கோயம்பத்தூரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களே!!

நாங்கள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறோம். அடுத்த வருடம் கோயம்புத்தூரில் வந்து செட்டில் ஆகலாமுனு இருக்கோம் தோழிகளே. குழந்தைகளுக்கு பள்ளிகள் எப்படி இருக்கு,ஒரு நடுத்தர குடும்பம் வசிக்க மாத வாடகை, , மாத செலவு,பள்ளிக்கு,இன்னும் பல......எவ்வளவு வரும் சொல்லுங்கள் தோழிகளே! எனக்கு கோயம்பத்தூரை பற்றி தெரியாது. அந்த ஊரில் வசிக்கும் நமது அறுசுவை தோழிகள் இருந்தால் எனக்கு உதவுங்களே ப்ளீஸ்...

Welcome to Coimbatore

1) Monthly rent will be 10000/- for 2 Bed Room House
2) Many CBSE Board & English medium schools are there (CBSE Fees Around Rs.75,000/- per annum)
3) Monthly expenses will be around Rs. 25000/- including rent

Regards
Nithya.A
COIMBATORE

Welcome to Coimbatore

1) Monthly rent will be 10000/- for 2 Bed Room House
2) Many CBSE Board & English medium schools are there (CBSE Fees Around Rs.75,000/- per annum)
3) Monthly expenses will be around Rs. 25000/- including rent

Regards
Nithya.A
COIMBATORE

வணக்கம்ங்க,
கோவையில் பள்ளிகளின் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது. அதிகமான பள்ளிகள் (CBSC உட்பட) இருப்பதால் www.indiamapped.com சென்று Schools in tamilnadu லிங்க்கில் சென்று கோயம்புத்தூர் லிங்கில் பள்ளிகளின் விவரங்கள்(முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) அறிந்துகொள்ளுங்கள்.
நடுத்தர குடும்பம் வசிக்க வீட்டிற்கு மாதவாடகை அதிகரித்து வருகிறது, நகரத்திற்கு( மாநகராட்சி) உட்பட்ட இடங்களில் மாதம் ரூ.8000ல் ஆரம்பிக்கிறது,
புறநகர்ப்பகுதிகளில் (பேரூராட்சி, ஊராட்சி) ரூ4000ல் ஆரம்பிக்கும், இதுவும் வீடுகளின் அமைப்பு, குடிநீர் வசதி,போக்குவரத்து வசதி, அருகில் உள்ள பள்ளி,கல்லூரிகளைப்பொறுத்து மாத வாடகை அடுத்த வருடமும் மாறலாம். உங்கள் பதிவிற்கு
பதிலளிக்க கூறிய ரேவதி அக்காங் அவர்களுக்கு நன்றி :-)

நட்புடன்
குணா

தோழி நித்யா ரொம்ப நன்றி..பா ..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தம்பி குணா ரொம்ப நன்றி பா...உடனே பதில் அளித்ததற்கு ..தம்பி நீங்க மேடம் எல்லாம் கூப்பிட வேண்டாம்...அக்கா என்றே அழைக்கலாம்..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா நானும் கோவை தான்... உங்க சொந்த ஊர் கோவை ஆ? இல்ல வேலை இங்கயா?
இங்கு பல டவுன் ஏரியாக்கள் இருக்கு காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், கடைவீதி ஏரியா.... இங்கு எல்லாம் வாடகை கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கும்... அதுவும் சின்ன சின்ன வீடுகளும் கிடைக்கும்(3 ரூம்)......... ஸ்கூல்னு பாத்தீங்கனா நிறைய இருக்கு... நீங்க தங்க போற ஏரியால இருக்கிற பெஸ்ட் ஸ்கூல் எதுனு அக்க்ம் பக்கம் கேட்டாலே சொல்வாங்க... இல்லைனா நல்ல ஸ்கூல் இருக்கிற ஏரியால போய் தங்கறது இன்னும் பெஸ்ட்... ஏன்னா (வெளிநாடுல இருக்கிறதுனால) இங்க வந்தா காலை நேரத்துல டிராபிக் படுத்தி எடுத்திடும்.......... இன்னும் சொல்ட்ரேன்..........

நானும் கோவையைதான் செலக்ட் செய்து இருக்கிறேன்.கோவையில் சரவனபட்டி ஏரியா எப்படிப்பா?அவ்டர்னு சொன்னாங்க.?அங்கு இருக்கும் indian public school எப்படி? பவர் கட் கோவைல தான் அதிகம்னு சொல்றாங்?எப்படி மேனேஜ் செய்ரீங்க?தெரிந்த விபரம் சொல்லிங்க pls. அனைவருக்கும் எனது நன்றி.

ரொம்ப நன்றிங்க அக்கா :-)

நட்புடன்
குணா

கோவையில் இருந்து சத்தி செல்லும் சாலையில் சரவணம்பட்டி உள்ளது. கோவையில் இருந்து 12 கிலோமீட்டர், பேரூராட்சியாக இருந்த சரவணம்பட்டி கோவை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது கோவையுடன் இணைக்கப்பட்டது, இங்கு பல IT Parkகள், பொறியியல் &கலை அறிவியல், தொழில்நுட்ப கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை அதிகம், நீங்கள் சொன்ன இந்தியன் ஃபப்ளிக் ஸ்கூல் இங்கு நல்ல பெயர், இங்கு பவர்கட் பகல் நேரங்களில் 6 முதல் 8 மணிநேரங்கள் இருக்கும், இரவில் 2 மணிநேரம் பவர்கட். நன்றிங்க

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்