உதவுங்கள் தோழிகளா

எனக்கு அடிக்கடி கோவம் வருகிறது.என் கோவத்தை குறைக்க வழி சொல்லுங்கள் தோழிகளே

கோபமாக இருக்கும்போது பேசுவதை தவிருங்கள்.
பேசுவதற்கு பதில் நீங்கள் நினைப்பதை
ஒரு பேப்பரில் எழுதுங்கள்
ஏனெனில் எழுதும் போது வார்த்தைகள் தடிக்காது.
கோபம் தீர்ந்த பிறகு நீங்கள் எழுதியதை
படித்து பாருங்கள், அதை பேசியிருந்தால்
அவர்கள் மனம் எவ்வளவு புண்படும் என்று
நினைத்து பாருங்கள் உங்கள் கோபம் குறைய
வாய்ப்புள்ளது.(மறக்காமல் அந்த பேப்பரை கிழித்து போடவும்).

பதில் அளித்ததற்க்கு நன்றி தோழி

சில நேரம் கோவம் அதிகமாகும் போது சுவரில ஓங்கி நானே அடுச்சுக்குவேன்.நானும் கோவத்தை control பன்னனும்னு நினைப்பேன்.ஆனா முடிய மாட்டிக்குது.என்ன பண்றதுனே தெரியல

நானும் இதே மாறி கல்யாணம் ஆன புதுசுல கோவம் வரும் போது சுவற்றில் தலையை இடிப்பதும், கையை ஓங்கி குத்துவதுமாக இருந்தேன். பின்னர் நானே என்னை மாற்றி கொண்டேன். அந்த நேரம் கண்ணை மூடி பல்லை கடிச்சுகிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருப்பேன். மனசுக்குள்ளயே திட்டி தீர்த்துடுங்க. வேற எதையாவது நெனச்சி பாருங்க. சின்ன வயசு சந்தோசத்த. அழுகை தான் வரும். கோவம் போய்டும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

எனக்கு கோவம் கண்ணு மண்னு தெரியாம வரும் :) ஆனா அந்த சில நிமிஷம் அந்த இடத்தை விட்டு போயிடுவேன். கூடவே கோவமும் போயிடும். சிம்பிள். சில நேரம் எதாச்சும் கோவம் வரும்படி இங்க பதிவை பார்த்தா கூட அந்த நிமிஷம் நான் போடும் பதில் எனக்கு பிரெச்சனை தான்... அந்த நிமிஷம் சிஸ்டம் க்ளோஸ் பண்ணிட்டு போயிடுவேன். அதன் பின் நான் என்னை திட்டுறவங்களுக்கே பதில் போட்டாலும்... அதுல கோவம் இருக்காது. வீட்டிலும் அப்படி தான்... கோவம் வரும் போது எழுந்து போயிடுவேன். எல்லாரும் திடீர்னு எங்க போயிட்டான்னு பார்ப்பாங்க... ஆனா நான் போகலன்னா அன்னைக்கு வீட்டை இரண்டாக்கிடுவேன்.

ஏன் அப்படி கோவத்தை மறைக்கனும்... இப்ப என்னை எடுத்துகிட்டா நான் கோவம் வரும் போது ஏகமா பேசிடுவேன், அப்பறம் என்னடா இப்படி பேசிட்டோம்னு நானே அழுவேன். தப்பு பண்ணிட்டு சாரி கேட்பதை விட அந்த நிமிட கோவத்தை மறைச்சுட்டு மனசை அமைதியா விட்டா கோவம் காணாம போகும்... சில நேரம் கோவத்துக்கு காரணமா இருந்த எதிராளி பேச்சு நியாயமா கூட தோணும். ;) எனக்கு பல முறை தோணியிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள மாதிரி தான் நானும் கோவப்பட்டுட்டு பிறகு வருத்தபடுவேன்.sister

அன்புள்ள அக்கா,
உங்கள் சினம் குறைய வேண்டுமா? டாய்லட்டிற்கு சென்று முகத்தை கழுவி தாங்கள் பேச நினைப்பது அனைத்தயும் பேசி விட்டு வெளியே வாருங்கள் உங்கள் கோபம் போயே போச்சு... நான் கோபமாக இருக்கும் போது இப்படி தான் செய்வேன்

ஹாய் ஜோஷ் அக்கா எப்படி இருக்கிங்க. ஒங்கலுக்கு கோவம் வரும்போது பேசுரத கொரச்சுக்கோங்க அப்றம் கோவப்படும் பொது ஒங்க முகத்த கண்ணாடி எடுத்து பாருங்கலே ஒங்லலுக்கே புடிக்காது. ஏனா இவ்லோ அழகா இருந்த நம்ம முகமா இப்படி பயங்கரமா இருக்குனு தோனும் ஒ கே வா ஜோஷ்

I LOVE SUNDAR

சரிதான் வினித்தா

ஹாய் jose.... எப்படி இருக்கீங்க.... எனக்கும் உங்களை போல தான்... நீங்க இந்த கேள்வியை கேட்டது எனக்கு ரொம்ப யூஸ்புல் அஹ இருக்கு... ஏன்ன இங்க சகோதரிகள் குடுத்து இருக்கும் டிப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு.... ரொம்ப நன்றி தோழிகளே....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்