சோளம்

சோள அவல் செய்வது எப்படி?
<!--break-->

தற்செயலாக இந்த இழை என் கண்ணில் பட்டது.
சோள ரவை தெரியும். சோள அவல்... கேள்விப்பட்டது இல்லை.

'சோள அவல்' என்றால் என்ன, எப்படித் தயாரிப்பது, பின்பு அதைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பது பற்றி அறிந்துகொள்ள ஆவல். யாருக்காவது தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

சோள‌ அவல்‍‍
மக்காசோளத்தில் செய்தால் ம் ம் அது தான் கார்ன் ஃப்ளேக்ஸ் என்று நினைக்கிறேன் இமா

அரிசியிலிருந்து அவல் தயாரிக்கும் அதே முறையில் தான் சோள அவல் தயாரிக்கப் படுகிறது. மற்ற அவலைக் கொண்டு செய்யப் படும் எல்லா உணவுகளைப் போன்றே இதிலும் செய்யலாம். Jowar Flakes என்று கூகிள் பண்ணிப் பாருங்கள் இமா, கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் அதிகம் சோளம் உபயோகிப்பார்கள்.

முதலில் பதில் சொன்னதற்கு நன்றி நிகிலா & வாணி. இப்போது கண்ணில் படாமலிருந்திருந்தால் நான் பார்க்க வருடங்கள் ஆகி இருக்கும். :-)

கார்ன்ஃப்ளேக்ஸ்... அவல் போல இல்லாமல் வேறு விதமாகத் தயாரிப்பார்கள் என்று நினைத்தேன். அத்தனை மென்மையாக மொரமொரப்பாக இருக்கிறதே!

ஊரில் ஒரு அங்கிளும் அவர் பிள்ளைகளும் (வயல் விதைத்திருந்தார்கள்.) ஆன்டி வீட்டிலில்லாத சமயம் அவல் செய்து, பிழைத்துப் போக என்னிடம் யோசனை கேட்டு வந்தார்கள். ஆன்டி வருவதற்குள் சரிசெய்தாக வேண்டும். :-) கமத்தொழில் மாத சஞ்சிகை ஒன்றிலிருந்து குறிப்பு எடுத்துக் கொடுத்தேன். சோள அவலைப் பார்த்ததும் அந்த நினைப்பு வரவும்... எப்படித் தயாரிப்பார்கள், சாதாரண அவலின் தன்மை வேறு ஆகிற்றே! என்று தோன்றவும்தான் என் கேள்வியைப் போட்டு வைத்தேன்.

வாணி சொன்ன வழியே போய் தயாரிப்பு முறை பற்றி அறிந்தேன். உலர்ந்த அவல் எத்தனை ஊற வைத்தாலும் கடுமையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முதிர்ந்த பச்சை சோளத்தை ஊற வைத்து தயாரிப்பார்களோ!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்