6 மாதம் வளர்ச்சி கம்மி

எனக்கு இப்போ 6 மாதம் ஆரம்பம் ஆனா வளர்ச்சி கம்மியா இருக்கு 15 நாள் கலிச்சி வர சொல்லிருக்காங்க..90 கிராம் கம்மியா இருக்காம்,ஸ்கேன்ல பாப்பாவ பாத்தோம் நல்லா இருந்தது ஆனா ஒரு கையை மட்டும் காட்ட மாட்டைக்குது,இதனால எதும் பிரச்சனையா இந்த அனுபவம் யாருக்காவது இருந்தா பதில் சொல்லுஙக.................

மனசை போட்டு குழப்பிக்காதீங்க நிறைய பேர் இப்படி தான் சொல்லி எந்த குறையுமில்லாம குழந்தை பிறந்திருக்கு..எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு ரொம்பவும் எடை குறைவான குழந்தை பிறக்குமென்று சொல்லி அவள் குழந்தை பிறக்கும்போது 4 கிலோ..குழந்தையின் பொசிஷன் வேற நிலையில் இருந்திருக்கலாம்..இதுக்கெல்லாம் மனசை குழப்பிக்காதீங்க எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்குங்க

நன்றி தாலிகா

ஹாய் முதலில் உங்களுக்கு என்னுடய வாழ்த்துகள்
காவலைப் படாமல் சந்தோசமா இருங்க குழ்ந்தை கடைசி மாதத்தில் தான் வேகமாக வளருவாங்க நிறய ப்ரோகோழி சாப்பிடுங்க இது இரத்தோட்டம் அதிகருக்கும்
யோசிக்கம சந்தோஷமா இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்
ப்ய்
மித்ரா

thanks mithra..protein food sapta sollirukkanga atha follow panran..neenga sonnathaium sapduran..

நான் amway protein powder and mother horlicks சாப்டறேன் ..நிங்களும் ட்ரை பண்ணி பாருங்க ..எனது முதல் குழந்தைக்கும் வெயிட் கம்மியாதான் இருக்குன்னு சொன்னங்க .அப்புறம் தினமும் சத்துமாவு கஞ்சி சாப்பிட்டேன் .. கேழ்வரகு அடை,கஞ்சி சேர்த்துக்கிட்டேன் .. நிங்களும் ட்ரை பண்ணி பாருங்க ..வாழ்த்துக்கள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்