குண்டு கைகளுக்கான எளிய உடற்பயிற்சி

குண்டான கைகளுக்கான எளிய இந்த பயிற்சி எந்த உபகரணமும் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்

1. முதலில் கைகளை பக்கவாட்டில் நீட்டிகொண்டு ஸ்விம்மிங்க் பண்ணுவதை போல உட்புறமாக 1 நிமிடம் சுழற்ற வேண்டும்

2.பின்னர் வெளிப்புறமாக ஸ்கிப்பிங்க் பண்ணுவதை போல 1 நிமிடம் சுழற்ற வேண்டும்

3.பின்னர் 1 நிமிடம் கைகளை மேலே உயர்த்தி சாமி கும்பிடுவது போல செய்து பின்பு கீழே கால்களுக்கு இணையாக இரக்க வேண்டும்,இதை வேகமாக செய்ய வேன்டும்

4.பின்னர் கைகள் இரண்டையும் முன்புறம் அம்மி அரைப்பது போல் நீட்டி நீட்டி மடக்க வேண்டும்

5.கடைசியாக பக்கவாட்டில் ரம்பம் கொண்டு அறுப்பதுபோல் அதாவது வலது புறத்தில் வலது கையை அதிகமாக உபயோகித்து ரம்பம் அறுப்பது போலவும் இடது புறம் இடது கையை அதிகமாக உபயோகித்து ரம்பம் அறுப்பது போலவும் செய்ய வேண்டும்

இதை தினமும் செய்தால் 2 மாதங்களில் நல்ல வித்தியாசம் தெரியும்,முயற்சித்து பாருங்கள்

hello manju
எனது கைகள் மிகவும் குண்டாக உள்ளது இந்த பயிற்சியை முயற்சி பண்ணுகிறேன்
நன்றி

மேலும் சில பதிவுகள்