புதினா ரைஸ்

தேதி: April 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

அரிசி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 3
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
முந்திரி - 5
அரைக்க:
தக்காளி - ஒன்று
புதினா - ஒரு கட்டு
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 10 பல் (சிறிய பல்)
முந்திரி - 5
பட்டை - சிறு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

புதினாவை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியைக் களைந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு பிழிந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் வதக்கவும்.
பின்பு அரைத்த விழுது, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு விசில் முழுதாக விட்டு, 2 ஆவது விசில் வரும் முன் அடுப்பை நிறுத்தி விடவும். ஒரு டர்க்கி டவலை நீரில் நனைத்து குக்கரை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
சுவையான புதினா ரைஸ் ரெடி. ஆனியன் ரைத்தா அல்லது வெஜ் குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

காரம் அதிகம் விரும்புபவர்கள் அரைக்கும்போது 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... பசுமையா கண்ணுக்கு விருந்தா இருக்கு சமையல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி முதல் பதிவிட்டு வாழ்த்தி, சந்தோஷத்தில் மூழ்கச்செய்திட்டீங்க:)

குறிப்பினை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும், குழுவினருக்கும் மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செல்வி...கண்ணுக்கு குளிர்ச்சியா ,ஹெல்தியா சுப்பர் ரெசிபி.....

Be simple be sample

சுவையான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரேவ்ஸ் உங்க பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி :)

முசி மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இன்று புதினா ரைஸ் செய்தேன்....
அருமையாக‌ இருந்தது. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க‌ நன்றி!