கேரமல் ப்ரெட் புட்டிங்

தேதி: April 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (17 votes)

 

ப்ரெட் துண்டுகள் - 6 - 8
பால் - ஒன்றரை கப்
வெனிலா எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - 15 தேக்கரண்டி + 6 தேக்கரண்டி


 

ப்ரெட்டை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.
அதில் பால் விட்டு ஊற விட்டு 15 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பிசைந்து வைக்கவும்.
கடைசியாக வெனிலா எஸன்ஸ் சேர்க்கவும். பதம் கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
6 தேக்கரண்டி சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கலந்து கொண்டே இருக்கவும். ப்ரவுன் கலரில் கேரமல் தயாரானதும் அதை குக்கரில் வைக்க போகும் பாத்திரத்தில் ஊற்றவும்.
அதில் ப்ரெட் பால் கலவையை ஊற்றி மேலே அலுமினியம் ஃபாயில் போட்டு மூடவும். ஸ்டீம் வெளியேற அதில் ஓட்டைகள் இட்டு வைக்கவும். குக்கரில் நீர் விட்டு இதை வைத்து மூடி விசில் இல்லாமல் வேக விடவும்.
15 - 20 நிமிடங்களில் வெந்திருக்கும். கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும் போது எடுக்கலாம்.
சுவையான முட்டை இல்லாத கேரமல் ப்ரெட் புட்டிங் தயார். பாலின் அளவு ப்ரெட்டை பொறுத்து கூடவோ குறையவோ செய்யும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் என்றால் சற்று கூடுதலாகவே பாலை இழுத்துவிடும். பால் சர்க்கரைக்கு பதில் கன்டண்ஸ்டு மில்க் கலந்தும் இதே போல் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அசத்தல் போங்க...பார்க்கவே யம்மியா இருக்கு..இதுக்கு அலுமினிய பாயில் பேப்பர் தான் யூஸ் பண்ணனுமாப்பா.இல்ல டிபன் பாக்ஸ்ல வச்சி பண்ணா சரியா வருமா ..சொன்னிங்கனா சீக்கிரம் செய்துடுவோம்ல..

Be simple be sample

கேரமல் தயாரிப்பதை மட்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க... ப்ளீஸ்

அன்புடன்
மதி

சுப்பர்ப் வனி.

‍- இமா க்றிஸ்

wow super &very simple pudding ..
naan egg saapidamaten ..egg illatha pudding-ga udane seithutu reply pannuren ..foil paper use pannanumaa..

ரொம்ப நல்லா இருக்கு வனி. ரொம்ப simple ingredients ஒட இவ்லொ supera செய்திருக்கிங்க. கன்டிப்பா try பன்னிட்டு சொல்ரேன்.

தோழிகளே... ஃபாயில் பேப்பர் கட்டாயம் இல்லை. எதுவும் மூடாமலே வைக்கலாம். நான் நீர் போகாம இருக்க மூடி இருக்கேன்... ஸ்டீம் போகாம இருக்க இல்ல. ஸ்டீம் போக தான் ஓட்டை போட்டிருக்கு. அதனால் மூடு போடாத பாத்திரத்தில் வைக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேரமல் செய்ய சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி நீர் விட்டு சிறுந்தீயில் அல்லது மிதமான தீயில் கரண்டியால கலந்து கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை கரைந்து கலர் மாற துவங்கும். லேசான ப்ரவுன் கலர் வந்ததும் எடுத்து குக்கரில் வைக்க போகும் பாத்திரத்தில் ஊற்றி பரவ விடலாம். சர்க்கரை கரைந்து ப்ரவுன் கலரில் வருவதை தான் கேரமல் என்போம். இதை செய்ய சர்க்கரையுடன் தேக்கரண்டி நீர் கட்டாயம் அல்ல... வெறும் சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு சிறுந்தீயில் கலந்து கொண்டே இருந்தாலும் கேரமல் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வனிதா ....ட்ரை பண்ணி பார்க்கிறேன் .

