என் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத்

ஷனாஸ் சிஜாத் சமையலறை


எனது சமையலறை எனக்கு மிக முக்கியமான இடம். எனது வீட்டிலேயே எனக்கு மிகவும் விருப்பமான அறை. குடும்பத்தினருக்கு பசியைத்தீர்த்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணும் ஒரு தூய்மையான இடம். எனது சமயலறை கேபினட்ஸ் ஆன்டிக் பரவுண் நிறத்திலும், அதற்குப் பொருத்தமான டீக் பலகையாலும் ஆனவை. அதனால் நீடித்து உழைக்கும். மூன்று வேளையும் சமைப்பது என்பது எனக்கு சலிப்பில்லாத கலை. எனது சமையலறை கொஞ்சம் பழமையானது என்றாலும் எனக்கு பழமையில் எளிமை பிடிக்கும். சமையலறை வாயிலில் இருந்து பார்த்தால் இவ்வாறு தோற்றமளிக்கும், என்றாலும் இன்னும் கொஞ்சம் நீளமானது. எனது சமையலறை " ப " வடிவானது. முகத்தோற்றத்துக்கு பேன்ட்ரி கபோட்ஸ் அடித்து இருப்பதாலும் டைல் சமையல் கட்டுடன் இணைத்திருப்பதாலும் கபோட்ஸ் பாரமான பொருட்களை தாங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேற்தொகுதியில் கண்ணாடிக் குவளைகள், மெலமைன் பொருட்கள், சிறு கைப்பணி அலங்காரப்பொருட்கள் என்றும் வைத்துள்ளேன். சமையல் கட்டு அகலமாக இருப்பதால் மின்சார உபகரணங்களை வைத்து பாவிப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது. வலது பக்கம் ஒவன் வைத்துள்ளேன்.
my kitchen
 

எலக்ட்ரிக் ஒவன் வைத்தபகுதி இவ்வாறு இருக்கும். அதற்குக் கீழுள்ள கபோட் தொகுதியில் பால்மா, நூடுல்ஸ் போன்ற பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் வைத்துள்ளேன். ஏதாவது அன்றாடம் பாவிப்பதில் தீர்ந்து விட்டால் அதை திறந்து எடுக்க மிகவும் இலகுவாக இருக்கும். கபோட்டைத் தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டியும், கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடுக்கடுக்காக போட்டு வைக்கும் கூடையும் வைத்துள்ளேன். சமைத்து முடித்ததும் ஒவ்வொரு வேளையும் 1/2 மணிநேரம் க்ளீனிங் செய்வேன். வாரம் ஒரு முறை கபோட்டிலுள்ள பாத்திரங்களை வெளியிலெடுத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பது எனது பழக்கமாகவும், வழக்கமாகவும் உள்ளது

my kitchen
 

மேல் குறிப்பிட்ட பக்கத்துக்கு எதிரான பக்கம் இது. குக்கரை வைத்துக் கொள்ளவும், எளிதாக துப்புரவு செய்து கொள்ளவும் சுவர் உட்பட சுற்றிவர டைல் பதித்துள்ளோம். மேல் நோக்கி சிம்னி கட்டப்பட்டுள்ளது. இது பொரிக்கும் வாடை, புகை என்பன வெளியேற வசதியாக இருக்கிறது. மேலும் இதன் உட்புறம் எக்ஸ்ட்ரா மின் குமிழ் பொருத்தப்பட்டிருப்பதால் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. சமையல் பணிகள் முடிந்ததும், டிஷ் வாஷ் லிக்குவிட் நீரில் கலந்து சுத்தமாக துடைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். மேலும் இப்பகுதி சமைத்த உணவுகளை வாமரில் மாற்றி வைக்கவும் இலகுவாக இருக்கும்.

