சளி பிடித்திருக்கும்போது கீரை சாப்பிடலாமா

ஹாய் தோழிகளே, எனக்கு 1 வயது பெண் குழந்தை உள்ளது. அவளுக்கு அடிக்கடி சளி பிடிக்கறது. நான் டாக்டர் சொன்ன படி T-minic ட்ராப்ஸ் கொடுத்தாலும் குறைவதில்லை. நான் எண்ணையில் கற்பூரம் சேர்த்து தடவுவது, விக்ஸ் தடவுவது, nasal drops எல்லாமே முயற்சித்து பார்த்து விட்டேன். சரியாக வில்லை. வேறு எதாவது கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே. அத்துடன் சளி பிடித்திருக்கும்போது என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் ப்ளீஸ்

அவளுக்கு கீரை , பழ சாறுகள் கொடுக்கலாமா? கிரீம் biscuits கொடுக்கலாமா? உதவுங்கள் தோழிகளே.

நன்றியுடன் ,

மகாசங்கர்

டாக்டரிடம் கேட்டு வைட்டமின் சி மருந்து கொடுத்துப் பாருங்கள்.

கீரை தாராளமாக உண்ணலாம்,பழச்சாறு ஐஸ் இல்லாமல் கொடுக்கலாம்,பழசாற்றில் வைட்டமின் சி உள்ளது,

சளி பிடித்திருக்கும் போது இனிப்பு கொடுத்தால் தொடர்ந்து இருமல் வரும்.

கவனிக்க :இனிப்பிற்க்கும் சளிக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் இருமல் வரும்.

Fரெஷ் மில்க் ஆஞ்சு இல்ல அறு துளசி இழை பொட்டு சுட வச்சு குடுக்கனும்

When your in cold u better to take drumstick keerai(. Murugai keerai) it is good in that time

ஹாய் தோழிகளே, எனது சந்தேகம் தீர்ந்தது. பதில் சொன்ன தோழிகள் அனைவருக்கும் மிகவும் நன்றி

மகாசங்கர்

மேலும் சில பதிவுகள்