பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"

தோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு
*** "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?" ***
இது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....
வந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.

*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாங்கோ வாங்கோ.......பட்டி இனிதே ஆரம்பித்தாயிற்று.சீக்கிரம் வந்து அணித்தேர்வு செய்து வாதங்களை பதிவிடுங்கோ.....

சினிமாதுறைக்கு..ஏன்னா மக்களை சீக்கிரம் சென்று அடையுது அதை எளிதில் நம்பிடறாங்க அதே சமயம் பொறுப்பே இல்லாமல் இருப்பதும் அவங்க தான்.ஒரு குழந்தையை கொலைகாரனா மாத்தும் அளவு கொடூரங்களை எளிமையாக்கிக் காட்டுவது யாராலும் முடியாது...கழுத்தறுப்பு சீனை காண கூட குழந்தைகளோடு பெற்றோரை தியேட்டரில் வர வைக்கும் குணம் சினிமாவுக்கு உண்டு.

பட்டியின் முதல் நபர் வாதம் சினிமாத்துறைக்கு பதிந்துள்ளதா...! உண்மைதான்,ரைம்ஸ் மனதில் பதியுமுன் வொய் திஸ் கொலைவெறி மனதில் பதிஞ்சிடுதே...?! மேலும் உங்களின் வாதங்களுக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க

தலைப்பை தந்த நம்ம அண்ணனுக்கும், அதை தேர்வு செய்து தைரியமா உட்கார்ந்திருக்கும் நடுவருக்கும் வணக்கம்... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ;)

தொடர்ந்து வாதிட முடியுமோ தெரியாது... ஆனா அணி இது தான். “அதிகாரத்துறைக்கே”. இவங்க சரியா இருந்தா எல்லாமே சரியாகும். தவறுகளை கண்டதும் கண்டிக்கும் அதிகாரம் உள்ளவர்கள் கண்டிக்க தவறினால் குற்றங்கள், தவறுகள், தப்புகள் அதிகமாகும்... அது சமூகத்தை அழித்து விடும். அதனால் பொறுப்பாக நடக்க வேண்டியவர்கள் இவர்களே. உதாரணமா... ரோட்ல ஹெல்மட் இல்லாம போறவனை பிடிச்சு அப்பவே சட்டப்படி ஆக்‌ஷனெடுத்தா அடுத்த முறை அவன் கட்டாயம் ஹெல்மட் போடுவான்... பல நேரம் அது அவனை காப்பாற்றவும் செய்யும். அவனை பிடிச்சு 50 ரூபாயை வாங்கிட்டு அனுப்பினா? அடுத்த முறை 50 ரூபாய் தானே சிக்கினா என தப்பு தொடரும். சின்ன உதாரணம் தான்... இங்கே கண்டிக்க கூடிய அதிகாரம் உள்ளவர் காவல் துறை... அவருடைய போக்கு சரி இல்லைன்னா சமூகத்தில் நடக்கும் ரூல்ஸ் வயலேஷன் நடந்துட்டே தான் இருக்கும். லஞ்சம் வாங்கும் அவரை கண்டிக்கும் அதிகாரம் உள்ளவர்களும் தவறு செய்தால்??? நாடே காணாம போகும். நேரம் கிடைக்கும் போது வாதங்களோடு எட்டி பார்க்கறேன். பை பை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க அதிகாரத்துறைக்கே அணியா?(தைரியமாவா? மனசு இன்னும் ஸ்டெடியாவலப்பா...... வெளிப்படுத்தப்பிடாதுள்ள அதான்,நல்ல புள்ளைங்களா பதிவிட்டு நடுவருக்கு தெம்பு கொடுக்கோனுமாக்கும்) அது என்ன வரமுடிந்தால் கண்டிப்பா வரனும் வாதங்களோட. சின்ன தவறுன்னு கண்டுக்காம விட்டா அது பெரிய வேதனையில் முடியுமாமே...! மேலும் வாதங்களோட வாங்க.

சமூகப் பொறுப்பு கண்டிப்பாக கல்வித்துறைக்கே உள்ளது. இன்று மாணவர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் ” இலங்கைக்கு எதிராக நம் மாணவர்கள் பலர் போராடிக் கொண்டிருப்பது தான்.

