புட்டிபுட்டி (Putiputi) - ஃப்ளாக்ஸ் பூக்கள்

தேதி: March 27, 2013

4
Average: 3.8 (10 votes)

 

ஃப்ளாக்ஸ் ஓலை
கத்தரிக்கோல்

 

தேவையான எண்ணிக்கையில் ஃப்ளாக்ஸ் ஓலையை எடுத்துக் கொள்ளவும்.
நகத்தினால் ஓலை விரியுமிடத்திலிருந்து மேல் நோக்கி ஆறு சம பாகங்களாகப் பிரிக்கவும்.
ஓலையின் பளபளப்பான பாகம் மேலே இருக்குமாறு பிடித்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கம் உள்ள முதலாவது கீற்றைக் கிடையாக மடித்து பாய் பின்னுவது போல் (மேல் - கீழ் - மேல் - கீழ் - மேல் என்னும் ஒழுங்கில்) மாறி மாறிப் பின்னவும்.
அடுத்த கீற்றையும் இதே போல பின்னவும்.
ஐந்து கீற்றுகள் பின்னி முடித்ததும் இப்படித் தெரியும்.
இனி, அப்படியே ஓலையை சரித்துப் பிடிக்கவும். ஆறாவது கீற்றை மேலாக வளைத்து பின்னிக் கொள்ள வேண்டும்.
மீதியை ஆரம்பத்தில் பின்னியது போல பின்னவும்.
இப்படியே தொடர்ந்து பின்னி மீதமான துண்டுகளைச் சேர்த்துப் பிடித்து, மெல்லிதாக உள்ள துண்டுகளால் சுற்றி இறுக்கிக் கட்டவும்.
அனைத்தையும் ஒரே அளவிற்கு நறுக்கவும்.
நகத்தினால் மெல்லிதாகப் பிரித்து விடவும். இது பூவின் மகரந்தப் பகுதி.
புட்டிபுட்டியை நெருக்கிச் சுருட்டிப் பிடித்து சில விநாடிகள் வைத்திருக்கவும்.
பிறகு கையை விட்டால் அது தானாக பூ வடிவில் விரிந்து வரும்.
ஓலையைப் பிரிக்கும் போது சிறிய ஓலைகளை நான்கு பிரிவுகளாகவும் அகலமானவற்றை எட்டுப் பிரிவுகளாகவும் கூடப் பிரிக்கலாம். கட்டாயம் இரட்டை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பிரிவுகள் அதிகமாக இருந்தால் பூக்கள் அழகாக, பெரிதாக அமையும். படத்தில் உள்ள சிறிய பூ நான்கு பிரிவுகளைக் கொண்டு பின்னியது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு. சின்ன வயதில் கிராமத்துக்கு போனோம்னா அங்க எங்க மாமா பிள்ளைகள் எல்லாம் தென்னை, பனை ஓலைகளில் வித விதமா செய்து காட்டி அசத்துவாங்க. டவுன்ல இருந்து போகும் நாங்க அதை ஆன்னு வாய பொலந்து பார்ப்போம் ;) பழைய நியாபகங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்...அழகா இருக்கு.வனிக்கா சொல்றமாதிரி எனக்கும் பழைய நினைவு.எங்க அப்பா ஊருக்கு லீவில போனா அங்க பசங்க இதேபோல பனை ஓலைல செய்வாங்க.பாக்ஸ் மாதிரி செய்து அதில் கருப்பட்டி போட்டு குடுப்பாங்க.இதில் செய்த மோதிரம் இன்னும் பத்திரமா இருக்கு.செய்ய ஆசையா இருக்கு..இனிமே இங்க Trails போனா இதுபோல் திக்கான இலை இருக்காணு தேடி பார்கிறேன்.வாழ்த்துக்கள் :)குறிப்பில் சொல்லியிருப்பது படிக்க நல்லா இருக்கு ;)

Kalai

;) எனக்கும் கொசுவர்த்தி. ;) எங்க பெரியப்பா வீட்டில நிறைய தென்னை இருந்துது. பெரியம்மா சகோதரர்கள் தென்னோலை அலங்காரத்துல எக்ஸ்பர்ட்ஸ். அங்க நடக்குற கலியாணம், பூப்புநீராட்டுவிழா எல்லாவற்றுக்கும் தென்னோலைல வாசல்ல பெருசா நுழைவாயில் கட்டுவாங்க. ஓலைலயே கலர் ஷேட்ஸ் தெரிஞ்சு செய்திருப்பாங்க. Welcome எழுதி இருப்பாங்க.
வாழைத் தண்டுல ஓலையை வளைச்சு குத்தி பெரிய பூ மாதிரி எல்லாம் செய்வாங்க. அழகா இருக்கும். நாங்க கூட இருந்து ஒத்தாசை பண்ணுவோம். நினைச்சா ஆசையா இருக்கு.

