பல்லி விழும் பலன்

மக்களே... என்ன இது மூட நம்பிக்கைன்னு நினைக்கிறவங்க மன்னிச்சுடுங்க. :) இல்ல... இதுக்குலாம் பலன் உண்டுன்னு நம்புறவங்க... எனக்கு சில பதிலை சொல்லுங்க. ;)

1. பல்லி விழும் பலன் எத்தனை நாளுக்கு?

2. வலது கையில் விழுந்தால் என்ன பலன்? மணிக்கட்டு அல்ல... முழங்கை.

3. பல இடங்களில் விழுந்திருந்தால் என்ன பலன்? அதாவது தலையில் விழுந்து பின் கையில் குதித்திருந்தால்??

4. இது பலன் இல்லாம போக என்ன செய்வாங்க?

இப்படி விழுந்து பலன் ஏதும் இல்லாம போனவங்க இருந்தாலும் சொல்லுங்க. எனக்கு பல முறை விழுந்திருக்கு. ஆனா என்ன நடந்ததுன்னுலாம் நினைவில்லை. பலனும் தெரியாது. இதை பற்றிய தகவல் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

எனக்கு நம்பிக்கை இருக்கான்னு யாரும் கேட்டு புடாதீங்க... ;) எனக்கு இருக்கா இல்லையான்னு எனக்கே தெரியாது. பல முறை விழும் பலன் பார்ப்பேன், ஆனா அது நடந்துதா இல்லையான்னு நான் கவனிச்சதில்லை. அப்பறம் அது மறந்து போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

palli viluntha nalluthu kidaiyathunu na kelvi pattu iruken.ana en mel adikadi palli vilunthu iruku na udane viluntha edathil thanni uthi thudaipen avvalavuthan.en kitta en amma solli irukaga palli viluntha thanni uthi kaluvanum ena athanala nan seiven.enaku therinthathu solli iruken so ungala kasta paduthi iruntha sorry.

ஜோஸ்... இதை நானும் இணையத்தில் பார்த்தேன். வலது கைல விழுந்தா? அதுல கை இல்லையே??? :(

மீகா... நன்றி... தப்பெல்லாம் எதுவும் இல்ல ;) எல்லாரும் கெட்டதுன்னு தான் சொல்றாங்க. ஹிஹிஹி. ஆனா அது எத்தனை நாளைக்கு என்ன ஏதுன்னு தான் தெரியல. அதான் கேட்டேன். நானும் கழுவினேன் இன்னைக்கு. எனக்கு யாரும் சொல்லல... விழுந்தது என்னமோ போல இருந்தது... அதுக்காக கழுவினேன். :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி சிஸ்டர் உங்கள் குறிப்பு எல்லாம் நான் விரும்பி பார்ப்பேன்.

மேலும் சில பதிவுகள்