சமூகப் பொறுப்பு என்பது திடீரென தோன்றுவது அல்ல. அது சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஊட்டப்படுகிறது

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

அன்பு நடுவரே !, நல்லதொரு தலைப்பு, நிறைய பாயிண்ட்ஸ், சிந்திக்கவைக்கும் கருத்துகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

அதிகாரத்துறையோ , சிநிமாதுறையோ முரண்பாடுகள் நிறைந்தது. முறையான வழிகாட்டுதல் கல்வித்துறையால் மட்டுமே சாத்தியப்படும். ஒவ்வொரு தனிமனித சிந்தனையின் கலவையே சமூகம். யார் ஆதிக்க மனப்பான்மையோடு இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தார் போல ஒரு பிம்பம் தோன்றுகிறது. அதிகாரத்துரையின் கருத்துக்கள் , சினிமாத்துறையின் எண்ணங்களோ நம் மீது திணிக்கப்படுகின்றன, அதில் எது சரியானது, எது தவறானது, எப்படி அணுக வேண்டும்,என்று கைட் பண்ண வேண்டிய ஒரு பொறுப்பு கல்விதுரைக்கே (அம்மாவிலிருந்து ஆசிரியர் வரை ) உண்டு.

மேலும் சொல்ல அப்புறம் வரேன்.

பட்டி நடுவருக்கு அன்பான வணக்கங்கள்...... சிறந்ததொரு தலைப்பு....... தேவையான விவாதமும் கூட........... வாழ்த்துக்கள்,..... நான் "கல்வி துறைக்கே"எனும் சில கருத்துகளை பகிர்கிறேன்...........
கல்வி என்பது சிறு வயது முதலே பொறுப்புகளையும், பண்புகளையும் மனதில் விதைப்பது.... பசுமரத்திலே தானெ ஆணி நன்கு பதியும்.... ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் முதல் படி(பொறுப்பு) கல்வி தானே............ மாணவ சமுதாயம் முன்னேறினால் அவர்களுடைய வீடும், நாடும் சிறப்படையும் அல்லவா..........
தோழி சொன்ன உதாரணத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று சட்டபடி தண்டனை பெற்றாலும் (பைன் கட்டி) மீண்டும் செய்யும் வாய்ப்பு (பைன் தானே கட்டி விடலாம் என்ற அலட்சியம் அல்லது வேறு ரோட்டில் சென்று தப்பிப்பது) அதிகமே........ ஆனால் இதுவே தன் மகனோ மகளோ எடுத்துரைத்தால், நிச்சயம் மனதில் உரைக்கும் அல்லவா............. இது சிறு உதாரணம் தான்... இது போல் எத்தனையோ...... குடிகார தந்தையை குடியில் இருந்து மீட்டெடுத்தாள் என் தோழி......... கல்வி துறையின் சமூக பொறுப்பானது நம் இளைய தலைமுறையின் சமூக பொறுப்பை மேம்படுத்த கூடும் என்பதால் கல்வி துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.......

தற்போது நடக்கும் குற்றங்களில் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் அதிகம் இடம் பெறுகின்றனர்.......... கல்விமுறை மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமெ இந்நிலை மாறும்.......இந்தியா மேலும் சிறப்புறும்....
தற்போதைய அதிகாரத்துறை என்பது பால் போல... அதில் எவ்வளவுதான் பொறுப்புடையவர்கள் இருந்தாலும் ஒரு துளி விஷமாய் இருக்கும் சில மனிதர்களால் கலங்கி தான் இருக்கிறது.... விஷத்தை பாலில் இருந்து பிரிப்பது நடக்காத காரியம் அல்லவா... ஆனால் புது பாலை விஷம் கலக்காமல் பாதுகாப்பது அதாவது இனி பொறுப்பிற்கு வரும் புதியவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பொறுப்பு கல்வி துறைக்கே அதிகம்!

நீங்க கல்வித்துறைக்காக வாதாடப்போரீங்கலா பலே ,

///சமூகப் பொறுப்பு என்பது திடீரென தோன்றுவது அல்ல. அது சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஊட்டப்படுகிறது///
கண்டிப்பா சிறுவயதில் மனதில்பதிவதுவே காலகாலத்துக்கும் நிலைக்கும்னு சொல்றாங்க கல்வித்துறை அணியினர்.

நீங்களும் கல்வியே அணியா? வாழ்த்துக்கள்.
///அதிகாரத்துரையின் கருத்துக்கள் , சினிமாத்துறையின் எண்ணங்களோ நம் மீது திணிக்கப்படுகின்றன, அதில் எது சரியானது, எது தவறானது, எப்படி அணுக வேண்டும்,என்று கைட் பண்ண வேண்டிய ஒரு பொறுப்பு கல்விதுரைக்கே (அம்மாவிலிருந்து ஆசிரியர் வரை ) உண்டு.///
யார் என்ன சொன்னாலும் சுயமாய் செயல்பட கல்வியறிவு அவசியனும் அதனால் கல்வித்துறைக்குதான் பொறுப்பு அதிகம்னும் சொல்லிருக்கீங்க.பார்ப்போம் உங்களின் எதிரணிகள் எப்படி பாயிண்ஸ் கொண்டுவராங்கன்னு....மீண்டும் வாங்க வாதங்களுடன்.

மேலும் சில பதிவுகள்

..