காகிதக் கூடை

தேதி: March 23, 2013

4
Average: 3.7 (13 votes)

 

இரண்டு நிறங்களில் A2 ஷீட்ஸ் - 20
கத்தரிக்கோல்
பைண்டர் கம் (அ) சிலிக்கோன் கம்

 

விருப்பமான இரண்டு நிறங்களில் A2 ஷீட்ஸை எடுத்துக் கொள்ளவும்.
20 பேப்பரையும் 3 இன்ச் அகலத்தில் படத்தில் காட்டியவாறு நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய பேப்பர் ஒன்றையெடுத்து இரண்டு பக்கமும் உள்நோக்கி மடித்து, மீண்டும் ஒருமுறை இரண்டு பக்கங்களையும் சேர்த்து மடித்து கால் இன்ச் அகலமான ஸ்ட்ரிப்பாக மடித்துக் கொள்ளவும். இதேபோல் நறுக்கிய பேப்பர்கள் அனைத்தையும் மடித்து வைக்கவும்.
மடித்த ஸ்ட்ரிப்பை விரலிலோ அல்லது சிறிய டப்பா ஒன்றிலோ சுற்றி, கடைசியாக கம் தடவி ஒட்டிவிடவும்.
ஒட்டிய பின் வளையம் போல் கிடைக்கும்.
அதனுடன் மற்றொரு நிற ஸ்ட்ரிப்பை ஒட்டி சுற்றவும். இதேபோல் இரண்டு நிறங்களிலும் மடித்த ஸ்ட்ரிப்பை அடுத்தடுத்து ஒட்டி கூடையின் அடிப்பகுதியை செய்து முடிக்கவும்.
கூடையின் மேல் பக்கத்திற்கு, முதலில் செய்தது போல் இரண்டு நிறங்களிலும் தனித்தனி வளையமாக செய்து படத்தில் உள்ளவாறு ஒவ்வொன்றாக கம் தடவி ஒட்டவும்.
தொடர்ந்து நிறத்தை மாற்றி மாற்றி விரும்பியவாறு ஒட்டிக் கொள்ளவும்.
ஒட்டி முடித்ததும் உள்பக்கம் இவ்வாறு இருக்கும்.
கண்ணைக் கவரும் அழகிய காகிதக் கூடை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

காகிதக் கூடை வெகு அருமை. நிறத் தெரிவும் அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

பாராட்டுக்கு நன்றி. இரண்டு நிறங்களும் எனக்கு மிகவும் பிடித்தமான நிறங்கள்.

unmaiyahave kannai kavarhiradhu.., ieny kodai thedi kadaihalil alaya vendam romba superb shana ...:-)

ரொம்ப அழகா இருக்குங்க... கலர்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரட்டுக்கு மிகவும் நன்றி afsya.எல்லோருக்கும் உபயோகமான பொருள் என்பதால் மிகவும் மகிழ்ச்சி தான்.

vanitha..உங்களுக்கும் மிகவும் நன்றி.பல்வேறு நிறகாகிதத்தை பயன்படுத்தி செய்வதால் மேலதிக வேலைப்பழு இல்லாமல் அப்படியே யூஸ் பண்ணிக் கொள்ளலாம்

chanceless...very nice..

அழகான கலர்ஸ்,அழகான கூடை.வாழ்த்துக்கள் :)

Kalai

vithiyamadhan..உங்கள் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.

நான் இந்த தளத்துக்கு புதிது.இப்போது தான் உங்கள் எல்லோரினதும் அறிமுகம் கிடைத்திருக்கிறது.மகிழ்ச்சி.
வாழ்த்துக்க​ளைத் தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி.

naanum intha thalathukku pudiduu...ungal arimugathuku nadri...

Very beauty full mam, I like this. Thank u

Very nice. . .
Enakum ithu mari ellam seiya Asai. Naan enna seivathu?

romba nalla iruku color combination and craft

if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open

by
Indra raj