வாழைப்பழ பணியாரம்

தேதி: April 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

மைதா - ஒரு கப்
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வாழைப்பழம் - 2
ஏலக்காய் - 4
பொடியாக நறுக்கிய தேங்காய்
நெய் (அ) எண்ணெய் - பொரிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், மைதா, ரவை, சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
ஊறிய பின் வாழைப்பழ கலவையை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மசிந்து மாவு பொங்கி வரும்.
அரைத்த மாவில் நறுக்கிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
பின் அடுப்பில் குழிப்பணியாரக்கல்லை வைத்து நெய் (அ) எண்ணெய் விட்டு, அதில் மாவை ஊற்றி வேக விடவும்.
சிவந்ததும் திருப்பி விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வாழைப்பழ பணியாரம் ரெடி.

இதே மாவு கலவையை கடாயில் எண்ணெயை காயவிட்டு, குழிக்கரண்டியில் மாவை எடுத்து நேரடியாக எண்ணெயில் ஊற்றி பொரித்தும் செய்யலாம். இதனை அத்த பணியாரம் என்று கூறுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... சுவையான வாழைப்பழ பணியாரம். விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

wow, super rev. ore kalakkal sweet kurippa kudukiringa... seiyara methodum easy.. nan directa oilla potu edupen, ini unga methodla seithu parkiren. congrats and thanx for the receipe...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் மற்றும் அறுசுவை குழுவினர்க்கும் நன்றி..

முதல் பதிவையிட்டு வாழ்த்திய தோழிக்கு நண்றி..விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சா..சீக்கிரம் செய்து பாருங்க.

என்னேயும் எப்போதும் வாழ்த்தி உற்சாகம் குடுக்கும் சுமி நன்றிப்பா..கட்டாயம் செய்து பாருங்க.இந்த முறை எண்ணை அதிகம் குடிக்காது..

Be simple be sample

Tnx for d recipie

Eat healthy

ரேவதி நான் செய்து பார்த்தேன். ஆனால் அரைக்காமல் செய்தேன். சரியாக வரவில்லை. பிறகு சிறிது கோதுமை மாவு சேர்த்து செய்தேன். சுவை நன்றாக இருந்தது

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

அட அப்ப சீக்கிரம் செய்து பாருங்கபா.thankspa

Be simple be sample

தாமரை செல்வி..செய்து பார்த்து பதிவிட்டத்கு மிகவும் நன்றிப்பா..ஆனா ஏன் அரைக்கல நீங்க..கோதுமையிலயும் செய்லாம்பா.மைதாஅவிட ஹெல்திதான அது..thanks selvi

Be simple be sample

பணியாரம் சுவை அபாரம்.... :) செய்து முக புத்தகத்தில் ஃபோட்டோவும் போட்டுட்டேன். செய்துட்டு தான் சொல்லனும்னு இத்தனை நாள் பதிவிடாம இருந்தேன். நேற்று செய்தாச்சு. நல்ல சுலபமான குட்டீஸ் ரெசிபி. நன்றி ரேவ்ஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பணியாரம் சூப்பர்.. படத்துலேயே டக்கரா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

நன்றி வனி..அதுக்குல்ல செய்து பார்தாச்சா..
போட்டோ பார்தாச்சு கும்முனு சூப்பரா இருக்கு..தான்க்ஸ் வனி

சாப்பிடவும் நல்லா இருக்கும் பாக்கியா.தான்க்யு செல்லம்

Be simple be sample

சகோதரி,
எந்த வாழைப்பழமும் சேர்த்துக் கொள்ளலாமா? மைதாவிற்கு பதில் கோதுமை சேர்த்துக்கொள்ளலாமா?