2 மாத குழந்தை தூங்க மாட்டக்குது.

hai friends, என்னோட குழந்தைக்கு 2 மாதம் ஆகிறது. இப்ப 2 நாளா தூங்க மாட்டகிறான். night 3 hr, morning 3 hr, மட்டுமே நன்றாக தூங்குகிறான். மற்ற சமயம் 1/2 மணி நேரம் தூங்குகிறான். தீடிர்னு விழித்து அழுகிறான். என்ன காரணம்னு தெரியல. 5 மணி நேரம் கிட்ட தூங்க மாட்டக்கிறான். அவன தூங்க வைக்க பெரும்பாடாக இருக்கிறது. தோல் ஊசி போட்டது வீங்கி உள்ளது அதனால அழுகிறானானு தெரியல. அந்த வீக்கத்திற்க்கு மருந்து எதாவது இருக்கிறதா. அவன் நன்றாக தூங்க ஏதாவது வழி சொல்லூங்க plz. நான் தனியாக தான் அவன manage பன்னுகிற சூழ்நிலை plz help me.

நீங்கள் உடனே குழந்தையின் டாக்டரிடம் கேக்கவும். 'Colic' பத்தி internet-இல் படிக்கவும். சிறு குழந்தை - எந்த பிரச்சனை என்றாலும் உட்னே டாக்டரிடம் போவது நல்லது. தாமதிக்க வேண்டாம்.

malaivembu patri theriuma?

என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எனக்கு மூன்று மாதத்தில் பெண் குழந்தை இருக்கின்றாள். தினமும் காலையில் சிறிது Oil மஸாஜ் செய்து வெண்ணீர் வைத்து குளிப்பாட்டி பிறகு பால் தருவேன்.1 அரை மணி நேரம் அல்லது 2 மணி நேரம் நன்றாக தூங்குவாள். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பால் குடுப்பேன்.பால் போதவில்லை என்றாலும் குழந்தை அழும். அதனால் குழந்தை பால் குடிக்கும்பொது இடைஞ்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை அழுதால் முதலில் Diaper ஐ Check பண்ணுவேன். Motion போயிருந்தால் கூட குழந்தை uneasy யாக feel பண்ணும். சரியாக தூக்கம் வராது. தூங்கும்போது இரண்டு பக்கங்களிலும் தலையணை வைத்து உறங்கச் செய்யுங்கள். இது குழந்தைக்கு ஒரு விதமான பாதுகாப்பு உணர்வைத் தரும். குழந்தை நன்றாக உறங்கும்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்