ஹனி பேக்டு பனானா

தேதி: May 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

வாழைப்பழம் - 2
தேன் - தேவைக்கு
எலுமிச்சை - பாதி
பொடித்த பட்டை - கால் தேக்கரண்டி
சீரியல்ஸ் -அரை கப்


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு வாழைப்பழத்தை மேலிருந்து இரண்டாக நறுக்கவும். அதில் தேனைத் தடவி அதன் மேல் பட்டையைத் தூவி விடவும்.
இந்த பழத்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து, மேலே சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
இதை அவனில் 325f சூட்டில் 8-10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சுவையான ஹனி பேக்டு பனானா தயார். சாக்லேட் சிப்ஸுடன் சாப்பிட குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பிடித்த வகை சாக்லேட்ஸ், மர்ஸ்மெல்லொஸ், சாக்கோ பட்டர், பீநட் பட்டர் இவற்றில் ஒன்றை வைத்து டாப்பிங் செய்து கொடுக்கலாம்.
மற்றொரு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி, தேனில் பிரட்டி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
அந்த பழத்தை சீரியல்ஸில் பிரட்டி எடுத்து, அவனில் 325 f சூட்டில் 12-15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான க்ரஞ்சி ஹனி பேக்டு பனானா தயார். ட்ரை ஃப்ரூட்ஸ் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படம் பார்ததும் நிங்க தான்னு கண்டு பிடிச்சுட்டனே ;) சூப்பரா இருக்கு கிட்ஸ் டிஷ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முகப்பில் பார்த்ததுமே வனின்னு நினைச்சேன்.நல்ல குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலை கடைசி படம் அசப்பில கே.எஃப்.சி சிக்கனாட்டம் இருக்கு:) சூப்பர்...
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கலா,

ஹனி பேக்டு பனானா, ஈசி குட்டீஸ்களுக்கேற்ற குறிப்பு! படங்கள் அத்தனையும் பளிச், பளிச்! :) நானும்கூட முகப்பில் பார்த்ததும் வனின்னு நினைச்சிட்டு வந்தேன். ட்ரை பண்ணிப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பு வெளியிட்ட அட்மின் டீமிற்கு நன்றி

Kalai

வனிக்கா குட்டீசுக்கு ரொம்ப பிடிக்கும். மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

இதுவும் பனானா சிக்கன்தான்.நன்றி அருள் :)

Kalai

சுஸ்ரீ செய்து பார்த்து சொல்லுங்க.மிக்க நன்றி சுஸ்ரீ.

Kalai

Superb