எனக்கு சந்தேகம் தோழிகளே கூறுங்கள்.

எனக்கு கணிப்பொறியில் 8 மணி நேரம் வேலை. பிறகு வீட்டிற்கு சென்றாலும் தமிழ் நாட்டிற்கு பேச கனிபொரியயெ உபயோகிக்கிறேன். அதிக பட்சமாக 15 மணி நேரம் கணிபொறி உபயோகிக்கிறேன். இதனால் கருப்பை பாதிப்பு ஈற்படும் என்று எனது சொந்தகாரர் கூறுகிறார். இது உண்மையா. எனக்கு இதுவரி குழந்தை இல்லை திருமணம் ஆகி இது 3 ஆவது வருடம். எனக்கு கருப்பை குழி 2ஆகா பிரிந்துள்ளது .அதாவது கருப்பை இதயம் வடிவத்தில் உள்ளது.

//அதிக பட்சமாக 15 மணி நேரம் கணிபொறி உபயோகிக்கிறேன். // 15-8=6 ஹ்ம்!! தினமும் ஆறு மணி நேரம் பேசுவீங்களா? கட்டாயம் குறைச்சுக்கங்க. வேலையை குறைச்சுக்க முடியாது. பேசுறதை குறைக்கலாம், குறைக்கணும். எக்சர்சைஸ் இல்லாம இப்படி அதிக நேரம் ஒரே இடத்தில இருக்கிறது ஆரோக்கியத்துக்கு எந்த விதத்திலும் நல்லதில்லை.

//இதனால் கருப்பை பாதிப்பு ஈற்படும்// இது தெரியாது எனக்கு. ஆனால் நிச்சயம் வேறு பாதிப்புகள் ஏற்படும். 24-15=9 மீதி ஒன்பது மணிநேரம் இருக்கு. பயணம், சாப்பாடு என்று தினப்படி காரியங்கள் போக... எத்தனை மணித்தியாலம் தூங்குவீங்க? ஒழுங்கா சாப்பிடணும், ஓய்வு எடுக்கணும். ஆக்டிவ் ஆக இருக்கணும்.

வாரம் ஒரு நாள் ஒருத்தரோட பேசினா போதும் என்று தீர்மானிச்சுக்கங்க. எப்போ யார் என்று டைம்டேபிள் போட்டு, பேச ஆரம்பிக்கிறப்ப அலாரம் செட் பண்ணி வைச்சுருங்க. அலாரம் அடிச்சதும் பேச்சு கட். ;) மீதியாகுற நேரத்துல வீட்டுக்காரரோட வெளியே எங்கயும் போகலாம். வேலை நடுவுலயும் இடை இடையில் கொஞ்சம் எழுந்து அடுத்த டேபிள் வரையாச்சும் நடந்துட்டு வாங்க.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா கருத்து தெரிவித்ததற்கு நன்றி. கணிப்பொறியில் இருந்து வரும் கதிர் வீச்சானது கருப்பையை பாதிக்கும் என்று சிலர் கூறினார்கள்அதனால் தான் கேட்டேன். எனக்கு 3 வருடம் ஆகி விட்டது திருமணம் ஆகி. கணிப்பொறியில் வேலை செய்வது 1 காரணமாக இருக்குமோ என்று கேட்டேன். மற்றபடி நான் டயட் உணவுதான் சாப்பிடுகிறேன். தினமும் மாலை நேரத்தில் நடக்கிறேன்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்