வெல்ல அதிரசம்

தேதி: October 11, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (14 votes)

அதிரசம் இல்லாமல் தீபாவளியா! காலம் காலமாக தீபாவளியன்று செய்யப்படும் பலகாரங்களில் மிக முக்கியமானது இந்த அதிரசம். நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடக் கூடிய ஒரு பலகாரம் இது. விரைவில் கெட்டு போகாது. சீனி, வெல்லம் இரண்டைக் கொண்டும் அதிரசம் செய்யலாம். வெல்லத்தைக் கொண்டு அதிரசம் செய்வது எப்படி என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.

 

பச்சரிசி - ஒரு கிலோ
வெல்லம் - 3/4 கிலோ
ஏலக்காய் - 6


 

ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து களைந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு ஒரு காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை போட்டு பரப்பி விட்டு நிழலில் 20 நிமிடம் உலரவிடவும்.
அரிசி நன்கு காய்ந்து விடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும் போதே எடுத்து விடவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சல்லடையில் மீதம் இருக்கும் மாவையும் மிக்ஸியில் போட்டு மீண்டும் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூள் செய்து போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் பாகின் சுவை நன்றாக இருக்கும்.
பாகின் பதம் தெரிந்துக் கொள்ள ஒரு தட்டில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது பாகை எடுத்து ஊற்றினால் கரையாமல் இருக்க வேண்டும், கையில் எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் விரலில் ஒட்டாமல் முத்து போல் வரவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவைக் கொட்டி அதில் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். அதில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.
ஒரே முறையில் அனைத்து பாகையும் கொட்டிவிடாமல் சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு கைவிடாமல் கிளறவும். மாவும் வெல்லமும் ஒன்றாக சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு கிளறிய பிறகு, அதனை அப்படியே பாத்திரத்தில் வைத்து சுமார் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். மாவு அப்போதுதான் புளித்து பதமாய் வரும்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு ப்ளாஸ்டிக் கவரின் மீது சிறிது எண்ணெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வைத்து, கைகளால் வட்ட வடிவில் தட்டையாக தட்டவும்.
பிறகு அதனை எடுத்து எண்ணெய்யில் போட்டு வேக வைக்கவும். தீயை அதிகம் வைக்காமல் மிதமான தீயில் வேக விடவும்.
சற்று பொன்னிறமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைத்து, இரண்டு புறமும் சற்று சிவந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிடவும். வாணலியில் உள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு இரண்டு, மூன்று போட்டு எடுக்கலாம். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாதவாறு பார்த்து செய்யவேண்டும்.
அதிகம் சிவக்க விடாமல் எடுத்து விடவும். அதிரசம் மொறுமொறுப்பாக இருக்கக் கூடாது.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Do we need to keep the dough in refrigerator for 2 days or outside temparature. And is there a way to ensure that the dough is ready if we are not sure about the condition on temp.

Thanks in Advance
MythS

பாகுடன் பிசைந்து மாவினை அறை வெப்பநிலையில் புளிக்க விடவேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. 24 மணிநேரம் வைத்திருந்தால்கூட போதுமானது. 36 மணிநேரத்தில் நல்ல பதத்திற்கு வந்திருக்கும். அதிரசங்களாக இடுவதற்கு முன்பு மாவை ஒருமுறை கட்டிகள் இல்லாமல் பிசைய வேண்டும். தளர்வாக இருந்தால் பதமாக உள்ளது என்று அர்த்தம். சற்று கெட்டியாக இருந்தால், சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும். பிறகு அதிரசங்களாக தட்டி, எண்ணெய்யில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

சற்று புளித்தவுடன் மாவின் அடர்வு குறைந்து, மேலெழும்பி வந்திருக்கும். இதனைக் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். மாவு புளித்தல் என்றால், தோசை மாவு போல் புளிக்காது. ஆனால், கிளறியவுடன் உள்ள மாவிற்கும், இரண்டு நாட்கள் வைத்திருந்து எடுக்கும் மாவிற்கும் சுவையில் சற்று வித்தியாசம் தெரியும். இதனைக் கொண்டும் முடிவுசெய்யலாம்.

Thanks for clarifying the same.

பார்த்த உடன் செய்ய வேண்டும் போல இருக்கிறது ஆனால் இதுல் உள்ள அளவுகள் மிக அதிகமாக உள்ளது(1கிலோ) எனவே குறைத்து செய்யலாம் என்றால் இங்கு எல்லாம் lb ல் உள்ளது.. அதிரசத்தில் அளவுதான் மிக முக்கியம் என்பதால் தயவு செய்து இதை கப்பிலோ அல்லது lb லோ கூறினால் எனக்கு மிகவும் பயன்படும்..

மனோ மேடத்தின் அதிரசம் பாருங்கள்,

வேற யாருப்பா அதிரசம் எக்பேட் santhooviRku உதவுங்கள்
தீபாவளிக்கு உங்கள் பேரை சொல்லி செய்வார்கள்

ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா அக்கா நானும் ரொம்ப நாளா செய்துவிட முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை..மனோ மேடம் செய்முறை பார்த்தேங்க்கா இது படங்களுடன் இருந்த்தால் இதை டிரை பண்ணலாம் என்று நினைத்தேன்..இன்று அவர்கள் கூறிய அளவு தான் அரிசி ஊறவைத்திருக்கேன்..பார்க்கலாம்

pls reply how many time taken prepare paagu

can you tell me the ratio in cups instead of kgs and lbs
thanks

எலக்ட்ரிக் குக்கர் கப் சைஸ்ல 6 கப்

KEEP SMILING ALWAYS :-)

romba thanks,unga athirasam super,nan arusuvain new member,ennaiyum unga teamla serthukongo

athirasam nandraga vanthadhu.romba nandri.

nan athirasam mavu serthu orunal aagirathu... ipo seyyalam nu oil la pottal pirinithu pogirathu... what reason for that...