சிசேரியன் பன்னியவர்கள் எத்தனை நாட்களில் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்?

சிசேரியன் பன்னியவர்கள் எத்தனை நாட்களில் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்?என்ன என்ன வேலைகள் செய்யலாம்?மாடி படி ஏறலாம்?அனுபவம் உள்ளவர்கள் சொல்லி உதவுங்கள் பிளிஸ்..தோழிகளே

தயவு செய்து , அனுபவம் உள்ள தோழிகள்,தெரிந்த தோழிகள் சொல்லி உதவுங்கள் .

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

6months careful a irukanumnu solvanga pa. But unga health condition sambantha patta vishayam so doctor a kettu seiiyunga. Enaku konjam problem so 2 year varaikum work ethum seiyala.

//சிசேரியன் பன்னியவர்கள் எத்தனை நாட்களில் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்?// ஆமாம், திவ்யா சொன்னது போல அவரவர் உடல்நிலை பொறுத்தது அது. வீட்டு வேலை என்பது கூட ஒவ்வொருவர் வீட்டில் வேறு இல்லையா? எப்படியும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இருப்பதால் அன்றாட வேலைகள் தவிர மேலதிகமாக எதுவும் செய்ய நேரம் கிடைக்காது. எப்போ, எந்த அளவு முடிகிறதோ செய்யலாம். ப்ரொஃபைல் பார்த்தேன். கையால் துணி கழுவும் வேலை எல்லாம் இராது உங்களுக்கு. தினமும் செய்யும் சமையல், வீடு க்ளீன் பண்ணுவது எல்லாம் பிரச்சினை இல்லை. ப்ளான் செய்து கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிதாக வேலைகளை வைத்துக் கொள்ளுங்கள். மேலதிகமான வேலைகளை எடுத்து களைத்துப் போக வேண்டாம். ஓய்வும், மனது களைத்துப் போகாமல் இருப்பதும் அவசியம். //மாடி படி ஏறலாம்?// ஏறக்கூடாது என்பது இல்லை. அதனால் பாதிப்பு ஏற்படும் என்று பயப்பட வேண்டியதில்லை. ஆனால் உங்களுக்கு வேதனை தருவதாக இருந்தால் உடலை வருத்திக்கொள்ள வேணாம். சிரமமானவற்றைச் செய்யும்போது கூடவே மனதும் களைத்துப் போகும்; குழந்தையைப் பராமரிக்க சந்தோஷமான மனநிலை அவசியம். ஏறி இறங்கும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதுபோல வேலைகளை ப்ளான் செய்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

cesarian panniyavarhal six month varai heavy weight objectai thooka koodadhu.Matrapadi one monthavadhu complete rest eduthu chinna chinna velaihal seiyalaam.

இமா ,மிகவும் நன்றிங்க எனக்கு பதிவு கொடுத்ததுக்கு.ஊரை விட்டு தனியாக இங்கு இருப்பதால் நான் தான் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்ய வேண்டும்.எனக்குன்னு உதவிக்கு யாரும் இல்லைங்கஎன் கணவராலும் ஆபிஸ் ,வீடுன்னு இரண்டு பக்கமும் வேலை பன்ன முடியலை.இப்பொ நான் தான் நின்று கொண்டேசமைக்கிறேன்.இங்கிருக்கும் டாக்டரிடம் கேட்டால் 6 வாரம் கேர்புல்லா இருக்க சொல்கிறார்கள் அவ்வளவு தான்.இமா ரொம்ப தெளிவா எனக்கு புரிய வச்சிங்க.நான் பயந்துட்டெ வேலை பன்னுவென். அந்த பயம் போய்விட்டது எனக்கு.நன்றி இமா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

திவ்யா,சக்தி உங்கள் இருவருக்கும் என் நன்றிங்க.யதார்த்தமா, அழகா சொன்னிங்க.நன்றிங்க

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

//நின்று கொண்டேசமைக்கிறேன்.// அதில் பிரச்சினையே இல்லை. கால் வீங்கி இருந்தால் நிற்பதைக் குறைக்க வேண்டும். அல்லது டாக்டர் 'வேண்டாம், பெஸ்ட் ரெஸ்ட்' என்று சொன்னால் கட்டாயம் யோசிக்க வேண்டும். மற்றப்படி பிரச்சினை இல்லை. சமையலிலும் உட்கார்ந்து செய்யக் கூடியவற்றை உட்கார்ந்து செய்யுங்கள். உங்கள் மெனுவை சிம்பிளாக அதே நேரம் ஹெல்தியாக வைத்துக் கொள்ளுங்கள். கழுவுவதற்கு பாத்திரங்களும் குறைந்துவிடும்.