Super o super

வனி எனக்கே எனக்காக செஞ்சது போல இருக்கு.. இன்னிக்கே செய்யப்போறேன் :-) தேங்க்ஸலாட் வனி :-)

Don't Worry Be Happy.

ஹாய் வனி க்கா எல்லாரும் எப்படி இருக்கீங்க:))) நான் யாருன்னு தெரிதாக்கா? உங்க புட்டிங் என்னை இழுத்துருச்சுக்கா..சூப்பரோ சூப்பர் கண்டிப்ப செய்வேன்.

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Superrrrr

ரொம்ப நன்றி வனிதா... கேரமல் தயாரிப்பதை பற்றி நல்ல விளக்கமா சொல்லிருக்கிங்க.... கண்டிப்பா செஞ்சி பார்க்கிறேன்...

அன்புடன்
மதி

akka venila esance illana parava illaya

Hi akka ithu ennudaiya mudhal karuththu bread karamel pudding superb ungaludaya niraiya kurippu parthu samaithen romba nalla vanthathu thanks

super

மிக்க நன்றி :) அட்டம்ப்ட் அடிச்சீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்களுக்காகவே செய்தது தான் ஜெய் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)எல்லாரும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்லன்னா பரவாயில்லை. ஏலக்காய் தூள் சேர்த்துக்கங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ரொம்ப மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi madam unkalada ceramel putting supera iruku.enaku oru doubt nan pineapple esance use panalama pls reply

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

CERAMEL PUTTING KU COOKER LA VAITHA PIRAKU COOKER MUDI POTU MUDAVENDUMA PLS SOLUNKA

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

சாரி நேற்றே கேட்டிருக்கீங்க, நான் கவனிக்கல. பைனாப்பிள் எசன்ஸ் பயன்படுத்தலாம். குக்கரில் வெச்சு மூடி விசில் மட்டும் இல்லாம வைக்கணும் ஷாலினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi madam na today or tomorrow seivaen,senjutu kandipa soluraen.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

hi sister na try panitaen nala irunthathu taste but fist time putting try paninaen na extra half milk uthitaen athala athu losa vanthathu .suma ice cream mathri sapitom.extra ethuku uthunaen fridgela iruntha bread nala extra ayuduchu.oru doubt sister cooker la vaikira pathirathukum mudi vaikanuma(na cooker mudi use panunaen)pls intha doubt clear panunka.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

hi sister na try panitaen nala irunthathu taste but fist time putting try paninaen na extra half milk uthitaen athala athu losa vanthathu .suma ice cream mathri sapitom.extra ethuku uthunaen fridgela iruntha bread nala extra ayuduchu.oru doubt sister cooker la vaikira pathirathukum mudi vaikanuma(na cooker mudi use panunaen)pls intha doubt clear panunka.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி ஷாலினி. கொஞ்சம் சிதப்பிடுச்சோ :) சரியா வரும் அடுத்த‌ முறை டோன்ட் வொரி. உள்ள‌ வைக்கிற‌ பாத்திரம் அலுமினிய ஃபாயில் போட்டு மூடணும், இல்லன்னா குக்கர் மூடியில் இருந்து நீர் சிந்தும். அப்படி சிந்தினாலும் நீர்த்து வரும் புட்டிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks sister next time sure try panitu soluraen.sorry sister ippo than parthaen

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

Naanae unga post evlo late a paarthiruken :) idhukku yedhukku sorry??!! Try pannunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enaku oru doubt foil paper must ila kanu[ootai] pota silver plate use panalama pls itha matum solunka, ena enaku rempa pidichiruku intha bread putting athan ivavulu auestion kekuraen.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

Thattu pote mudalaam. Recipe kodutha doubt kum reply pannanum :) adhu enga kadamai shalini. Enna doubt naalum kelunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா