பனிக்குடம் உடைந்தால்

நான் இப்போ 6 மாத கர்ப்பிணி (2 வது குழந்தை) ..இன்னும் சில மாதங்களில் அம்மா வீட்டுக்கு போய்டுவேன் .. எனக்கு ஒரு சில சந்தேகம் இருக்கு .. தோழிகளே நீங்கள் தான் தீர்த்து வைக்கணும் ப்ளீஸ் ....

பனிக்குடம் உடைந்த எவளவு நேரத்தில் டாக்டர் கிட்ட போகணும் (எனக்கு 1 அரை மணி நேரம் ஆகும் hospital போக )லேட் அனால் என்ன ஆகும் ..

இரவில் கால் நரம்பு திடீர்னு இழுத்து கொள்கிறது என்னால் வலி தாங்க முடில காலை நீட்ட முடிய வில்லை சிறிது நேரம் கழித்து தான் சரி ஆகிறது .. இது என்ன பிரச்னைநு சொல்லுங்க ப்ளீஸ் ...

பிரசவ வலி வந்து கிட்ட தட்ட 2 மணி நேரம் வரை பயணித்து hospital போக முடியுமா ? உங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

//பிரசவ வலி வந்து கிட்ட தட்ட 2 மணி நேரம் வரை பயணித்து hospital போக முடியுமா ?// இது பதில் சொல்ல இயலாத கேள்வி சகோதரி. அந்தச் சமயம்தான் தெரியும்.
//பனிக்குடம் உடைந்த எவளவு நேரத்தில் டாக்டர் கிட்ட போகணும் (எனக்கு 1 அரை மணி நேரம் ஆகும் hospital போக )// கேள்வி குழப்பமாக இருக்கிறது. வலி வந்தால் பயணிக்க 2 மணி ஆகும்; பனிக்குடம் உடந்தால் அரை மணியா? பனிக்குடம் உடைந்தாலும் நேரே மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும்.

//லேட் அனால் என்ன ஆகும்// எதுவும் பிரச்சினை ஆகாமல் பிரசவித்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் 100% பிரச்சினை இல்லை என்று யாரும் யாருக்கும் சொல்ல இயலாது. ட்ரிப்ளிங் மட்டும் இருந்து வலி இல்லையென்றால் என்ன செய்வது என்பதை தேவையைப் பொறுத்து ஹாஸ்பிட்டலில் முடிவு செய்வார்கள்.

என் அறிவுரை... இத்தனை பயமாக இருந்தால் பிரசவ தேதிக்கு சமீபமாகும் போது மருத்துவ மனைக்கு அருகே ஒரு ரூம் பார்த்து இருக்கலாம். நீங்கள் கவலை இல்லாமல் இருக்கிறது முக்கியம் இல்லையா?

‍- இமா க்றிஸ்

முதலில் எனக்கு ஆதரவாக வந்து பதில் அளித்ததற்கு மிக்க நன்றி ... எங்கள் ஊரில் இருந்து hospital போக 1 1/2 முதல் 2 மணி நேரம் ஆகும் அதனால் தான் கேட்டேன் .. வலி வந்தோ அல்லது பனிக்குடம் உடைந்தலோ என்ன செய்வது என்றுதான் குழப்பம் ..நீங்க சொல்வது போல பிரசவத்துக்கு சமீபத்தில் ரூம் எடுதுத்து தங்கலாம் நு தான் நினைத்து இருக்கேன் .. ஆனால் என்ன நடக்கும் நு தெரில .. முதல் குழந்தையும் பார்த்துக்கணும்..ஸ்கூல் அனுப்பனும் ..அதான் குழப்பம்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

7 ஆம் மாதம் கடைசியில் பனிக்குடம் உடைந்து 9 மாதம் முதல் நாள் பிறந்தான் என் மகன். எனக்கு பனிக்குடம் உடைந்து 1மாதம் கழித்து தான் அறுவை சிகிச்சை செய்தார்கள். தண்ணி தான் குடித்து கொண்டே இருந்தேன். தண்ணி லெவல் குறையாம பார்த்துக்க சொன்னாங்க. தண்ணி குடிச்சிகிட்டே டாக்டர் -ட்ட போய்டுங்க. லேட் பண்ணிடாதிங்க.

திவ்யா 7 மாதமே பனிக்குடம் உடைந்துச்சா ...ஆச்சர்யமா இருக்கு ...பனிக்குடம் உடைந்ததால் தான் அறுவை சிகிச்சை செய்தார்களா ? ..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்