my kitchen
 

இது சமைத்த பாத்திரங்களையும், சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி துப்புரவு செய்யும் இடம். கழுவி சிங்க் பக்கத்தில் கூடையில் தண்ணீர் வடிய வைப்பேன். எப்போதும் இப்பகுதி காலியாகத்தான் இருக்கும். ஏனெனில் உடனுக்குடன் கழுவி காய்ந்ததும் கபோர்டில் அடுக்கி வைத்து விடுவேன். சிங்க் பகுதிக்குக் கீழ் லூவர்ஸ் வைத்து கப்போர்ட் கதவு செய்து அதற்குக் கீழ் உணவுக்கழிவுகளைப் போடும் மூடி போட்ட வாளி வைத்துள்ளேன். எப்போதும் என் சமையலில் கழிவுப் பொருளான எலுமிச்சைத் தோலை தூரப்போடுவதில்லை. கையிலுள்ள சமையல் கறைகளை நீக்கவும். சிங்க் பகுதியை லிக்குவிட் போட்டு கழுவி எலுமிச்சை தோலால் தேய்த்து விடுவேன். இதனால் நறுமணமும், பளிச் தோற்றமும் கிடைக்கும். வாரம் ஒருமுறை பேக்கிங் சோடாவை தூவி 5 நிமிடம் ஊற வைத்து தேய்த்து விடுவேன். இதனாலும் கறை போய் டைல் பளிச் தோற்றம் பெறும்.

my kitchen
 

இத்தொகுதி கேபினட் ட்ராயர். முதல் தொகுதியில் கரண்டி வகைகள், கத்தி வகைகள், முள்ளுக்கரண்டி என்பவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். 2ஆம் ட்ராயரில் கிச்சன் டவல், பேக்கிங் சீட், லஞ்ச் சீட் என்று ஒவ்வொரு கன்டய்னரில் போட்டு அடைத்து வைத்துள்ளேன். 3ஆம் ட்ராயர் மைக்ரோவேவ் ப்ரூப் கன்டெய்னர்ஸ் வைத்துள்ளேன்.

my kitchen
 

டைல் சமையல் கட்டில் இந்த இடத்தில் மைக்ரோவேவ் ஒவனைப் பாவிப்பேன். மேலும் இதனை விட எலக்ட்ரிக் அவனின் பாவனை தான் அதிகம். மிக்ஸி யூஸ் பண்ணுவது, எலக்ட்ரிக் கெட்ல், ரைஸ் குக்கர், பீட் பண்ணுவதற்கெல்லாம் இந்த இடத்தை யூஸ் பண்ணுவேன். வேலை முடிந்ததும் ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுவேன். இதனால் எறும்பு, ஈ போன்றவை மொய்ப்பதற்கு வாய்ப்பில்லை.

my kitchen
 

எனது கப்போட்ஸில் இவ்வாறு செரமிக்ஸ் பாத்திரங்களை செட், செட்டாக நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளேன். இவ்வாறு வைத்திருப்பது எடுத்து பாவிப்பதற்கும், திரும்பவும் ஒழுங்குப்படுத்தி வைக்கவும் இலகுவாக இருக்கிறது. இது தான் எனது சமையலறை.

my kitchen
 

Comments

உங்கள் சமையற் குறிப்புகள் பார்க்கும் போதே நினைத்திருக்கிறேன், சமையலறையை பளிச்சென்று வைத்திருப்பவர் நீங்கள் என்று.
இப்போது பார்க்கவும் கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

கட்டுரையை அமைத்துள்ள விதமும் அருமை.

‍- இமா க்றிஸ்

எனது சமயலறை புகைப்படங்களை தொகுத்து வழங்கிய அறுசுவை அட்மின் உட்பட குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

முதல் ஆளாக வந்து முத்தான கருத்துக்களை அள்ளித் தந்த இமா அவர்களுக்கு எனது நன்றிகள்.

ரொம்ப நீட்டா அடுக்கி அழகா வெச்சிருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிச்சன் நல்ல விசாலமாக அருமையாக இருக்கு,நல்ல பராமரிப்பு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வனி..தாமதித்த நன்றிக்கு மன்னிக்கவும். மிகவும் நன்றி.

ஆசியா உமர் உங்கள் அறிமுகமும்,வாழ்த்தும் கிடைத்ததில் மகிழ்ச்சி.மிகவும் நன்றி.

பரீதா வாழ்த்திய உங்களுக்கும் எனது நன்றிகள்.

மிகவும் அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்

ZajneeMufeetha

your kitchen very beuty & nice

Give respect and take respect

your kitchen is very nice and neat.

akka your kitchen very neat and clean pl.contact your ph.number