‍- இமா க்றிஸ்

//பாக்ஸ் மாதிரி செய்து அதில் கருப்பட்டி போட்டு// ஆஹா! பனையோலைல குட்டிப் பெட்டி பின்னி அதிலேயே கருப்பட்டி வார்த்து இருப்பார்கள். பனங்குட்டான் என்போம். நினைவுபடுத்தி நாவூற வைக்கிறீங்க.
//குறிப்பில் சொல்லியிருப்பது படிக்க நல்லா இருக்கு// ;)) NZ Flax பற்றி இன்னும் இருக்கு. இதுவே குறிப்பை விட நீளமா இருக்கிற மாதிரி இருக்கு. அதனால விட்டாச்சு. ;)
முக்கியமான சில விஷயங்கள் இருக்கு.
* வேலை முடிய கை கழுவ மறக்கக் கூடாது - இல்லாவிட்டால் வயிற்றோட்டம் ஏற்படும்.
* ஓலையிலிருந்து மெல்லிசாக ஒரு மயக்கும் வாசனை வரும். அறை வாசனையாக இருக்கட்டும் என்று டீனேஜ் பையன்கள் தங்கள் படுக்கைக்கு அடியில் ஓலைகளை வெட்டிப் பரவி வைப்பாங்களாம். :-)
* பெண்கள் மாதவிலக்காகும் சமயம் ஓலையை வெட்ட மாட்டாங்க.
* செடியில் அடியில் இலைகளைப் பிரித்துப் பார்த்தால் பிசுபிசுப்பாக ஒரு திரவம் தெரியும். வெட்டுக் காயங்களின் மேல் அதைப் போட, அது லிக்விட் ப்ளாஸ்டர் போல பிடித்துக் கொள்ளும். இன்ஃபெக்க்ஷன் ஆகாம ஆறிரும்.

‍- இமா க்றிஸ்

நாங்க கேள்விப்படாத எதையெதையோ செய்றீங்க இமா..அசத்தல் ..நல்ல தகவல் கூட

தென்னை ஓலைல கிலுகிலுப்பை பார்த்திருக்கேன், அதுலயே மோதிரம், வாட்ச் எல்லாம் பண்ணுவாங்க:) உங்களோட புட்டி புட்டி பார்த்து எல்லா நினைவுகளும் அலைமோதுதுங்க. வாழை இலைல பீப்பி அத ஊதுனா மயில் அகவுற மாதிரி சத்தம் கேக்கும். நீங்கள் பின்னல் பின்னலா அழகா பின்னியிருக்கீங்க, பார்க்கவே அழகா இருக்கு. பெண்குழந்தைங்க சடங்கானா சீர் வெக்கிறப்ப தென்னை ஓலைல, இதுபோல பின்னிதான் அதுக்குள்ள உக்கார வெப்பாங்க. இப்பவும் இங்க கல்யாண வீடுகள்ல பச்சை ஓலை பந்தல் அமைப்பது வழக்கம்.
பாருங்க உங்க கைவினை எத்தனை விஷயங்களை சொல்ல வெக்கிதுனு:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

;) இவங்க சொற்கள் அனேகம் அப்படித்தான், ஒரே உச்சரிப்பு அடுத்தடுத்து இரண்டுமுறை வரும் தளி.

‍- இமா க்றிஸ்

//தென்னை ஓலைல கிலுகிலுப்பை// நானும் பார்த்திருக்கேன்... காதலன்ல. ;D //மோதிரம், வாட்ச் // இவங்களும் பண்ணுவாங்க. நெற்றிப்பட்டி ஒன்றும் பின்னுவாங்க. க்ராஃப்ட் என்கிறதுக்கு மேல, அவங்க கலாச்சார உடையின் ஒரு பகுதி அது. எல்லாத்துக்கும் மேல இருக்கும் அவங்க ஸ்கர்ட்ஸ், 'piupiu' என்பார்கள். பார்த்தா நம்பவே முடியாது ஓலையில் செய்தது என்று. அவ்வளவு அழகு.
//வாழை இலைல பீப்பி// பூவரசு இலை, தென்னோலைல கூட செய்வாங்க இல்ல!

நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. க்ராஃப்ட் சப்ளைஸ் என்று எதுவுமில்லாத காலத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே எவ்வளவு செய்திருக்கிறார்கள் பாருங்க!

‍- இமா க்றிஸ்

ரொம்ப அருமை, பார்க்க ரொம்ப அழகா இருக்குங்க, நானும் தென்னை ஓலையில் மோதிரம், வாட்ச் எல்லாம் செய்திருக்கேன் சிறு வயதில் :-))))

நட்புடன்
குணா

க்ராஃப்ட் பண்ணுவீங்களான்னு கேட்டப்ப ஒண்ணுமே தெரியாதுன்னு சொன்னீங்களே!! ;))

‍- இமா க்றிஸ்

இமா
பனை ஓலையில் பாய் ,மிட்டாய் பெட்டி,தென்னை ஓலையில் தட்டி எல்லாம் இப்படி தான் செய்வாங்க.இப்போ எல்லாம் யாரும் செய்யறதில்லை.
அந்த நாள் ஞாபகம் வருது.
வாழ்த்துக்கள் அருமையா பண்ணியிருக்கீங்க.

/குணாண்ணா/ அண்ணாவா?? தலை சுத்துறமாதிரி இருக்குங்க :-) சிறுவயசில தென்னை ஓலையில செஞ்சதுங்க, க்ராப்ட் எல்லாம் செய்ய தெரியாதுங்க, அப்போ பேப்பர்ல கப்பல், விமானம் எல்லாம் செய்திருக்கேன் :-) ஹிஹீஹி

நட்புடன்
குணா

ஹாய் நிகிலா.. //அந்த நாள் ஞாபகம் வருது.// ;))
குணாண்ணா... இப்ப ஆங்காங்கெ மீதி பதில்கள் பார்க்க திரும்பவும் சுத்துமே!! ;)

இருவருக்கும் என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா மேடம் எப்படி இருக்கிங்கா? ஓலை பூ ரொம்ப அழகா இருக்கு செய்து பார்க்கிரேன்:)

உன்னை போல பிறரையும் நேசி.