//6 வாரம் கேர்புல்லா இருக்க சொல்கிறார்கள்// வேலைக் கவனத்தில் எங்காவது இடிபடாமல், பாரம் தூக்காமல், களைத்துப் போகிற அளவு வேலை செய்யாமல் இருந்தால் போதும். இடையில் தேவையான அளவு ரெஸ்ட் எடுங்க. அவ்வளவு தான்.

//பயந்துட்டெ வேலை பன்னுவென். // :) நிற்கிறதைப் பற்றி பயமே வேண்டாம். நின்று பார்க்கும் வேலைக்குப் போகிறவர்கள் எல்லோருமே இதற்காக வேலையை விடுவது இல்லை. டீச்சர்ஸ்.. தினமும் நிறைய நிற்போம். மாடி, மலை இருந்தால் ஏறி இறங்குவது தினமும் இருக்கும். வயிறு தன் பாட்டுக்கு எங்கள் கூட வரும். ;) களைப்பாக இருந்தால் உட்கார்வது உண்டுதான். பிரசவ லீவு முடிந்தால் திரும்ப ரூட்டீன் ஆரம்பித்துவிடும். குட்டி ஸ்கூலாக இருந்தால், அல்லது உண்மையாகவே கஷ்டப்படுறோம் என்று இருந்து ப்ரின்சிபாலும் மனதுவைத்தால் வகுப்பறையை இடம் மாற்றி சலுகை செய்வாங்க. இல்லாட்டா ஆரம்பத்தில் கொஞ்சம் கவனமாக இருப்போம். பிறகு எல்லாம் மறந்து போய்ரும். ஒன்றும் ஆவது இல்லை.

இங்கு பதில் சொல்லும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் பதில் சொல்வோம். உங்கள் நிலை எங்களுக்குத் தெரிவதில்லை. பிரச்சினையாகும், நிற்கவேண்டாம் என்று டாக்டர் சொன்னால் எந்தக் காரணத்துக்காகவும் அலட்சியம் செய்யவேண்டாம்.

சந்தோஷமாக இருங்க. என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

என் அம்மா என் கூட இருந்திருந்தால் எவ்வளவு சந்தொசம் எனக்கு கிடைத்து இருக்குமோ அவ்வளவு சந்தோசமா இருந்திச்சி இமா.எவ்வளவு அழகா சொல்லிட்டிங்கஉண்மையை சொல்லனும்னா உங்களின் /சந்தோஷமாக இருங்க. என் அன்பு வாழ்த்துக்கள்./இந்த வரிகளை படித்ததும் என்னை அறியாமலே நான் அழுது விட்டேன்.ரொம்ப நாளாச்சுங்க இந்த மாதிரி நல்ல்ச் வார்த்தைகளை கேட்டு.ரொம்ப நன்றி இமா உங்களுக்கு.அழகான பதிவை கொடுத்ததற்கு.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மாடிபடி ஏறி இறங்கும் போது அடிவயிற்றில் ஒரு கையால் சப்போட் கொடுங்க... மெதுவா ஏறி இறங்குங்க. வேகம் கூடாது. பொதுவா டாக்டர்ஸ் சொல்றது 6 மாசத்துக்கு ஜாக்கிறதையா இருக்கணும் என்பது தான். ஆனா அது குழந்தையை பார்த்துக்கும் நமக்கும் சாத்தியமில்லை தான். முடிஞ்சவரை வெயிட் தூக்குறது, கொஞம் சிரமமான வேலை எல்லாம் அவாய்ட் பண்ணலாம். உட்கார்ந்து எழும்போது கையை சப்போர்ட் வெச்சு எழுந்திரிங்க. அடிவயிறு மசுல்ஸ் ஸ்ட்ரெயின் ஆகாம இருந்தா போதும். ஏன்னா டாக்டர்ஸ் சொல்வாங்க வெளிய போட்ட தையல் சீக்கிரம் ஆறிடும், ஆனா உள்ள போட்ட தையல் ஆற நாளாகும்’னு. அது சீக்கிரம் ஆற தான் இப்படி கொஞ்சம் ஸ்ட்ர்யின் பண்ணாம வேலை பார்க்க சொல்வாங்க. மற்றபடி எல்லா வேலையும் பார்க்கலாம். பயப்படாதீங்க... :) ஒன்னும் ஆகாது. நானும் சிசேரியன் பண்ணவ தான். கவலை வேண்டாம்... நல்லா இருப்பீங்க. பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்