இதுதான் நான் ஆட்சி செய்யும் இடம். என் சமையலறை சிறியது என்றாலும், அதை எனக்கு மிக வசதியாக இருக்கும்படி அழகான முறையில் என் கணவர்தான் செய்து கொடுத்துள்ளார். இந்த பெரிய ஜன்னலின் வழியாக வரும் வெளிச்சம் தான் என் சமையலறையை பிரகாசிக்க செய்யும். வெயில் காலத்தில் இந்த ஜன்னலை திறந்தால் இனிமையான காற்று வரும்.

மேடையின் மேல் ரைஸ் குக்கர், காஃபி மேக்கர், அதன் அருகே பழத்தட்டு வைத்துள்ளேன். கீழே இருக்கும் கேபினட்டில் பளிங்கு கோப்பைகள், கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை வைத்துள்ளேன்.

நான் உபயோகிப்பது அவனுடன் சேர்ந்த எலக்ட்ரிக் அடுப்பு. அதன் மேலே புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடம். அதன் அருகே பாத்திரங்கள் கழுவி வைக்க ஒரு கூடை வைத்துள்ளேன். மேலே சுவற்றில் பாத்திரம் கழுவும் பஞ்சு மற்றும் துடைக்கும் பஞ்சு வைப்பதற்கு ஸ்டேண்ட் மாட்டியுள்ளேன். பெரிய ஆப்பைகளை வசதியாக எடுத்துக் கொள்ள சுவற்றில் மாட்டியுள்ளேன். கீழே இருக்கும் கேபினட்டில் காலி டப்பாக்கள் வைத்துள்ளேன். கடைசியிலிருப்பது பாத்திரம் கழுவும் மெஷின். அதன்மேல் நாங்கள் தினமும் உபயோகிக்கும் ப்ளேட், டம்ளர், மக் ஆகியவற்றை வைத்துள்ளேன்.

மேலே உள்ள கேபினட்டில் இடது பக்கம் ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டங்கள் இருக்கும். காபி பவுடர், டீத்தூள், சீனி, சாக்லெட் ட்ரிங்க் பவுடர், புதினா டீ பாக்கெட் இவைகள் இருக்கும். வலது பக்கத்தில் சிறிய பாட்டில் மற்றும் டப்பாக்களில் மசாலாக்கள் வைத்துள்ளேன்.

அதன் பக்கத்திலுள்ள அலமாரியில் விருந்தினர்கள் வந்தால் உபயோகிப்பதற்காக உள்ள கப்கள், க்ளாஸ்கள் வைத்துள்ளேன்.

நேராக இருக்கும் கதவை திறந்தால் ஹால் இருக்கும். மேலே சுவற்றில் கடிகாரம் மாட்டியுள்ளேன். குழந்தைகள் பள்ளியிருந்து வருவதற்குள் சமைக்க மற்றும் நாம் அதிக நேரம் சமையலறையில் இருப்பதால் நேரம் பார்க்க வசதியாக இருக்கும். வலது பக்கத்தில் ஃப்ரிட்ஜும் அதன் மேலே ஒரு பூஜாடியும் வைத்துள்ளேன். மைக்ரோவேவ் அவனுக்கு தனியாக ஒரு அலமாரி, அதன் உள்ளேயும் பாத்திரங்கள் வைத்துள்ளேன். அருகே என் சமையலறை பெயிண்ட்டின் நிறத்திற்கேற்றது போல் அவ்வப்போது மாற்ற ஏதுவாக சிறிய குப்பை கூடை வைத்துள்ளேன். அருகே இருக்கும் கதவை திறந்தால் என் ஸ்டோர் ரூம். அதன் கதவில் ஒரு கண்ணாடி மாட்டியுள்ளேன். இதுதான் என் சமையலறை. இதிலிருக்கும் அனைத்தும் நான் தேர்ந்தெடுத்தவையே.

Comments
ரசியா
ரொம்ப அழகா பளிச்சுன்னு இருக்கு கிச்சன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi rasiyana
Nice and neat kitchen....
ரசியா
ரசியா உங்க கிச்சன் பளிச்னு ரொம்ப அழகா இருக்கு.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ரஸியா
ரஸியா கிச்சன் நீட்டா இருக்கு பளிச்சுன்னு க்ரீன் கலர் ரொம்ப அழகு உங்க கிச்சன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நிஸ்ரினா
அழகாக பளிச்சென்று இருக்கு உங்க கிச்சன். ஒழுங்குபடுத்தி இருக்கும் விதம் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
நன்றி வனிதா
முதல் பதிவுக்கும்,பாராட்டுக்கும் நன்றி வனிதா.
Eat healthy
thanu
Tnx for ur comment & i m not rasiyana, i m rasia
Eat healthy
kavisiva
Romba nandri kavi
Eat healthy
devi
Romba santhosham devi.cabinet dark color enbathaal light green paint adithen.
Eat healthy
imma madam
Thank u so much for ur comment.kitchen smalla irukarathala athikama porulkal vaangi adaika maaten.thevaiku veenumguratha vachikuven.
Eat healthy
ரஸியா
கிச்சன் பளிச்சென்று இருக்கு.நல்ல வசதியான அமைப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா மேடம்
பாராட்டுக்கு மிக்க நன்றி
Eat healthy
hai to all.. iam new to
hai to all.. iam new to arusuvai...hai rasiya mam.. ur kitchen is very very super...
allah is great
nice
கிச்சன் ரொம்ப அழகா இருக்கு
Give respect and take respect
welcome naseema
Tnx for ur comment nd i welcome to arusuvai
Eat healthy
merina jeyam
Thank u merina
Eat healthy
hai
Mrs Rasia...really good and comfort kitchen and i never seen in before
this type of kitchen in my life...good and keep it up.
GOWTHAM1
Thank u so much Gowthami,i am so so so happy to read ur comment.
Eat healthy
hai rasia
Hai rasia really super pa unga kitchen paka romba alaga iruku ,
Maintain panuriga super ha , en amma sollu va kitchen maintain panuravaga
Nalla family ya run panuvaganu rasia , really ur too great gud habit .....
அன்புள்ள ரஞ்சனி
ரஞ்சனி உங்க பாராட்டை கண்டு ரொம்ப சந்தோஷம் அடைந்தேன்பா,மிக்க மகிழ்ச்சி,ரொம்ப ரொம்ப நன்றி
Eat healthy