எலியார்

தேதி: April 17, 2013

5
Average: 4.2 (11 votes)

 

பெரிய அளவு சோழி - ஒன்று
நடுத்தர அளவு சோழிகள் - 3
மிகச் சிறிய சோழிகள் - 2
சற்று தடிமனான நூல்
மெல்லிய நூல்
கத்திரிக்கோல்
ஃபெவி குயிக் / க்ளூ கன்
சிறிய மணி / மார்க்கர்
மெல்லிய கம்பி

 

தேவையான சோழிகளை தயாராக எடுத்துக்கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் இரண்டு நடுத்தர அளவு சோழிகளை, நடுவில் ஃபெவி குயிக் வைத்து இணைத்து ஒட்டி நன்றாக காயவிடவும்.
பின் பெரிய சோழியை சற்று முன் நோக்கி சாய்த்து ஒட்டவும். முன் நோக்கி சாய்த்து வைப்பதால் எலியாரை நிற்க வைத்தால் பேலன்ஸ் கிடைக்கும். இல்லையெனில் பின் நோக்கி சாய்ந்து விடுவார்.
மற்றொரு நடுத்தர அளவு சோழியை தலையாக கவிழ்த்து ஒட்டி காயவிடவும்.
இரண்டு மிகச் சிறிய சோழிகளை படத்தில் உள்ளது போல் முன் நோக்கி காதுகளாக ஒட்டிவிடவும்.
இப்போது எலி உருவம் தயார். இது நன்றாக காயும் வரை தொட வேண்டாம்.
காய்ந்ததும் ஒரு சிறு துண்டு தடிமனான நூலை வெட்டி வாலாக ஒட்டவும்.
மெல்லிய நூலை இரண்டு சிறு துண்டுகளாக வெட்டி, X வடிவில் மீசையாக ஒட்டவும்.
மெல்லிய கம்பியை வளைத்து கண்ணாடி செய்து கொள்ளவும்.
இப்போது கண்களுக்கு மணி ஒட்டிவிடவும் அல்லது மார்க்கரால் வரைந்து கொள்ளவும். பின் கண்ணாடியை ஒட்டி காயவிடவும்.
சுலபமாக செய்யக்கூடிய அழகான எலியார் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனி எலியார் க்யூட்டா இருக்கார். சோழிகள் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எலியும்,நெயில் ஆர்ட்டும் கொள்ளை அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

so cute

வனி

மிகவும் அழகாக இருக்கிறது எலியார். எனக்குச் சுட்டுப்போட்டாலும். கை வேலை வராது. தொடர்ந்து நல்ல நல்ல குறிப்புத்தர வாழ்த்துக்கள்.

வனி,

சோழி எலியார் சொக்க வைக்கிறார்!! ;-‍) செம‌ க்யூட்டா இருக்கு வ‌னி! அதிலும் அந்த ஸ்பெக்ஸ் போட்ட‌வ‌ரின் ஸ்டைல் லுக் சூப்ப‌ர்!! பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

க்யூட் க்யூட் க்யூட். அதுவும் கண்ணாடில்லாம் போட்டு... கலக்குறா(றீ)ங்க. :)

‍- இமா க்றிஸ்

வாவ்வ்வ்வ்:) செம க்யூட் எலிகள் :) வழக்கம்போலவே அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப ரொம்ப அழகா அருமையா இருக்காங்க எலியார், அதிலும் கண்ணாடி போட்டிருக்கிற எலியார் ரொம்ப க்யூட்டா தெரியறார் :-) வாழ்த்துக்கள்'ங்க

நட்புடன்
குணா

எலியார் செம க்யூட் வனி. ஜெர்ரி ரெடி, டாம் எப்ப வருவார்

Dear Vani,
Your mouse was so cute & very funny.
I like this cheery & your creative sense too!!!

எலியார் அழகா இருக்கார்.செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள் :)

Kalai

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் பதிவுக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) டாம் ட்ரை பண்ணல இன்னும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) என் க்ரியேட்டிவிட்டி எல்லாம் இல்லைங்க... எங்க வீட்டில் இப்படி ஒரு எலி குட்டி சிரியாவில் வாங்கினவர் இருக்கார். அது போல் செய்ய முடியும்னு தோணுச்சு, ட்ரை பண்ணேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Cute mouse :) missed to see this ;)

Kalai