பேக்டு பாகற்காய் சிப்ஸ்

தேதி: May 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (10 votes)

 

பாகற்காய் - 2
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

பாகற்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
எல்லா பொருட்களையும் பாகற்காயுடன் சேர்த்து கலந்து, பிரட்டிவிடவும்.
பேக்கிங் ட்ரேயில் குக்கிங் ஸ்ப்ரே அடித்து பாகற்காயை நிரப்பவும்.
அவனில் 425F சூட்டில் 25-30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இடையில் பாகற்காயை திருப்பிவிடவும். க்ரிஸ்பி பேக்டு பாகற்காய் சிப்ஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nalla tips but owan illathavanga eppadi seivathu?

very nice and easy recipe...nalaiku try paniduren......en kitta oru pavakai iruku,cake tray iruku use pannava kalai...but cooking spray ilai,ena seiyatum.unga reply ku apuram thaan seiyanum...inum neraiya recipes koduka en vazluthukal..
(ragii laadu seiya ragii vangitu vanthuten.karupatti illama nattu sarkarai serkava kalai...cucumber also ready for cucumber squash...seithutu ungaluku feedback solluren)

Expectation lead to Disappointment

ஆரோக்கியமான குறிப்புக்கு நன்றி கலா அவர்களே

Eat healthy

குறிப்பு வெளியிட்ட அட்மின் டீமிற்கு நன்றி :)

Kalai

தோசை தவாவில் எண்ணெய் தடவி காயை இடைவெளி விட்டு போட்டு கொஞ்ச நேரம் மூடி வேகவிட்டு,பின் மூடி போடாமல் முருக வைத்து எடுக்கலாம்.

Kalai

மீனா வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி :) மெசெஜ் பார்த்திருப்பீங்க ;)

Kalai

மிக்க நன்றி ரசியா :)

Kalai

thank u

படத்தை பார்த்ததும் நீங்கன்னு சொல்லும்படி பளிச்சுன்னு அழகா செய்துகாட்டி இருக்கீங்க... ஹெல்தி ரெசிபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலை,
சூப்பர் Presentation
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

படத்தை பார்த்ததுமே தெரிஞ்சிடிச்சா ;)நன்றி வனிக்கா :)

Kalai

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கவி :)

Kalai

கலா,

ஹெல்தி குறிப்பு! படத்தை பார்த்ததுமே செய்யத்தூண்டுது. நச்சுனு நாலு படம், ஒவ்வொன்னும் அழகா இருக்கு! நானும் பாகற்காயை பேக் செய்வதுண்டு, இன்று உங்க மெத்தட்ல மாவுக்கலவை போட்டு பிசறி செய்துப்பார்த்தேன். ரொம்ப பிடிச்சுது! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