உடனடி பதில் தேவை frds

எனக்கு காலைல இருந்து மூச்சுப்புடியாக உள்ளது.யூரினும் அடிக்கடி போய்ட்டு இருக்கு.இது எதுனால.பதில் தெரிந்த தோழிகள் பதில் கூறுங்கள் ப்ளீஸ்.என்ன செய்தால் இது சரியாகும்.எனக்கு பீரியட் வரதுக்க்கு இன்னும் 14-நாள் இருக்கு.ப்ளீஸ் உதவுங்கள் தோழிகளே

அன்புள்ள‌ ஜோஸுக்கு மூச்சுப் பிடிப்பினாலேயே அளவுக்கு அதிகமாக‌ சிறுநீர் போக்கு இருக்கலாம். அதனால் முதலில் மூச்சுப் பிடிப்பு போவதற்கு வைத்தியம் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள‌ விக்னேஸ்வரிக்கு, முடக்கத்தான் கீரையை எல்லோரும் தாராளமாகச் சாப்பிடலாம். சொல்லப் போனால் உங்களுக்கும் நல்லதே.பிரசவத்திற்குப் பின்னால் வரும் கை, கால், மூட்டு வலிகளுக்கு மிகவும் நல்லதே, குழந்தைக்கும் தரலாம், ஆனால் அளவோடு தர‌ வேண்டும். அது மட்டுமல்ல‌ கீரைகளை மிகவும்
நன்றாக‌ வேகவைக்க‌ வேண்டும், குழந்தை சாப்பிடுவதானால் காரத்தைக் குறைத்துக் கொள்ளவும், உங்கள் உள்ளங்கை அளவுக்கு மேல் கீரை தர‌ வேண்டாம் என்பது என் கருத்து, அளவோடு தரவும்.
குழந்தைக்குத் தரும் கீரையோடு முடிந்தால் குப்பைமேனிக் கீரை
கிடைத்தால் தினமும் இருபது இலைகள் இந்தக் கீரையோடு சேர்த்து
வேகவைத்துக் கொடுக்கவும். அது வயிற்றில் பூச்சிகளைக் கொன்று விடும், எந்தப் பூச்சிக் கடிக்கும் அது மிகச் சிறந்த‌ மருந்து, சளி பிடிக்காமல் தடுக்கும், தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து.
இந்தக் கீரை பொடியாகவும் கிடைக்கும், பொடியாகக் கிடைத்தால்
மூன்று நாளைக்கு ஒரு தடவை கால் டீஸ்பூன் அளவு பொடியுடன்
தேனையும் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விழுங்க‌ வையுங்கள்.
பிஸ்கெட் போன்றவைகளால் வயிற்றில் உருவாகும் புழுக்களைக்
கொன்று விடும், அவை மலத்தோடு வெளியேறி விடும், சளி
பிடிக்காது.

நன்றி வேறு எனன கீரை தரலாம் பாப்பாக்கு.சாதம் வேக வைத்து குழைத்தாலும் உடைந்த சாதமாக இருக்கே. மாவா குழைய வைக்கனுமா...அப்படின்னா மிக்சில அடிக்கலாமா... தல காய்து யாரும் இல்லை கேட்க உதவுங்கள்... அப்படி சாதம் உடைந்து இருந்தால் பாப்பாக்கு செமிக்குமா ...செமித்து என்று எப்படி தெரிந்து கொள்வது... மிக்சியில் கொடுத்தால் பரவாயில்லை என்றால் எத்தனை வயது வரை அப்படி தர முடியும்.. வீட்டில் பெரியவர்கள் இல்லாததால் குழம்பி தவிக்கிறேன்.. எது கொடுக்கவும் பயமாக இருக்கு plz help

புழுங்கல் அரிசியை நன்கு கழுவிக் காயவைத்து மிஷினில் பூ நொய்யாக‌ உடைத்து வைத்துக் கொள்ளவும். அதை வேண்டுமான‌
அளவிற்கு எடுத்து ஒரு பத்து நிமிடம் ஊற‌ வைத்து அளவான‌ தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து பின்னர் பருப்போ கீரையோ பாலோ
தயிரோ சேர்த்தோ தரலாம். இட்லி, இடியாப்பம், காய்கறி சூப் தரலாம்.
மிளகாய் இல்லாமல் மிளகு சீரகம் தக்காளி சேர்த்த‌ ரசம் நல்லது.எல்லா
வகையான‌ கீரைகளும் தரலாம். நிறைய‌ பதிவுகள் அறுசுவையில்
உள்ளன‌. அவற்றை ஒரு முறையாவது படித்துப்பார்த்து குறிப்பு எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
குறைந்தது ஒரு வயது வரை குழையக் கொடுப்பது நல்லது, அதற்குப்பிறகு நாம் உண்ணும் உணவையே குட்டி குட்டி உருண்டைகளாகவும் தோசை போன்றவற்றை குட்டி குட்டி டிசைனில்

ஊற்றி கண்ணைக் கவரும் விதத்தில் சின்ன‌ குட்டித் தட்டில் வைத்து
நம்மோடு சேர்ந்து சாப்பிடப் பழக்குவது நல்லது. எந்த‌ உணவைக் குழந்தைக்குக் கொடுத்தாலும் நாம் முதலில் சுவை பார்த்து பிறகு கொடுப்பது மிகவும் நல்லது, நூடுல்ஸ், பீட்ஸா. பர்கர் போன்ற‌ இந்த உருப்படாத‌ உணவுகளை ஆரம்பத்திலேயே பழக்கப் படுத்தாதீர்கள்.
நீங்கள் வேலைக்குப் போகவில்லை என்றால் இந்த வகையான உணவுகளை வீட்டிலேயே தயாரித்துத் தரலாம். இவற்றோடு சிறு தானியங்களைக் கலந்து தயாரித்தால் மிக‌ மிக‌ நல்லது. சர்க்கரைக்குப்
பதில் நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பனஞ் சர்க்கரை, வெல்லம் பயன் படுத்தவும்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்