தேதி: April 3, 2013
விருப்பமான நிறத்தில் ஸ்டாக்கிங் துணி - ஒன்று
3 சென்டிமீட்டர் அளவுள்ள மூடி - ஒன்று
4 சென்டிமீட்டர் அளவுள்ள மூடி - ஒன்று
ஸ்டாக்கிங் பூக்கள் செய்யும் கம்பிகள்
தண்டு பகுதிக்கு சற்று கெட்டியான கம்பிகள்
நூல்
கத்திரிக்கோல்
கொரடு
ஸ்டாமின்ஸ்
பச்சை நிற டேப்
வெள்ளை டேப்
3 சென்டிமீட்டர் அளவுள்ள மூடியில் கம்பியை சுற்றி வளையங்களை தயார் செய்யவும். ஒரு பூவிற்கு 3 வளையங்கள் என தேவையான எண்ணிக்கையில் தயார் செய்து கொள்ளவும்.

இதேபோல் 4 சென்டிமீட்டர் அளவுள்ள மூடியிலும் தேவையான எண்ணிக்கையில் வளையங்களை தயார் செய்யவும்.

இப்போது ஒரு கம்பியின் முனையை படத்தில் உள்ளது போல் வளைக்கவும்.

வளைத்த கம்பியை 4 சென்டிமீட்டர் அளவில் உள்ள வளையத்தை ஓவல் ஷேப்பிற்கு வளைத்து அதில் மாட்டவும்.

பின் அந்த கம்பியை வளையத்தின் நீளத்திற்கு வெட்டிவிட்டு வளைவை கொரடினால் அழுத்தி விடவும்.

3 சென்டிமீட்டர் அளவில் செய்த வளையங்களையும் ஓவல் ஷேப்பில் வளைத்து அதன்மேல் ஸ்டாக்கிங் துணியைச் சுற்றி நூலால் கட்டிவிட்டு, மீதமுள்ள துணியை நறுக்கி விடவும்.

இதேபோல் நடுவில் கம்பி வைத்து தயார் செய்த 4 சென்டிமீட்டர் அளவு வளையங்களிலும் ஸ்டாக்கிங் துணியைச் சுற்றவும்.

ஒரு டார்க் கலர் மகரந்தத்தையும், 4 வெள்ளை மகரந்தங்களையும் தண்டு பகுதிக்கான கம்பியின் முனையில் வைத்து வெள்ளை டேப் சுற்றி ஒட்டிவிடவும்.

அரை இன்ச் இடைவெளி விட்டு பச்சை நிற டேப் சுற்றி கம்பியை தயார் செய்து கொள்ளவும்.

நடுவில் கம்பி வைத்து செய்த பெரிய இதழ்கள் மூன்றையும் ஒவ்வொன்றாக வைத்து நூலால் கட்டவும். (இதழ்கள் கீழ் நோக்கி இருக்க வேண்டும்).

பின் சிறிய இதழ்களையும் அதனுடன் சேர்த்து வைத்து கட்டவும். 2 பெரிய இதழ்களின் இடையில் ஒரு சிறிய இதழ் வருவது போல் வைத்து கட்டவும்.

இப்போது சிறிய இதழ்களை மேல் நோக்கி திருப்பி விடவும்.

அதன் பின் பெரிய இதழ்களையும் மேல் நோக்கி திருப்பவும்.

கம்பிகளை டுலிப்பின் வடிவத்திற்கு வளைக்கவும். (பூவின் உள்ளே விரலை விட்டு நடுவிலுள்ள கம்பியை லேசாக வெளிப்பக்கமாக அழுத்தினால் டுலிப் வடிவம் கிடைக்கும்).

பின் தேவையான எண்ணிக்கையில் பூக்கள் செய்து, விருப்பமான ரிப்பன் கொண்டு கட்டினால் அழகான பூங்கொத்து தயார்.

Comments
ட்யூலிப்
கலக்குது கலக்குது. சூப்பர் வனி.
- இமா க்றிஸ்
வனி ட்யூலிப் பூக்கள் ரொம்ப
வனி
ட்யூலிப் பூக்கள் ரொம்ப அழகா வந்திருக்கு ஃப்ளவர் வாஸ்,பொக்கே எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்.
வனி
மிக தேர்ந்த கைவேலை,அழகாக இருக்கு,சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனிதா அக்கா
ஸ்டாக்கிங் ஆசைய தூண்டுரீங்க ..அழகா இருக்கு கலர்ஸ்.வாழ்த்துக்கள்
Kalai
Hi vani
Flowers alaga irruku. Stamins enral enna engu kidaikkum. Thanks.
வனி
ரொம்ப அழகா இருக்கு வனி:) கண்ணை உறுத்தாத வகையில மென்மையான வண்ணத்துல அருமை, வாழ்த்துக்கள் வனி:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அழகோ அழகு
அழகோ அழகு பூங்கொத்து.பாராட்டுக்கள் வனிதா!
இதுவும் கடந்து போகும்.
லவ்லி ட்யூலிப் பூக்கள்!
வாவ்... லவ்லி ட்யூலிப் பூக்கள் வனி! அமர்க்களமா செய்திருக்கிங்க, ரொம்ப ரொம்ப அழகா வந்திருக்கு!!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
மிக்க நன்றி :) இப்பலாம் அடிக்கடி உங்க கமண்ட்ஸ் வருதே... :P
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முசி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலை
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Mjam
மிக்க நன்றி :) போலன்ஸ்... மகரந்தம். க்ராஃப்ட் பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருள்
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
லக்ஷ்மி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
!!!!!!!!!
//மிக்க நன்றி :) இப்பலாம் அடிக்கடி உங்க கமண்ட்ஸ் வருதே... :P//
அவ்வ்!! என்னாது! முன்னால போடுறதே இல்லையா நான்! எனக்கே குழப்பமா இருக்கு இதைப் படிக்க.
நான் அறுசுவைக்கு வந்ததன் பின்னால் வந்த எல்லா க்ராஃப்ட் குறிப்புலயும் (செபா குறிப்பைத் தவிர) கட்டாயம் என் கமண்ட் இருக்கும். உங்க எல்லா க்ராஃப்ட் குறிப்புகள் கீழேயும் பாருங்க. நிச்சயம் இருக்கும். இப்போ புதுசா போட ஆரம்பிக்கல. ;)
- இமா க்றிஸ்
அடடா
நான் அந்த அர்த்தத்தில் சொல்லல இமா... :) அடிக்கடி என்னுடையதில் முதல் பதிவு வருதுன்னு சொல்ல வந்தேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
intha things ellam enga
intha things ellam enga kidaikum
எல்லா புகழும் இறைவனுக்கே
Remu
எல்லா க்ராஃப்ட் ஐடம்ஸ் கிடைக்கும் கடைகளிலும் கிடைக்கும். சில நேரம் சில ஃபான்ஸி & ஸ்டேஷனரி ஷாப்பில் கூட கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா