம் அமையலாம். பயம் வேண்டாம். அமைதியாக இருங்கள்; தயாராக இருங்கள்.

இந்த இடுகை பதிவாகும் சமயம் உங்களுக்கு பிரசவம் ஆகி இருக்கலாம். என் பதில் தேவையில்லாததாக இருக்கலாம். பின்னோரு காலம் யாராவது தேடி வந்தால் படிக்கட்டும் என்று பதிவிடுகிறேன். :-)

சுகமாக, ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ஹலோ விஜி ஒன்னும் கவலைபடாதிங்க.எனக்கும் இப்படி தான் இருந்தது.date கொடுத்து 3 நாள் ஆகியும் வலி வரவில்லை..டாக்டர் அட்மிட் ஆக சொல்லிட்டாங்க...அதுக்கப்பரம் வலி வந்துச்சு.அதோடா அதா ஊசி போட்டாங்க...அப்பரம் தான் குழந்தை பிறந்தது.நார்மல் டெலிவரி ஆச்சு.வீட்டுக்குள்ளேயே நடந்து கொடுங்கள்.தண்ணீர் குடிங்க...பயப்பட வேன்டாம் தோழி.நம்பிக்கையோட இருங்கள்.நல்லதே நடக்கும்.வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்