முதல் கர்ப்பம் அனுபவம்

hi friends, தப்பா நெனைச்சுகதீன்க .உங்கள் முதல் கர்ப்ப அனுபவம் பற்றி சொல்லுங்க .நீங்க எவ்ளோ நாளா குழந்தைக்கு எதிர் பார்த்துட்டு இருந்தீங்க ...கர்ப்பம் நு தெரிஞ்ச உடனே எப்படி இருந்துச்சு .......கருவில் குழந்தை வளரும்போது எப்படி அனுபவசீங்க ......எல்லாத்தையும் சொல்லுங்க பா .தேரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருக்கு .எனக்கு 2 1/2 வருசமா இன்னும் குழந்தை இல்லை .தாய்மை யை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு ....

தப்பா நெனைச்சுகாதீன்க

ஹைய் தொழி எனக்கு திறுமணம் முடிஞ்சி 3 வருசம் ஆச்சி எனக்கும் இன்னும் குழந்தை இல்ல.நானும் குழந்தைக்காகத்தான் காத்திருக்கேன்
எனக்கும் தெரிஞ்சிக்க ஆசையாஇருக்கு கர்ப்பம் சொன்ன உடன் உங்கலுக்கு எப்படி இருந்தது கனவர் மற்றும் வீட்டில் உள்ளவங்க எவ்லோ சந்தோசபட்டாங்க சொல்லுங்கப்பா pls

hi சங்கீதா ,

எப்படி இருக்கீங்க பா .

என்ன யாருமே பதில் போடல ...

கூடிய விரைவில் தாய்மையடைய வாழ்த்துக்கள்பா.....:-)
முதல் அனுபவம்:
திருமணம் முடிந்ததும் குழந்தை தள்ளிபோடகூடாதுன்னு இருவரும் நினைத்தோம்.அதனால் அடுத்தமாதமே எதிர்பார்த்தோம்.இரண்டாம் மாதம் கன்ஃபாம் பண்ணினோம்.நாள் தள்ளி வாய்ஜலம் வந்து ரொம்ப காய்ச்சல் வந்தது....எனக்கு ஒரு டவுட் இருந்தது,ஆனால் அவரிடம் சொல்லலை. பின் ஃபிப்ரவரி 1 டாக்டரிடம் போய் கன்ஃபாம் பண்னினோம்.அந்த கொஞ்சநேரம் இருவரும் பேசிக்கவில்லை.ஆனால் மனதுள் ஆயிரம் துள்ளல்,ஆயிரம் விதமான பயம்,என்ன ஃபீல்னு சொல்ல முடில.
சிஸ்டர் கன்பாம் இல்லைனுட்டா,ஆனால் நான் நம்பலை,டாக்டரை பார்த்தே ஆகனும்னு சொன்னேன்.பின் டாக்டர் கூப்ட்டு கன்ஃபாம்னு சொன்னாங்க,சிஸ்டருக்கு ஒரே டோஸ்தான்.....தென் அம்மா வந்தாங்க,மாமியும்தன்,அப்பவே வளையல் மாட்டிவிட்டுட்டாங்க.சமையல் மட்டுமில்ல எந்த வேலையும் செய்யவிடலை முதல் மூனுமாசம்.பின்னும் அவர் கடிந்துப்பார்,டேரிபில்க் சாக்லெட் வாங்கி கொடுத்தார்.....
இப்பதான் நடந்ததுபோல இருக்குபா இப்ப முதல் குட்டி யூ.கே.ஜி போறான்,இரண்டாவது பதினைந்து மாதம்.....இரண்டும் ரொம்ப சுட்டிங்க.....:-)
தேங்ஸ் சுசி நினைவூட்டியதற்கு.....மீண்டும் வாழ்த்துகிறேன்.....விரைவில் தாய்மையடைய.....

சுசி,
கறுவுற்றிருக்கும் போது குழந்தையின் அசைவு 5 மாதங்களில் த்ரியும்னு சொல்வாங்க.பட் என் முதல் மகன் இரண்டரை மாதங்களில் வயிற்றின் மேல் முட்டுவது தெரிந்தது(பார்வைக்கும்).தினமும் என்னவர் ஈவ்னிங் ஆஃபிஸ்விட்டு வந்ததும் அவனுடன் பேசுவது வழக்கம்.ஓரிரு தினங்கள் அப்படி பேசலை.தென் அடுத்தடுத்த நாள்களில் அவன் அந்த நேரத்தில் மேலே வந்து உந்துவதை இருவரும் உணர்ந்தோம்........:-)மூன்றாம் மாதம் முதல் டெலிவரி வரை ஒரே வாமிட்,ஆனாலும் பைய்யன் 3.5 இருந்தான்.பின்ன வாமிட் பண்னிட்டு அப்பவே சாப்பிடுவன்ல.....குட்டி அழுகை கேட்டதும் நான் கேட்ட கேள்வி,அவங்க அப்பாவிடம் காட்டியாச்சான்னு,

சுசி இந்த தலைப்பை ஆரம்பித்ததற்க்கு முதலில் நன்றி. ரேனு நீங்க எவ்ளோ feel பண்ணி இத எழுதியிருக்கிங்க. படிக்கும் போது எனக்கு கண்ல கண்ணீர் வருது, உடம்பெல்லாம் புல்லரிக்குது. நாங்க உங்கள மாறி இல்லாம வேணானு தள்ளி தள்ளி போட்டோம். இப்ப எங்கள அது வேணான்னு ஒதுக்கி தள்ளிட்டு இருக்கு. அது ஒரு சுகம் னு அப்ப நா உணரல. இப்ப ஏங்குறன். தயவு செய்து யாரும் தள்ளி போடாதீங்க. நீங்க கேக்குறப்ப அது கிடைக்காது. நம்ம குழந்தைய நம்ம கனவர் கெஞ்சுறத பாக்குரதே தனி சந்தோசம் தான். குழந்தை இல்லா அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என்னையும் சேர்த்து விரைவில் தாய்மை அடைய இறைவனிடம் என்னுடைய பிராத்தனைகள்.
நன்றி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மன்னிக்கவும் தெரியாமல் இரண்டு முறை அனுப்பிவிட்டேன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ரேனுகா sister..
கேட்கவே ரொம்ப புல்லரிப்பா இருக்கு பா .எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி பா.நான் இந்த மாதம் ரொம்ப எதிர்பற்குறேன் பா .23 தேதி period  date .ரொம்ப பயமா இருக்கு பா .

அஷ்விதா நீங்க சொல்றது ரொம்ப சரிதான் பா .தாய்மைஇன் உணர்வுகளும் ,சந்தோசங்களும் அனுப விக்கிரவ களுக்கு மட்டும்தான் தெரியும் .நமக்கும் அந்த சந்தோசம் கூடிய சிக்கிரம் கிடைக்க வேண்டுவோம் 

madam yenakku PCOD problems irukkunnu doctor sollirukkanga. yenakku marriage agi 5months aguthu innum kolanthai illa PCOD problemkku Treatemnt yethuttu irukken intha masam innum periods agala 2 days thalli poyirkku lighta komattal irukku lighta adivayiru valikkuthu intha arikuriyellam kansive agathana ple explain

Rompa nalla irukku pa

மேலும் சில பதிவுகள்