உருளைக்கிழங்கு அல்வா

தேதி: April 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

பெரிய உருளைக்கிழங்கு - 2
சீனி - ஒரு கப்
நெய் (அ) வெண்ணெய் - 75 கிராம்
வற்றிய பால் - கால் கப்
கன்டண்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 துளிகள்
பாதாம் பருப்பு - அலங்கரிக்க
உப்பு - ஒரு சிட்டிகை


 

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்து கொள்ளவும்.
நாண் ஸ்டிக் பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பில் வைத்து கிளறவும்.
அதனுடன் சீனி சேர்த்து கிளறவும்.
அதில் கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து இடைவிடாது கிளறவும்.
பின்பு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.
வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் .. உருளைகிழங்கு அல்வா .. சூப்பர் .. இப்பதான் கேள்விபடுரன் . சீக்கிரமே செய்து பார்க்கிறன் .

நல்ல குறிப்பு முசி :)

Kalai

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,கலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

unga ella kuripum really super and different one.congrats musi....potato halwa is really diferent and innovative one.......i heard this for the first time....

Expectation lead to Disappointment

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Masi,
Kurippu mikavum puthumai

அக்கா புதுமையாகவும் அருமையாகவும் இருக்கு விரைவில் செய்து பார்க்கிறேன் என் வாழ்த்துக்கள் அக்கா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith